Pages

Thursday 17 December, 2009

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!









 தமிழர் திருமணங்கள் எப்படி வடமொழி புரோகிதத்தால் கேவலப்படுத்தப்படுகின்றன. என்பதை தமிழர் இன்னும் உணராமல் அவர்களை நம்பியே மோசம் போகின்றனர். தந்தை பெரியார் தமிழர் திருமணங்களை சுயமரியாதையுடன் கூடிய  திருமணங்களாக, ஒரு எளிமையான ஜாதிமத பேதமற்ற திருமணம முறையாக அறிமுகப்படுத்தினார். இதில் பலர் இறைபற்றை கணக்கில் எடுத்து கொள்வதால், அதற்கு தமிழர் முறைத் திருமணங்களே மிகவும் நன்று.என்று  தமிழ் முறைத் திருமணங்களை பற்றி ஆசிரியர் கீ. இராமலிங்கனார் எடுத்துரைக்கின்றார். வடமொழியில் செய்யப்படும் திருமணங்களில் தமிழர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டே திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில் பெண்ணை படு கேவலமாக சித்தரிக்கின்றனர்.. இன்றுவரை அதன் பொருள் புரியாமல் தமிழர் திருமணங்கள் பார்ப்பன புரோகிதர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன.


திருமணங்கள் மட்டுமின்றி அனைத்து நல்ல நிகழ்ச்சிளும் தமிழ் மந்திரங்களையே உச்சாடணை செய்து கொண்டு நல்லறத்துட்ன வாழலாம், என ஆசிரியர் இராமலிங்கனார் தெரிவிக்கின்றார்.  அதில் கூறப்படும் மந்திரங்கள் அனைவருக்கும் புரியும்  அதன்படி நடந்து இல்லறமும் நல்லறமாக விளங்க தம்பதியர்கள் நடந்து கொள்வர்.  இறைவனை வழிபடுவது முதல் திதி கொடுப்பது வரைஅனைத்திற்கும் தமிழ் மந்திரங்கள் உள்ளன, என்பது இராமலிங்கனாரின் வாதம்.





 பேராசிரியர் மா நன்னன் பெரியாரியலில் விளக்கப்பட்டுள்ள பார்ப்பனர்களின் 8முறை திருமண முறைகளும் பார்ப்பனியர்களின் காட்டுமிராண்டித்தன்மையை விளக்குகின்றன என்று கூறுகின்றார். ஆரியப பார்ப்பனர் இந்நாட்டுக்குள் புகுந்தபொழுது அவர்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்தனர். என்றும் அயோக்கியர்களாகப் பிறகு மாறினர்.
(இந்த நாகரிகப்படி நேர்மையாக வாழ முயலாமல் அயோக்கியர்களாக ஏய்த்து வாழ முற்பட்டனர், போலும்)  அவர்கள் தமிழர்கள் திருமண முறையை மாற்றிக் கெடுத்தனர் என்றும் கூறும் பெரியார், இறையனார் களவியல் கூறும் எண்வகைத்திருமண முறைகளை எடுத்துக் காட்டி அப்பார்ப்பனர் எத்தகைய நாகரிகத்தை உடையவர்களாயிருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.





தமிழர்களுக்காக பார்ப்பனர்கள் பயன்படுத்தும் திருமண மந்திரங்கள்; அதில் மறைந்திருக்கும் கேவலமான உட்பொருட்கள்.



 1. சோமன் முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய  மூன்றாவது கணவன் அக்கினி.  உன்னுடைய நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன். 
2. சோமன் உன்னைக் கந்தருவனுக்கு கொடுத்தான். கந்தருவன் அக்கினிக்குக் கொடுத்தான். அக்கினி தேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்துப் பிறகு எனக்குத் தந்தான்.
3. சாந்தி முகூர்த்த அறையில் சொல்லப்படும் மந்திரம்; 
   கந்தருவனே, உன்னை வணங்கி வேண்டுகிறோம. முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக; நீ  தயவு செய்து இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக; என் மனைவியை என்னிடம் ஒப்படைப்பாயாக. 
     இப்படிப்பட்ட மந்திரங்கள் விளங்காத மொழியில் ஓதப்படுவதால் கேட்டுக் கொண்டிருக்கிறார்களேயன்றி விளங்கும் மொழியில் கூறப்பட்டால் அவற்றை எந்த மணமகனும், எந்த மணமகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  மானக்கேட்டை விளைக்கும் இத்தகு இழிவுகளுக்குதவும் மந்திரங்களை வாழ்வில் எந்த இடத்திலும், எந்த நிலையிலும்  எக்காரணத்தாலும் மானமும் அறிவும்ள்ள மக்கள் அனுமதிக்க கூடாது என்று பெரியார் கூறியுள்ளார். 


