Pages

Monday 17 January, 2011

தமிழ் பொது தளங்கள் என்ற பெயரில் பல சட்டவிரோதங்கள்.........எச்சரிக்கை!

  

இன்று பல இளைஞர்கள் இம்மாதிரி தளங்களால் பாதிக்கப்படுகிறார்கள்...அவர்களிடமிருந்து திரட்டிய தகவல்களாக.....இம்மாதிரி தளங்களில் சிக்கி கொள்ளமால் சாதுர்யமாக விலகுவதற்கான சில வழிமுறைகள்....
பல பொது தளங்கள் தமிழ் -மன்றம்.... , முத்தமிழ்,,,, ஈகரை தமிழ்,,,,, யாழ் தமிழ்,,,,, அதிகாலை.... இன்னும் சில தமிழ் களஞ்சியங்களும்,,தமிழ்,என்ற அடைமொழியுடனும் தமிழர்களை இணைக்கும் உறவுப் பாலம் எனவும் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும், தமிழகத்தமிழர்களையும் அதன் தமிழ் இளைஞர்கள் மற்றும் இன்றைய இளையத் தலைமுறையினரையும் தவறான வழிகாட்டுதலுக்கு அழைத்து செல்லும் தளங்களாகவே இருக்கின்றன.  தமிழை எவ்வளவு கொச்சையாக எழுத கற்று கொடுக்க முடியுமோ? அந்த அளவுக்கு கற்று கொடுக்கவும் முயலுகின்றன....இளையத்தலைமுறையினருக்கு தீவிரவாத மனப்பான்மையை இளமையிலேயே கற்று கொடுத்து விடுகின்றன......

ஏற்கனவே இளைய சமுதாயத்தினர் உணர்ச்சிவயப்படக்கூடியவர்கள் அதில் மேலும் எண்ணையை ஊற்றுவது போல் இந்த வன்முறை செயல்களுக்கு தூண்டி விடிகின்றன. இந்த தளங்களின் செய்ல்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே தெரிவிக்கிறது. இவைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தினை ஆதரித்து எழுதுகிறார்கள். அந்த அமைப்பிலிருந்து கொண்டு எழுதுகின்றனர்.

இந்த மாதிரி தளங்கள் எல்லாம் எந்த நாட்டு சட்டதிட்டத்திற்கும் கட்டுபடுவதே இல்லை...கட்டுபடமாட்டேன் என்பதற்கு ஒரு பொது தளமா?  
மக்களை வன்முறைப் பாதைக்கு அழைத்து செல்லும். இந்த தளங்களில் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை..நல்ல நோக்கமும் இல்லை....மனிதனுக்கு  முதன்மையாக இருக்கவேண்டியவை மனித நேயம் அதை நேருக்கு நேராக எழுத்தின் மூலம் பங்களிக்கும் போதே பின்பற்றுவதுமில்லை...இவர்கள் என்ன பெரிய விஷயத்தை அலசிவிடப்போகிறார்கள்...? 

சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பு மிக குறைவவாக உள்ளது என்ற எண்ணத்தை ஆரம்பதிதிலேயே சுட்டிக்காட்டிவிடுகிறது. இதெல்லாம் சில மேட்டுக்குடித்தன மனப்பான்மை கொண்டவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து அனைத்து விஷயங்களையும் தீர்க்கமாக கணிப்பதாக நினைத்து ஒருவர் கழிப்பறை சென்றதலிருந்து சிற்றுண்டி சாப்பிட்டது வரை எழுதுவார்கள். அதாவது டீக்கடையில் பேசிக்கொள்ளும்  அரசியல் போல...திண்ணையில் பேசிக்கொள்ளும் அரசியல் போல.....இன்னும் சில பேர் செய்யும் தொழில், (பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர்...) புகைப்படம், தேசியக்கொடி எல்லாம் போட்டுக் கொண்டு எழுதுவார்கள்....அரசு ஊழியர் (பாரத ஸ்டேட் வங்கி மேலாளர்) என்று கூட போட்டுக்கொண்டு மதத்தீவிரவாதத்தை வலியுறுத்தி எழுதுகின்றனர்.. இவர்களே! இப்படி என்றால் இவர்களிடம் பயிலும் மாணவர்கள் எந்த லடசணத்தில் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம், இவர்கள் பள்ளியில் தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கிறார்களா? அல்லது ஒழுங்கீனத்தை கற்றுத் தந்து மாணவர்களை கெடுக்கிறார்களா? அத்தனையும் மிகப்பெரிய குற்றம். அரசு ஊழியர்கள் இணையத்தில் பங்குபெறவேக் கூடாது, அவர் ஒரு பொது ஊழியர். இந்த எழவே தெரியவில்லை. (அவ்வளவு தைரியசாலியாம்) இதையெல்லாம் கூட அப்படியே ஸ்கிரின் ஷாட் எடுத்து அரசுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கலாம். இவர்களெல்லாம் எந்தளவில் நேர்மையாக தொழிலை கவனிக்கிறார்கள் நாட்டுக்கு எவ்வளுவு தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதற்கு இதுவே அப்பட்டமான சாட்சி. தமிழை காப்பாற்றும் அவதாரமாகவே காட்டிக்கொண்டு சாக்கடையாக எழுதும் எழுத்தை அவர்கள் குடும்பமே விரும்புமோ என்னவோ? 

