Pages

Monday, 7 December 2009

பாலைவனக் கப்பல்.....







அரபு நாடுகளில் ஒட்டகக் கறியை எப்படி வாங்குகிறார்கள் தெரியுமா?

அங்கே இரண்டு வகையான ஒட்டகம். பாலைவனத்னதக் கடக்கிறதுக்காக சில ஒட்டகங்களைப் பயன்படுத்துவார்கள். சில ஒட்டகங்களை விவசாயத்துக்குப் பயன்படுத்துவார்கள். இந்த இரண்டு வகையான ஒட்டகங்களும் மாமிசத்துக்காக வெட்டப்படும்போதுதான் அங்கே இரண்டு வகை.  முதல் வகை, பாலைவனத்தைக் கடக்கிறதுக்காக உபயோகப்படுத்தப்படும் ஒட்டகக் கறிக்குத்தான் மவுசு அதிகம். விலையும் அதிகம்.  ஏனென்றால் பாலைவனத்தில் முளைக்கின்ற முட்செடிகளிலும் ஒரு வகைப் புற்களிலும் மனித உடம்பக்குத் தேவையான நின்றய தாதுப்பொருள்கள் இருக்காம். பாலைவனத்தில் பயணம் செய்கிற ஒட்டகங்கள் அந்த முட்செடிகளையும், புல்லையும் சாப்பிடறதனாலே அந்த ஒட்டகக் கறிக்கு விலை அதிகம். பாலைவனத்தாவரங்கள் வளர தண்ணீரே வேண்டியது இல்லை.  காற்றில இருக்கிற ஈரப்பதமே அது வளரவும் உயிரோடு இருக்கவும் போதுமானது. 

பாலைவனக் காற்றுதான் சூடாக இருக்குமே! அதுல ஏது ஈரப்பதம்?.


காற்று சூடாக இருப்பது பகல் நேரத்துல மட்டும் தான்,  இரவு நேரங்களில் பாலைவனத்துல பனியும் பெய்யும்.  அந்த பனி ஈரம்தான் பாலைவனத் தாவரங்களுக்கு சாப்பாடு.  பேரீச்சம்பழ மரங்களும் இப்படித்தான் உயிர் வாழ்கின்றது.

ஒரு ஒட்டகத்தோட உயரம் எவ்வளவு தெரியுமா?  இரண்டரை மீட்டர். அதோட நீளம் முணு மீட்டர். ஒரு ஒட்டகத்தோட எடை கிட்டத்தட்ட ஐநூறு கிலோ.  இந்த ஐநூறு கிலோ எடையில் முக்கால் பகுதி எடையைத்தன் முதுகிலேயே னவத்திருக்கின்றது. அதாவது 375 கிலோ எனடயுள்ள முதுகு ஒரு ஒட்டகத்துக்கு இருக்கு.  இவ்வளவு பலம் இருக்கின்றதினால், எவ்வளவு எடையை அந்த முதுகின் மேல ஏற்றினாலும் ஒரு ஒட்டகம் அலட்சியமாக தூக்கிகொண்டு கம்பீர நடை போடுகின்றது. இந்த காரணத்திற்காகத்தான் ஒட்டகத்துக்கு 'பாலைவனக் கப்பல்'ன்னு பேர் கிடைத்திருக்கும் போலிருக்கு.

ஒட்டகம் பானலவனத்துல நடக்குகம்போது திடீர்னு மணல் காற்று அடிச்சா மணல் கண்ணுல விழாம இருக்கிறதுக்காக கெட்டியான தோலாலான இரண்டு இமைகள்(ஷட்டர்ஸ்) இருக்கு. மணல் காற்று அடிக்க ஆரம்பிச்சதுமே ரெண்டு தோல் இமைகளும்  (ஷட்டர்சும்) படுதா மாதிரி இறங்கி கண்ணை மறைத்துக்கொள்ளும்..

அப்புறம் பாலைவன முட்செடிகளைக் கடித்துத் தின்னுவதற்காக ஸ்டீல் மாதிரியான உதடுகள், மணலில் நடக்கும்போது சூடு தெரியாமல் இருக்கிறதுக்ககாக விசேஷ பாதங்கள்.  அப்புறம் தனக்குக் கிடைக்கின்ற தண்ணீனரப் பாதுக்காத்து வைப்பதற்காக உடம்புக்குள்ளேயே சின்னச்சின்னதாய் ஏழு தண்ணீர் சேமிப்பு அறைகள். 

105 டிகிரி வெய்யில்ல நடந்தாலும் ஒட்டகத்துக்கு வேர்க்கவே வேர்க்காது. ஒரு ஒட்டகம் ஒரே சமயத்தில் இரண்டு காலன் தண்ணீரைக் குடிக்கும்.   ஒரு நாளைக்கு பாலைவனத்தில் 45 கிலோ மீட்டர் தூரம் நடக்கும்.   தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்துவிட்டு ஒட்டு மொத்தமாக ஓய்வு எடுத்துக்கொண்டு ஆறு மணி நேரம் தூங்கும். 

ஒட்டகப் பாலைக் கறந்த ஒரு நிமிட நேரத்திற்குள் சாப்பிட்டுவிடவேண்டும்.  இல்லையென்றால் அந்தப்பால் தயிராக மாறிவிடும். ஒட்டகத்து மேல பயணம் செய்யறவங்க பாலைவனத்துல தாகத்திற்காக கட்டப்படும் பொழுது ஒட்டகத்தை வெட்டி அது சேமித்து வைத்திருக்கின்ற தண்ணீரை எடுத்துக் குடிப்பார்கள் என்ற தவறான செய்தியை கூறுவதுண்டு.  இதில் உண்மை கிடையாது. ஒட்டகத்தோட உடம்புல சேமித்து வைக்கப்படுகின்ற தணணீர் அவ்வளவு சுத்தமா இருக்காது. மனிதன் குடிக்க முடியாத அளவுக்கு வாடை இருக்கும்.  அதுவும் இல்லாமல்  பாலைவனத்தைக் கடக்கத் தேவைப்படுகின்ற ஒட்டகத்தை வெட்டினால் அவங்க எப்படிப் பாலைவனத்தைக் கடக்க முடியும்?  ஒட்டகத்தின் ஆயுட்காலம் 40 முதல் 50 வயது வரை உயிரோடு இருக்கும்.

1 comment:

Ashok D said...

தொடர்ந்து எழுதுங்க... நிறய தெரிந்துக்கொண்டேன்