இறையனார் களவியல் உரை கூறும் பார்ப்பனரின் எட்டு வகையான திருமணங்களின் பெயர்களும அவற்றின் பொருள்களும் ;


1. பிரமம்: நாற்பத்தெட்டு ஆண்டு பிரமச்சரியம் காத்தாற்குப் பன்னீராட்டைப் பிராய்த்தாளை அணிகலன் அணிந்து கொடுப்பது.
2. பிரசாபத்தியம்: மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மாறாது கொடுப்பது.
3.ஆரிடம்: ஆவும், ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நீரில் கொடுப்பது.
4. தெய்வம்: வேள்வி ஆசிரியர்க்கு வேள்வித் தீ முன் வைத்துக் கொடுப்பது.
5. காந்தர்வம்: இருவர் ஒத்தார் தாமே கூடும் கூட்டம் அதனை யாழோர் கூட்டம் என்ப. (யாழ் தமிழரின் இசைக் கருவி, ஆதலின் யாழோர் என்பது தமிழரைக் குறிக்கும். ஆகவே, இது தமிழர் திருமணமுறை. இது மட்டும் தமிழரைப் பார்ப்பார் கற்றுக் கொண்ட முறையயாக இருக்கலோமோ?)
6. அசுரம்: கொல்லிறு கொண்டான் இவளை எய்தும்; வில்லிற்றினான் இவளை எய்நும்; திரிபன்றி எய்தான் இவளை எய்தும்; மாலை சூட்டப்பட்டான் இவளை எய்தும்; என இவ்வாறு சொல்லிக் கொடுப்பது.
7. இராக்கதம்:அவள் தன்னிலும் தமரினும் பெறாது வலிந்து கொள்வது.
8. பைசாசம்: மூத்தாள் மாட்டும், துயின்றாள் மாட்டும், களித்தாள் மாட்டும் சார்வது.
 இவற்றுள் ஓரிரு கூறுகள் தவிரப் பிற யாவும் நாகரிகமற்ற காட்டுத் தன்மை வாய்ந்தவை என்பது பளிச்செனத் தெரிகிறது. அந்த இரு கூறுகளும் தமிழர்களைப்  பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ள முயன்றதன் அடையாளங்களாக இருக்கலாம் என்றும் நல்லோராகிய அறிஞர் சிலர் கருதுகின்றனர். 


காட்டுமிராண்டிகளாக வந்து கயவர்களாகவும் மாறிய பார்ப்பனர் இந்நாட்டில் தாம் முன்னரே அறிவு முதிர்ச்சியும், நாகரிகச் சிறப்பும் பெற்று வாழ்ந்த தமிழர்களைத் தம் அடிமைகளாக்கி ஏய்த்து வாழக்கடவுள், மதம். போன்ற கருவிகளைப் பயன்படுத்தினர். அவற்றுள் ஒன்னுதான் இத்திருமண முறையில் அவர்கள் புகுத்திய மாற்றங்கள். அவர்களின் மனுதரும சாத்திரத்தில் தமிழர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையே இல்லை என்றும் மேல் சாதிக்காரனுக்குத்தான் மணம் புரிந்து கொண்டு கணவனும் மனைவியுமாக வாழும் உரிமை உண்டு என்றும் எழுதி வைத்தனர். 


இவ்வஞ்சக ஏற்பாடுகள் ப்ற்றி பெரியார் கூறுபவை ......



               தமிழர்களுக்கு வைதீக மார்க்கப்படி திருமணம் இல்லை. நமக்கு இருந்து வந்த முறையானது, புராண மார்க்கப்படி புரோகித முறைப்படிதான் நடைபெறுகிறது.  வைதீகம் என்பது புரோகித முறைப்படிதான் நடைபெறுகிறது. வைதீகம் என்பது வேதத்தை ஆதாரமாக்கஃ கொண்டது. வேதம் சூத்திரனுக்குக் கிடையாது. புரோகித மார்க்கமானது கற்பனையானது பார்ப்பான் நம்மை ஏமாற்றித் தாங்கள் வயிறு பிழைக்க நம் தலையில் கட்டியதாகும். இதுகளால் நாம் இழிமக்கள் என்பதை ஏற்றுக்கொண்டு நாம் மடையர்களாவதற்கே பயன்படுகின்றன.