இப்படி எல்லாம் எழுதுவதற்கு எதற்காக? இங்கு மக்கள் பார்க்கவேண்டும் ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பு வரவேண்டும்....கலவரம் வரவேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன நல்ல விஷயம் இருக்கிறது. 

இணையத்தில் வெளியிடுவது சுவரொட்டி, துண்டு பிரசுரம் போன்றது...அது வெட்ட வெளி... அவதூறாக இந்திய மக்களை பற்றியும், அங்கு இருக்கும் அரசியல் தலைவர்களை பற்றியும், அவர் சாகவேண்டும், இவர் சாக வேண்டும், ஏன் உயிரோடு இருக்கிறாய்? நீ ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறாய்...உயிர் ஒரு கேடா...? என்றெல்லாம் எழுதி சுவரில் அந்த நாட்டு சுவர்களில் எல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினால்..அந்தந்த கட்சியில் இருக்கும் பல இலட்சம் தீவிர தொண்டர்கள் சும்மா இருப்பார்களா?...இல்லை காவல் துறை தான் சும்மா நின்று கை கட்டி வேடிக்கை பார்க்குமா? நீதித்துறைதான் சும்மா விட்டு விடுமா...? ஏப்பா இன்னும் கொஞ்சம் நல்லா எழுது? நாடு நல்லா இருக்கும் என்று தட்டிக்கொடுக்குமா?

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கவலைப்படும் பெற்றோர்கள் இதையெல்லாம் பார்த்தால் அவர்களுக்கே மிகப்பெரிய கலவரமும், கலக்கமும் தான் ஏற்படுகிறது. மகளே, மகனே நீ எந்த இடத்திலும் மாட்டிக்கொள்ளாதே நாடு இருக்கும் நிலைமையை பார்த்தால் மிகப்பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது. பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை, பாதுகாப்பில்லை நாமெல்லாம் எம்மாத்திரம்? என்ற அச்சம் தான் தோன்றுமே தவிர? வேறெதுவுமே தோன்றாது. பணம் படைத்தவர்களுக்கு கவலை இல்லை...அவர்களுக்குத்தான் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாத அளவிற்கு இருக்கிறதே....? அது தான் இந்த தகாத செயலையும் செய்து கொண்டிருக்கிறது. எந்த பெற்றோராவது இப்படி எழுதுவதை ஊக்குவிப்பார்களா?

