Pages

Saturday, 12 December 2009

காஷ்மீர் பற்றித் தெரியுமா?







காஷ் மீர் சட்டப்படி இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேற மாநில வாலிபனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளுக்கு சொத்துரிமையும் கிடையாது வாக்குரிமையும் கிடையாது.

இப்படியொரு சட்டமா?

ஆம், இந்த சட்டத்துக்கு பேரே 370 -வது பிரிவு........!

இந்த சட்டப்படி இன்னும் பல விசித்திரங்கள் அங்கே இருக்கு.....

ஒருத்தர் இந்த இந்தியாவில் கேரளத்தில் பிறந்தாலும் சரி. ஆந்திரா, தமிழ்நாடு எங்கே பிறந்தாலும் சரி அவன் ஒரு இந்திய குடிமகன். ஆனால் ஒருத்தர் காஷ்மீரில் பிறந்தால் மட்டும் இரண்டு குடியுரிமை சட்டங்கள் இதுக்கு டுயல் சிட்டிசன்சிப் (Duel Citizenship) ன்னு பெயர்.



அம்பேத்கார் வடிவமைத்த அரசியலைமைப்பு சட்டம் ஒன்றே ஒன்று ஒன்றுதான் இந்தியா முழுமைக்கும். காஷ்மீர் உட்பட. இருந்தாலும் காஷ்மீருக்காக கூடுதலாக இன்னோரு சிறப்பு சட்டமும் அமலில் இருக்கின்றது. அங்கே இந்த இரண்டு சட்டங்களும் செல்லுபடி ஆகும்.

இதுமட்டுமா இன்னும் இருக்கு

இந்தியா முழுமைக்கும் ஒரே தேசியக் கொடிதான், ஆனா, காஷமீரில் மட்டும் இரண்டு கொடி. எல்லா அரசாங்க க்ட்டடங்களிலும் தேசியக் கொடியும் பறக்கும், காஷ்மீர் மாநிலத்துக்கே உரித்தான இன்னொரு கொடியும் பறக்கும்.

என்ன இப்படி ஒரு கேலிக்கூத்தா....?

கேலிக்கூத்து இன்னும் இருக்கின்றது.....

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்கும் எந்த பிரச்சினையா இருந்தாலும் நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால் அது செல்லுபடியாகனும். ஆனா காஷ்மீரில் மட்டும் அந்த சட்டம் செல்லுபடியாகாது. அந்த சட்டம் சரியா, தப்பான்னு அலசிப்பார்க்க பார்க்க ஒரு குழு இருக்கும் அந்த குழு அந்த மாநிலத்தவரால் நியமிக்க பட்ட குழு. அந்த குழு சரி என்றால் சரி இல்லையென்றால் அந்த சட்டம் குப்பை கூடைக்குத்தான்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம கொண்டு வந்து அதை ஏற்றுகொள்ளமால் காஷ்மீர் தள்ளுபடி செய்திருக்கா....?


இதற்கு பதில் ...ஒன்றல்ல நிறையவே இருக்கு...

உதாரணத்துக்கு மற்ற மாநிலங்களில் உள்ள சொத்து வரி, கொடை வரி (Gift tax), நில உச்சவரம்பு தடை சட்டம் (Urban land ceiling tax) இதெல்லாம் அங்கு கிடையாது.

இதை பார்க்கும் பொழுது அங்கு குடிபோகவேண்டும் என்று தோன்றும்...

போகலாம் ஆனால் அந்நிய மாநிலத்திலிருந்து காஷ்மீருக்குள் குடியேறுபவர்கள் எவ்வளவு காலம் ஆனாலும் ஒரு அடி நிலம் கூட வாங்க முடியாது. சுதந்திரமாக குடியிருக்கலாம் அவ்வளவுதான்.

இதை எதிர்த்து மத்திய அரசு மாநில அரசை கண்டிக்க கூடாதா...? என்ற குரல் எழும்புவது தெரிகின்றது...

இதற்கு முன் காஷ்மீரைப் பற்றி தெரிஞ்சுக்க வேண்டும்....

இந்தியா 1947 இல் சுதந்திரமடைந்ததும் பாகிஸ்தான் தனியாகப் பிரிந்தது. அப்பொது இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் இருந்த காஷ்மீர் ஒரு மன்னர்க்கு (ஹர்சிந்த்) உட்பட்ட சின்ன நாடாக இருந்தது. ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டுப் போகும் பொழுது அந்த மன்னரிடம் இந்தியா பாகிஸ்தான் இந்த இரண்டு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். ஹர்சிந்த் மன்னர் எந்த நாட்டுடன் இணைவது என்பதை தன் குடும்பத்தினருடன் ஆலோசித்து பின் எந்த நாட்டுடனும் இணையாமல் தனியாக இருப்போம் என்று தனிநாடாகவே இருந்து விட்டுப் போகட்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதன்படியே ஆட்சியும் நடத்தினார். இந்தியா அதற்கு ஒப்பு கொண்டு விலகிவிட பாகிஸ்தான், மன்னர் மேல் கோபம் கொண்டு போர் தொடுத்தது. பாகிஸ்தானின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் மன்னர் இந்தியாவின் உதவியை நாட இந்தியா உதவ முன்வந்தது. ராணுவத்தையும் அனுப்பி வைத்தது.

இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தை ஒடவைத்து விட்டு மறுபடியும் பாகிஸ்தான் வந்துவிடாமல் இருக்க காஷ்மீரிலேயே தங்க ஆரம்பித்தது. இப்படி வெறுமனே இந்திய ராணுவம் காஷ்மீரில் தங்குவதை விட சட்டரீதியாக அங்கேயே இருப்பது நல்லது என்ற எண்ணத்தில் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது. இந்த இணைப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஷேக் அப்துல்லா,
(ஆம் இன்றைய மத்திய அமைச்சரான பரூக் அப்துல்லாவின் அப்பா. உமர் அப்துல்லாவின் தாத்தா காஷ்மீர் முதல்வர்).

1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இணைப்பு விழா நடந்தது. காஷ்மீர் இந்தியாவுக்குள் இணைந்த சில காலத்துக்குள் அங்கு மன்னர் ஆட்சி ஒழக்கப்பட்டு ஷேக்அப்துல்லா அங்கு பிரதமராக்கப்பட்டார். அப்போது இந்தியாவில் இருந்த சட்டத்திருத்தங்கள் காஷ்மீர் ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களுக்கு பிடிக்காததால் சில சிறப்பு அதிகாரங்கள் காஷமீருக்கு வழங்கப்பட்டன.

அதில் ஒன்று மத்திய அரசு எந்த சட்டத்தை இயற்றினாலும் அதை உடனடியாக காஷ்மீர் மாநிலத்தில் அமல் படுத்த முடியாது.


இரண்டு மக்களுக்கு சிறப்பு (விசேஷக்) குடியுரிமை.


மூன்று; காஷ்மீர் மாநிலத்துக்கு தனிக்கொடி.
இப்படி சின்ன சின்ன கோரிக்கைகளைப் பட்டியல்  போட்டு அவற்றை பாதுகாக்கும் வகையில் யாரும் எந்த காலத்துக்கும் மாற்ற முடியாதபடி சட்டமாக்கி அதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 370 வது பிரிவில் சேர்த்துவிட்டார்கள்.

பாகிஸ்தானுக்கு அப்பொழுது இருந்தே காஷ்மீர் மக்கள்  மீதும், இந்தியா மீதும் எரிச்சல்.காஷ்மீரின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பத்றகாக தீவிரவாதிகளை உருவாக்கி அனுப்பி வருகின்றது. காஷ்மீரின் சில பகுதிகள் தனக்கு சொந்தம் என் பொய்வாதம் செய்கின்றது.

இதுதான் காஷ்மீர் பிரச்சினையா?

இதற்கு பதில் இன்னும் நிறையவே இருக்கு அது எல்லாமே அரசியல் ரீதியானவை. காஷ்மீர் மக்களைத் தன்பக்கம் இழுக்க பாகிஸ்தான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இந்தியா அதற்குப் பதிலடி கொடுத்து  தடுத்துக் கொண்டு வருகின்றது.

காஷ்மீர் மக்கள் இந்தியா பக்கம் தானே?

இத்றகானப் பதில் இந்த நிமிடம் வரை இந்தியா பக்கம்தான்.....

காஷ்மீர் மக்கள மனம் மாறி பாகிஸ்தான் பக்கம் சாய்ந்துவிடாமல் இருக்க இந்தியா செய்திருக்கின்ற ஒரு முக்கியமான காரியம் என்ன தெரியுமா...?

அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், தானியவகைகள்..... என அனைத்து மளிகைப் பொருட்களும்,
1947 க்கு முந்தி என்ன விலைக்கு  விற்கப்பட்டதோ அதே விலைக்குதான் இப்பொழுதும் விற்கப்படுகின்றது. இது காஷமீரில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் பின்பற்ற படுகின்ற விலை.

அநியாம் என்று.... சொல்லத் துடிக்கின்றது.....

வேறு வழியில்லைல இதனால் மத்திய அரசுக்கு  வருடம் ஒன்றுக்கு 1000 கோடி ருபாய் நஷ்டம். (நஷ்ட கண்க்கு1998 நிலவரப்படி) எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் சரி காஷ்மீரை நாம் இழந்து விடக்கூடாதுங்கிறது இந்தியாவோட கொள்கை. காஷ்மீர் பிரச்சினையில் எந்தவொரு மூன்றாவது நாடும் தலையிடக்கூடாது என்பது இந்தியாவின் நியாயமான பிடிவாதம்...."

இப்பொழுது காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் உமர் அப்துல்லா மத்திய கேபினட் அமைச்சர் பரூக் அப்துல்லாவின் மகன்.

நன்றி
நம்பி
இடுகைக்கான ஆதாரங்கள் வழங்கியவை தேவநேய பாவணர் நூலகம்.



1 comment:

Unknown said...

Great news...Please keep it up