பேராசிரியர் கண்ணப்ப முதலியார் ஆராய்ந்து கூறும்  தமிழ் மந்திரம் வடமொழி மந்திரம் பற்றிய விளக்கத்தை ஆசிரியர் கீ இராமலிங்கனார் கூறுபவை....



"மந்திரங்கள் என்று வடமொழியாளரால் திருமணங்களில் சொல்லப்படுவன எல்லாம், அவர்கள் திருமணங்களில் செய்யும் செயல்களைக்க குறிப்பனவாகவே உள்ளன. சில வாக்கியங்கள் (அவைகளின் பொருள்கள் தெரிந்தால்) அ திக அருவருக்கத்தக்க இழிந்த பொருள்களை உடையனவாக இருக்கின்றன.  மணமகளைச் சந்திரனுக்கும், கந்தருவருக்கம், அக்கினி தேவனுக்கும் மனைவியாகத் தந்து, பின் மணமகன் ஏற்றுக்கொள்வது என்பது தமிழ் மக்கள் வழக்கமன்று. இப்பொருளுடையது இச்சடங்கு என்று தெரிந்தால் ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்ட அன்றே அப்போதே, அச்சடங்கினை விலக்கிவிடுவான் என்பது ஒரு தலை. பொருள் புலப்படாத வேறு மொழில் சடங்கு நிகழ்வதால் அது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 




புரோகிதம் பண்ணும் பார்ப்பனர்கள் சொல்லும் அசாகாயசூர மந்திரங்கள் சில

                                                                                                                                                ---- ஆசிரியர் கீ இராமலிங்கனார்
" பண்டைத் தமிழ் மக்கள் கண்ட மந்திர இலக்கணம்இதுவாகவும் இதனுண்மை உணராது, வட மொழியில் சொல்லப்படுபவைதான் மந்திரங்கள் என எண்ணி ஏமாற்றமுறும் இக்காலத் தமிழ் மக்கள் நிலை பெரிதும் இரங்கத்தக்கது . அன்றியும்





  • 'மனண போட்டேன்'------'-----------------------------(ஆசனம் சமர்ப்பயாமி)
  • 'வெற்றிலைப் பாக்கு படைத்தேன்'---------------------(தாம்பூலம் சமர்ப்பயாமி)
  • 'வாழைப்பழம் படைத்தேன்' -------------------------------(கதலீபம் நைவேத்யாமி)
  • 'வெல்லம் படைத்தேன்' --------------------------------(குளோபகாரம் நைவேத்தியாமி)
  • 'தேங்காய் படைத்தேன்' -------------------------------(நாரிகேளம் நைவேத்தியாமி)
  • 'மலர் சூட்டினேன்'--------------------------------(புஷ்பம் சமர்ப்பயாமி)
  • 'அரிசி தூவினேன்'--------------------------(அக்ஷதன்ன மஹா)
  • 'புகை காட்டினேன்'-----------(தூபம் சமர்ப்பயாமி)
  • 'விளக்கொளி காட்டினேன்'----------------------------(தீபம் தர்சியாமி)


முதலாவதாக செல்லப்படுவன எல்லாம் மந்திரங்களளாக எண்ணுதல் நம் தமிழ் மக்கள் பேதமே, பெரிதும் வருந்தத்தக்கது. இவைகள் ஒழிய ஆரியர்களால் திருமணங்களில்  சொல்லப்படுபடுவன எல்லாம் மிக இழிந்த பொருள்களை உடையன.


''தாயை நீக்கி ஒருவன் மணஞ்செய்து கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம் பழிக்குமோ அங்ஙனமே தாய்மொழியை நீக்கி, மணஞ்செய்து கொள்வோர்களைத் தமிழ் தெய்வமும் தமிழினச் சான்றோர்களும் பழிப்பர் என்று தமிழர்கள் அறிதல் வேண்டும். ''


'தமிழ் திருமணம்' என்பது விவாகம் அன்று திருமணமே. 'விவாகம்' எனும் சொல்லுக்குப் பொருள் தெரியாமல் ஒரு வடமொழிப் பேராசிரியரைக் கேட்டதில் அதற்குப் பொருள் தூக்கிக் கொண்டு போவது என்றார். 'வாகனம் என்பது தூக்கிக்கொண்டு போகும் கருவி அச்சொல்லின் பகுதி 'வக்' என்பதாகும். 'வக் என்றால் 'துக்கு' என்று பொருள். 'வி' என்றால் சிறப்பாக 'செவ்வையாக' 'ஒப்பில்லாத' வகையில் என்றெல்லாம் பொருள். 'விவேக்' என்றால் சிறப்பாகத் தூக்கிக்கொண்டு போவது என்றுதான் பொருள். 'விவக்' 'விவாகம்' என்று ஆகிறது என்று மேலும் அந்தப் பேராசிரியர் விளக்கினார். 