இவர்களிடம் துளிகூட மனிதநேயமே இல்லாத பொழுது பிற நாட்டு அரசியலையும்  அங்கே மீறப்படும் மனிதவுரிமை மீறலைப் பற்றியும் இவர்கள் வாய்கிழிய கத்துவார்கள்.  இதை நிர்வகிப்பவர்களும் மிக மிகச்சிறியவர்கள், சமூதாயத்தோடு ஒன்றியவர்களும் இல்லை, என்பதாலும் ஒரு தீவிரக்கொள்கைக்கு ஆட்பட்டிருப்பதாலும் அந்த கருத்து எவ்வளவு வன்மையாக இருப்பினும் அதை அவர்கள் அறியாமலேயை அதன் பக்கம் சாயும் மனப்போக்கு கொண்டவர்களாகவும் அதனால் சமூதாயம் எக்கேடு கெட்டால் என்ன ? என்ற  மனப்போக்கும் இயற்கையாகவே வந்து விடுகிறது. அவர்களும் அப்படி எழுதுவதை அந்த எழுத்தை அவர்கள் எழுதாவிட்டாலும்  (இன்னொரு பெயரில் நுழைந்து கொச்சையாக எழுதுவார்கள்....தளமே அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது....இதெல்லாம் சர்வசாதாரணம்) பிறர் எழுதுவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மைக்கு வந்து விடுகிறார்கள். அதாவது நம்மாள் எழுதியிருக்கிறர்...என்ற சார்புக்கொள்கையுடன் அணுகுகின்றனர்...அநாகரிகமாக யார் எழுதினால் என்ன? அதில் என்ன? நம்மாள், சித்தாள், பெரியாள்.......கொத்தனார்......

இந்த மாதிரி எழுத்துக்களை .எதிர்ப்பவர்களுக்கு  தண்டனை கூட வைத்திருக்கிறார்கள்....இது என்ன? நீதிமன்றமா? அந்த ஐயாக்கள் என்ன நீதிபதிகளா? இந்த அதிகாரங்கள் எல்லாம் எவர்? இவர்களுக்கு வழங்கினார்களோ  தெரியவில்லை...?  (இந்த விஷயங்களே இவர்களுக்கு தெரியவில்லை)..அதற்கு இவர்கள் தகுதியானவர்கள் தானா? என்பதும் தெரியவில்லை? இவற்றை எல்லாம் உணராமல் எப்படி...சர்வாதிகார மனப்போக்குடன் எப்படி இந்த தளங்களை இணைப்பு பாலமாக கட்டி மக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடமுடியும் என்பதும் தெரியவில்லை.  அப்புறம் எப்படி ஊர்ல உள்ள மனிதவுரிமை மீறல்களை எல்லாம் கேள்வி கேட்க முடியும்...?

இதில் தெரியாமல் பங்கு பெறுபவர்களையும் இவர்களின் தீவிரவாத கொள்கைக்கு ஆதரவாக மாற்ற எண்ணம் கொண்டுள்ளனர்.

இதில் பங்குபெறுபவர்களின் மின்னஞ்சல் எல்லாம் அவர்களால் பிறருக்கு களவுத்தனமாக திருடித் தெரிவிக்கப்பட்டு...அந்த குழுவில் இடம்பெற்றிருப்பவர்களே ஒன்றிணைந்து அந்த தனிநபருக்கு தொல்லைகளுடன் கூடிய தொலைபேசித் தாக்குதலையும், மிரட்டல்களையும் கொடுக்கத் தயாராகிவிடுவார்கள்.

இம்மாதிரி தளங்களில்  தமிழக மக்கள் பங்கு பெறாமல் இருப்பதே நல்லது. அப்படியும் பங்கு பெற்றால் எச்சரிக்கையுடன் உள்நுழைந்து எந்த தகவலையும் பெயர் உட்பட எதையும் வெளியிடாமல் இருப்பது மிக மிக நல்லது. தொலைபேசி எண்கள் மற்றும் இதரத் தகவல்களை இவர்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் திருட முயற்சிப்பதாக தெரிகிறது. தனிமடல் மூலமும் பெற்று விடுவார்கள்.

இவர்களுக்குள் கூட்டிணைவு இருப்பதனையும் இந்த தளங்களை நிர்வகிப்பவர்களே பல இடங்களில் வெளிப்படுத்திக்கொள்வார்கள்...அதை உண்ணிப்பாக கவனித்து அந்த தகவல்களை அப்படியே சேமித்து வைத்தும், ஸ்கிரின் ஷாட் எடுத்தும் இந்திய அரசுக்கு தெரிவிக்கலாம்.


நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஒரு நாட்டின் அதிபரை நாகரிகமாக விளிப்பது தான் அறிவுடமை...அதற்கு பின் விமர்சனங்களை நாகரிகமாக வைக்கலாம்.....அந்தளவுக்கு பொறுமையில்லை என்றால் எதற்கு எழுதவேண்டும்....? அதற்கு எதற்கு ஒரு பொது தளம்...என்ற இணைப்பு...இதையெல்லாம்  கற்று கொடுக்கவா தளங்கள்...

