Pages

Sunday, 13 December 2009

ஏன் விலங்குகளின் ஆவியை மட்டும் யாரும் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை?


எப்ப பார்த்தாலும் மனித ஆவி, பூதம், பிசாசு என்று இருக்கிறவங்களை பயமுறுத்தற வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றவர்கள், ஏன்? விலங்குகளின் ஆவியை கண்டுபிடிக்க கூடாது?. விலங்குகள் தான் ஆவிகளையே கண்டிபிடிக்கின்றன என்பதாலா? (அப்படி ஒரு கருத்து நிலவுவதால்). அந்த ஆவிகளைப்பார்த்து மனிதர்கள் கண்டிப்பாக பயப்பட மாட்டார்கள் என்பதாலா?

இனிமேல் யாராவது சிங்கம் ஆவி, புலி ஆவி,........ஆடு, மாடு, பன்றி, ஒட்டகம் இதனுடையை ஆவிகளையும், அதற்கு மேல் முடிந்தால் கரப்பான் பூச்சி, பல்லிகள்,........ஒனான்,............. தேள், பூரான்,............. பாம்பு.......... இவைகளின் ஆவிகளையும் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். இன்னும் முடிந்தால் பாக்டீரியா, வைரஸ்.....  இவைகளையும் கண்டுபிடிக்கலாம். இதெல்லாம் அதுங்களே கண்டுபிடித்து கொள்ளவேண்டுமா?  மனிதர்கள் ஆவியை மட்டும்தான் மனிதர்கள் கண்டுபிடிக்க முடியும், மிருகங்கள் ஆவியை மிருகங்களே கண்டுபிடித்து கொள்ளவேண்டும் என்ற நியதி இருக்கின்றதோ? அதுங்களுக்குத்தான் 5 அறிவு ஆயிற்றே? நமக்குத்தானே ஆறறிவு? நாம் தான் கண்டுபிடித்து சொல்லவேண்டும். இணையத்தில் இதுபற்றி தேடிப்பார்த்தேன் யாரும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை. ஒரு வேளை இந்த குறுந்தகவல் பதிவிற்கு பிறகு கண்டுபிடிப்பார்களோ?

3 comments:

Ashok D said...

அட.. இதுகூட நல்லாயிருக்கே.... நல்லகேள்விதான்

நிகழ்காலத்தில்... said...

மிருகங்கள் பணம் வைத்திருக்குமானால் அவற்றின் ஆவியையும் நம்மவர்கள் கண்டுபிடித்து விடுவர் :))

வாழ்த்துகள் நண்பரே

நம்பி said...

கருத்துரையிட்ட நண்பர்களுக்கு நன்றி!