குழந்தைப் பருவத்திலேயே மணஞ்செய்து கொடுத்து வரும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தவர்கள் குழந்தையை மடியில் தூக்கிவைத்துக் கொண்டுதான் மணம் செய்து கொடுக்க முடியும்.  குழந்தை தனியே மாப்பிள்ளை பக்கத்தில் அமராது.  மாலை மாற்றும்போது குழந்தையைத் தூக்கிக் கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் மாப்பிள்ளையின் கழுத்து குழந்தைக்கு எட்டாது. மணப்பெண்ணை மணமகன் தன் ஊருக்கு அழைத்துச் செல்லும்போது தன் தோளில் தூக்கிக்கொண்டு தான் செல்ல வேண்டும். சிறு குழந்தை ஆயிற்றே! நடந்து செல்ல முடியாதே! இந்தக்க காரணத்தால் தான் 'மணத்தை விவாகம்' என்னும் சொல்லால் குறித்தனர் என்று அப்பேராசிரியர் தொடர்ந்து சொன்னார். இன்றுங்கூட அப்பண்டைக்கால வழக்கத்தை உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டு 25 வயதான மணமகளையும் அவள் தந்தையார் மடியில் அமர்த்திக் கொண்டு மணம் செய்து கொடுக்கும் வழக்கம் தமிழ் மரவில் நம்பிக்கை இலல்லாத இனத்தவரிடம் இருப்பதை அறியலாம். 




தமிழ் மந்திரம்


மந்திரம் என்பது என்ன என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார் வரையறுத்துக் கூறுகின்றார்...


"திரைமொழி மாந்தர் ஆணியிற்கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப"


தமிழ் மந்திரங்கள் என்றும் அவற்றை வல்லார் வாய்க் கேட்டுணர்க என்ற பொருளில் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.



இனி அனைத்து சடங்குகளும் தமிழ் முறையிலே செய்ய  உறுதி கொள்வோம். திருமணங்களை தமிழ் மந்திரங்களை பயன்படுத்தி நடத்துவோம். அதில் தம்பதியர்களுக்கான உறுதிமொழியும் இருக்கும், மந்திரங்களும் எளிமையாக, ஆபாசமின்றி இருக்கும். தமிழர் திருமணங்கள் தமிழரால் மட்டுமே நடத்தப்படவேண்டும் என உறுதி கொள்வோம்.



தமிழ் முறையில் திருமணம் செய்வோம் தமிழராக வாழ்வோம்.


நூல் திரட்டு


---தமிழ்த் திருமணம் ஆசிரியர் கீ, இராமலிங்கனார். (தமிழ்த் திருமண மந்திரங்கள் முறைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன)

---பெரியாரியல் (8 )திருமணம்- பேராசிரியர் மா.நன்னன்.





-....தொடரும்......தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-2

4 comments:

வால்பையன் said...

யாராவது வந்து மறுப்பு சொல்றாங்களா பாருங்க!

அப்ப பார்பனர்கள் ஏமாற்றி பிழைப்பது உண்மை தானே!

நம்பி said...

தங்கள் கருத்துரைக்கு நன்றி!

தமிழ் said...

எனது திருமணமும் சுயமரியாதையோடு சுயமரியாதையோடு நடத்தப்படவேண்டும் என உறுதிகொண்டு பெண் வீட்டாரிடம் பேசிய போது அவர்கள் புரோகித திருமணமே நம் வழி திருமணம் என்று வாதிட்டனர். பின்னர் அப்படியென்றால் திருமணமே வேண்டாம் என மறுத்து எனது வாழ்க்கை துணை ஒப்பந்த விழாவை பெரியவர்களின் வாழ்த்தோடு நடத்தி முடித்தேன்.
புரிய வைப்போம் நமது உறவுமுறைகளுக்கும் தமிழருக்கும்

நம்பி said...

நன்றி தமிழ். திருமண வாழ்த்துக்கள். என் வீட்டில் அனைவருக்கும் தமிழ் முறை திருமணங்கள் தான். ஒரே பண்டிகை பொங்கல் தான்.