.இவைகள் மக்களை சீரழிக்கும் அமைப்புகள். இளைஞர்களை பாழாக்கும் தளங்கள் இதை இந்திய அளவில் இவைகள் தணிக்கை செய்யப்பட்டு தடைசெய்யலாம். இவைகள் அந்த தள தனிநபர்களின், குழுக்களின் சார்புக்கொள்கைகளால், அந்த கொள்கையை வலியுறுத்தி இயங்குகின்றன. ஆகையால் இதையெல்லாம் முன்பே நாம் அறிந்துகொள்ள முடியாது. இந்த மாதிரி தளங்களை பலநாடுகள் தடைசெய்துள்ளன.

செருப்பால் அடிப்பேன்....துடைப்பக்கட்டையால் அடிப்பேன், முதலமைச்சர் நாயே!, பிரதமர் நாயே! அதிபர் நாயே! எம்.எல்.ஏ, எம்.பி நாய்களே, நரிகளே! தமிழ்நாட்டு நாய்களே! இந்திய நாய்களே! என்று  ஒருவருக்கு,  ஒரு தனிப்பட்ட குழுவிற்க்கு, தீவிரவாத இயக்கங்களுக்கு பிடிக்காதவரை, அரசியல் தலைவர்களை, நாட்டின் பிரதமர்களை, அமைச்சர்களை, மதிக்கத்தக்க எவரொருவரைப் பற்றியும் தரங்கெட்ட முறையில் எழுதினால் எதிரே இருப்பவர் அவருக்கு பிடிக்காத ஒருவரை பற்றிஅந்த தீவிரவாத தலைவரை பற்றி இதே மாதிரி ''செருப்பால் அடிப்பேன்'' என்று எழுதப்போகிறார்.....அப்படி எழுத தமிழகத்தை சார்ந்த சாமான்யர்கள் யாரும் பெரும்பாலும் முயற்சிப்பதில்லை...ஆனால் இதெல்லாம் சரி என்ற தவறான எண்ணத்திற்கு .அவர்களும், இளைய சமுதாயத்தினரும் மாறுவதற்கு நிச்சயம் இது வழிவகுக்குகிறது. 

இதில் எல்லாம் என்ன பெரிய கருத்து எழுதிவிட்டதாக மார் தட்டிக்கொள்ள முடியும்? எல்லோருக்கும் தான் பின்பற்றாளர்கள் இருப்பார்கள்...இந்த கொள்கையை, தலைவரை பின்பற்றுவர்கள் மட்டும் உள்ளே நுழைய வேண்டும் என்று போர்டா எழுதிப்போடப்பட்டிருக்கிறது. அல்லது செருப்பால் அடிக்கும் தளம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா? அப்படியிருந்தால் எவராவது அல்லது  பெண்கள்  உள்நுழைவார்களா? இதெல்லாம் தெரியாமல் நுழைந்துவிடுவது தான். அப்படியே தெரியாமல் உழைப்பையும் கொட்டிவிடுவார்கள்...சில தளங்கள் தமிழ் என்ற பெயரிலும் இன்னும் சில ஆபாச தளங்களுடன்  (இரண்டும் ஒரே ஐ.பி முகவரியில் இருக்கும்...காமலோகம்-தமிழ்மன்றம்..... ) தொடர்பு வைத்திருக்கிறது.

(இதையெல்லாம் அந்த தளத்தின் URL முகவரியைக்கொடுத்து இதன் ஐ.பி முகவரி எண்களை அறிந்து கொள்ளலாம்........எங்கேயிருந்து இயங்குகிறது எனபதனையும் தெரிந்து கொள்ளலாம்.. இங்கு சென்று அந்த தளத்தின் (யு ஆர் எல்) முகவரிகளை கொடுத்து...அந்த தளத்தின் ஐ.பி முகவரிகளை எண்களை தெரிந்து வைத்து கொள்ளலாம்...http://www.ip-adress.com/whois/)

இப்படியெல்லாம் எழுதுவதற்கு என்று ஒரு பொது தளம்...தேவையா? ஒரு அரசு அது சார்ந்த சட்டத்திட்டங்களை, இறையாண்மைகளை மதித்து நடக்காத தளம் என்று முன்பே பொதுவில் எச்சரிக்கை குறியீட்டுடன் தெரிவித்து விட்டால் யாரும் இம்மாதிரி தளங்களை நெருங்க மாட்டார்கள்.......இதை அரசும் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும். இம்மாதிரி தளங்களை முற்றிலும் தடை செய்யவேண்டும். இந்த மாதிரி தளங்களால் தீவிரவாதங்கள் தான் வளருகிறது. நாட்டின்  பாதுகாப்பு......?

                                                       
இதில் நிர்வாக அமைப்பை சார்ந்தவர்கள் பலரும் பல தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். ஆகையால் இதில் அவர்களுக்கு வழிகாட்ட முடியாது. இதில பங்கு பெறாமல் நாம் தவிர்த்து கொள்ளலாம், எந்த அறிஞர் பெருமக்களும், ஆசிரியர் பெருமக்களும், முக்கியமாக பெண்கள் இந்த தமிழ் என்ற அடைமொழியை நம்பிவிடாமல் இருப்பதே நல்லது. இம்மாதிரி இணையத் தளத்தில் பங்கு பெறாமல் இருப்பதே நல்லது.

இப்போது எல்லோருக்கும் இது ஒரு சாக்காக போய்விட்டது ஈழம்...ஈழம்...ஈழம்....இதை கையிலெடுத்தால் பச்சை பச்சையாக எழுதலாம். அப்படி எழுதினால் உடனே ஈழத்தை தூக்கி கையில் கொடுத்து விடுவார்கள் என்ற மனப்பான்மையில் எழுதும் இம்மாதிரி தளங்களை என்னவென்று சொல்ல.....மாற்றானை மண்டியிடவைக்கும் எழுத்துக்களாலேயே ஒருவரை கவரமுடியும், ஒரு சமூகத்தை மாற்ற முடியும். அருவருக்கத்தக்க எழுத்துக்களாலும், அய்ய இப்படியுமா? என்று எழுதும் இம்மாதிரி தளங்கள் ''தமிழ்''  ''தமிழர்கள் '' என்ற போர்வையில் தமிழர்களை தவறான பாதையில் திசை திருப்ப முயல்வது வெட்கக்கேடானது.

இந்த தளங்கள்  தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் பணியினை செய்கிறதா? அல்லது இப்படியெல்லாம் செய்தால் கண்டிப்பாக ஈழம் கிடைத்துவிடும் என்ற கனவா? எங்கே எத்தனை பேர் இந்த எழுத்துக்களால் கவரப்பட்டு பின்னாடியே வந்து விட்டார்கள்.  எழுத்தே நம்மை பார்த்து காரி உமிழும் அளவுக்கு எழுதும் அநாகரிக போக்கை இந்த தளங்கள் கைவாடாது.

இப்படிப்பட்ட பொது தளங்களில் பங்கெடுக்காமல் இருப்பதே நல்லது...உழைப்பையும் வீணடிக்காமல் சொந்த வலைத்தளங்களிலேயே நாகரிகமாக எழுதலாம்....இந்தமாதிரி பொது தளங்களினால் பாதிக்கப்பட்டால், கருத்துக்கள் முறையற்ற வகையில், சட்டத்திற்கு விரோதமாக வெளியிட்டால் அந்தந்த நாட்டு இணையக் குற்றப்பிரிவு அல்லது இந்திய சைபர் குற்றப்பிரிவுக்கு அந்த தளங்களை தடை செய்ய புகார் அளிக்கவும் தயங்கக்கூடாது. 

ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒன்று சேர்த்து  நடத்தினாலே அது பொதுவாகிவிடுகிறது....ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது....அதற்கான கட்டுப்பாடுகளும் பொதுவானதாக எவரொருவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படாததாக அனைத்து நாட்டினருக்கும் உகந்ததாகத்தான் இருக்கவேண்டும் . அப்படியில்லாதவைகளை தைரியமாக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லலாம். வலைப்பதிவிலேயே நாகரிகமாக பலர் எழுதும்பொழுது இந்த பொது தளங்கள் எதற்கு? என்றே தெரியவில்லை.

இப்படியே விட்டதினால், இது எல்லைமீறிப்போய் இப்போது என்ன ஆகிவிட்டது என்றால் அவர்களுக்கு எதிராக யாராவது  கருத்து தெரிவித்து விட்டால் பொறுக்க மாட்டாமல் மின்னஞ்சல்களின் மூலம்  செல்பேசியின்  எண்ணை எப்படியாவது கண்டுபிடித்து நேரிடையாக கொலை மிரட்டல் செய்வது எதிர்ப்பு தெரிவித்தவரின் குடும்ப பெண்களிடம்  கொலை மிரட்டல் விடுவது என்பது  தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர். இதனால் பயந்த பலர் மனவுளைச்சலால் தற்கொலையும் புரிந்து கொள்வதாக செயதிகள் வருகின்றன. இதை இந்தியத் தலைமை நீதிபதியும் இதுபற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாதிரி தமிழ் என்ற அடைமொழியுடன்  இயங்கும் பொதுத்தளமாக இயங்கும் தீவிரவாத தளங்களை இளையத்தலை முறையினர் நெருங்காமல் இருந்தாலே அதிக பாதுகாப்பு. இம்மாதிரி தளங்களை அரசிடம் முறையிட்டு தடை செய்ய மக்களும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். இதை முறையிடத் தயங்க கூடாது. இதனால் இனிவரும் நபர்களும் சந்ததியினரும் எச்சரிக்கையுடன் இருக்க வழிவகுக்கும். யார் கண்டது உறவுகளில் பலபேர் இதுபோல் இணையத்தளங்களில் மாட்டிக்கொண்டு அவதிப்படலாம்.

இதை நிர்வகிப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டினர், (தமிழகத்தில் இருந்து ஒருவரும் இது மாதிரி இணையத்தளங்களை துவங்கவில்லை போலும், துவங்கினால் இது மாதிரி தாக்கமுடியாது என்ற காரணமும் இருக்கலாம்) இதை வெளிநாட்டினர் அங்கிருந்து கொண்டு  நிர்வகிப்பதால் எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என்ற மனப்பான்மையுடனும்...நம்மை யார்? கண்டுபிடிக்க போகிறார்கள் என்ற நினைப்புடனே இதை அவர்கள் அவர்களின் சுயபாதுகாப்புடன், சுயநலத்துடன் இயக்க ஆரம்பித்துள்ளனர்.

சில விதிகள் என்று ஒப்புக்குச்சப்பாக அந்த தளங்களில் வைத்திருப்பது  வெறும் கண்துடைப்புக்காத் அவர்களுக்கு சாதாகமாக வைக்கப்பட்டுரக்கும். அந்த விதிகளை அந்த தளத்தை நிர்வகிப்பவர்களே  பின்பற்றுவதில்லை. அவர்களும் பக்கசார்புடன் எழுதுபவர்கள் தானே. அந்த எண்ணத்தில் துவக்கப்பட்டது தான் இந்த தளங்கள்...ஏதாவது நடுநிலை அமைப்பா? இவர்களை தேர்ந்தெடுத்து அமர்த்துகிறது. அது மாதிரி எதுவும் இல்லை....இவர்கள் பார்வையில் எது  எது எல்லாம் சரி எனப்படுகிறதோஅதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவார்கள். 

உழைப்பை திருட அவர்கள்  சில சாதுர்யங்களை வேண்டுமானால் பயன்படுத்தலாம். (முகவரிகளை அறிந்து கொள்ள தனிமடல் என்று தொடர்பு என்று ஆசை வார்த்தை காட்டுவார்கள்...வாயார புகழ்வார்கள்..எதையும் நம்பிவிடாமல்....)ஆகையால் அதிக எச்சரிக்கை மனப்பான்மையுடனே இந்த தளங்களை அணுகவேண்டும்.

அதாவது அவர்கள் பாதுகாப்பு ஏற்கனவே உறுதி (வெளிநாடு) செய்யப்பட்டிருக்கிறது  (அப்படி ஒரு நினைப்புடன்). இதில் தெரியாமல் அப்பாவித்தனமாக பங்குப் பெறுபவர்களின் பாதுகாப்பு அந்தந்த நிலப்பரப்பையும், அதன் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப இருப்பதால் தெரியாமல் பங்கு பெறுபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. 

இந்த அறியாமையை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சகட்டுமேனிக்கு எவரொருவரையும் (அவர்களுக்கு பிடிக்காதவர்களை) வெளுத்து வாங்குகின்றனர். அதாவது இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள், இந்தியாவின் பிரதமர், குடியரசுத்தலைவர் என அனைத்து நாட்டின், இந்திய நாட்டின் மதிப்புமிக்கவர்களை தாக்குதல் எண்ணத்துடன் கொலைகாரர்கள் என பெயரிட்டு எழுதுகின்றனர். தமிழக மக்களை கொச்சைப்படுத்தியும் எழுதுவது வாடிக்கையாகி விட்டது.

இதற்கு இப்படி வைத்துக்கொள்ளலாம் பிடிக்காதவர்களை தாக்கும் பொது மன்றம், தமிழ் தளம்...வருகிறவர்கள் எல்லாம் வந்து ஆளாளுக்கு எவ்வளவு முடியுமோ? அவ்வளவு பச்சை பச்சையாக தமிழில் எழுதினால் போதுமானது...அதாவது ஆபாசத்தளங்கள் போல.....அப்படி எழுதினால் குடும்பம் சீறும் சிறப்புமாக இருக்கும். அனைவரும் நம்மளை தெய்வமாக மதித்து பின்னாடியே வந்து விடுவார்கள் என்பது எல்லாம் என்ன மாதிரியான மனப்பான்மை....எனபது தெரியவில்லை....

இம்மாதிரி தீவிரவாதிகளின் அமைப்பாக செயல்படும் பொது தளங்களை உடனே கண்டறிந்து அரசும் உடனடியாக தடைசெய்யவேண்டும்.  இதில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள்....அனைவரும் அப்பாவி இளைஞர்கள்....இந்த பொது தமிழ் தளங்களின் நிர்வாகிகளும் இந்த தீவிரவாத அமைப்பில் உள்ளவர்களே....இதனால் தவறுதலான வழிகாட்டுதலுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் எனபது நிதர்சனம். இதுமாதிரி எழுதும் தளங்களை கண்டறிந்தால் உடனடியாக அரசிடம் புகார் அளியுங்கள். அதை சட்டம் வலியுறுத்துகிறது.

மாட்டிக்கொள்ளாதீர்கள்...சட்டமே மக்களின் பாதுகாப்பு.... நாடு வகுத்துள்ள சட்டதிட்டத்தின்படி எழுதினாலே போதுமானது. 
(இம்மாதிரி தள்ங்கள் அது மாதிரி ஒழுக்கமாக எழுத விடாது.(இதுமாதிரி சட்டவிரோதமாக செயல்படும் பொது தமிழ் தளங்களை அரசும் கண்காணித்து கொண்டுதான் வருகிறது...சட்டவிரோதம் என்று தெரிந்தபிறகு அதில் ஈடுபடாமல் தவிர்ப்பது  தான் நாட்டின் பாதுகாப்பிற்கும், நமது பாதுகாப்பிற்கும் நல்லது...ஏதாவது அசாம்பாவிதம் என்றால் அனைவருமே விசாரணைக்குள் வருவது நிச்சயம்...அது வெளியில் தெரியாது)

(இந்த தளங்களின் பட்டியலை அவ்வப்பொழுது பல தளங்களில் வெளியிடப்படுகிறது...இங்கும் .......தகவல் கிடைத்தவுடன்...)

இந்திய அளவில் புகார் அளிக்கும்....மின்னஞ்சல் முகவரிகள்.....இந்திய சைபர் புலனாய்வுப் பிரிவு....

(இவ்வளவு கஷடப்படவேண்டுமா? அதற்கு வலைத்தளத்திலேயே...நமது முழு சுதந்திரத்துடன், அளவுடன், நாகரிகமாக எழுதலாம்.) இதுவும் சரியான வழிமுறைதான்.... அங்கு (பொது தளங்களில்) பங்குபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே...(எப்படிபட்டவர்கள் எந்நெந்த நாட்டில் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளவேண்டாமா? என்பவர்கள்) இங்கும் வலைப்பதிவில் ஒரு நகல் எழுதி வைத்துக்கொள்ளலாம் அந்த தளம் சரியான சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கவில்லை என்றால் வலைப்பதிவில் பதிவிட்டுக்கொள்ளலாம்.)
...........தகவலுக்காக...