Pages

Tuesday 1 December, 2009

புலால் உணவு , தாவர உணவு இரண்டுமே கொல்லாமையை வலியுறுத்தவில்லை., இந்த வேறுபாடுகளை உருவாக்கியது பார்ப்பனர்கள் தான்.

 புலால் உண்பது பாவம் என்றும் அதை உண்ணும் பொழுது கொல்லுதல் நடைபெறுகின்றது, குருதி வெளியேறுகின்றது, ஆனால் தாவரங்களில் கொல்லுதல் நடைபெறுவதில்லை, குருதி வெளியேறுவதில்லை, அது துடிப்பதில்லை என்று ஆரிய பார்ப்பனர்களால் விஷமமாகப் பிரச்சாரம் திராவிடர்களிடையே செய்யப்பட்டது. அதையே திராவிடர்களும் வெகு காலமாக நம்பி வந்தனர். இன்று வரை அந்த எண்ணம் நிலவுகின்றது. இந்தியாவில் மட்டுமே இந்த மூட நம்பிக்கைகள். .....


சூழிலியல் காரணிகள்
உலகில் ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு உயிரினம் அல்லது உயிரினங்களை சார்ந்தவைகளாகவே இயற்கையில் படைக்கப்பட்டுள்ளது. இவை இயற்கையில் சூழிலியல் காரணிகளாகவும், உணவு அமைப்பு முறைகளின் மூலம் அந்தந்த உயிரினங்களின் பெருக்கங்களை கட்டுபடுத்துகின்றது. இந்த அமைப்பு இல்லையென்றால் ஒரினத்தின் பெருக்கம் அளவில்லாமல் போய் அதனால் பேரழிவை ஏற்படுத்தும் அது அந்த இனத்தையே அழிக்கும் நிலையைத் தடுக்கவே இம்மாதிரி அமைப்பு முறைகள் இயற்கையால் உருவாக்கப்பட்டது. (உருவானாது)
  • தாவரங்களின் பெருக்கங்களை தாவர உண்ணிகள் கட்டுப்படுத்து கின்றது

  • தாவர உண்ணிகளை புலால் உண்ணிகள் கட்டுபடுத்துகின்றது. மேலும் அனைத்துண்ணிகளினாலும் கட்டுபடுத்தப்படுகின்றது. இதில் மனிதன் ஒரு அனைத்துண்ணி. புலால் மற்றும் தாவரம்  இரண்டையுமே உண்ணுபவன்.
  • இதில் முதலில் புலால் உணவுகளைத்தான்  அவன் ஆரம்பத்தில் உண்டான். . ஆதிமனிதனுக்கு நிலத்தை உழுது பயிர் வைக்கவேண்டும் என்று தெரியாது. நெல் ஒரு தப்புச்செடியாக அதாவது தானாகவே  பெருக்கத்தை ஏற்படுத்திகொண்டிருந்தது. அதன்பிறகுதான் தாவரத்தையும் உணவில் சேர்த்து கொண்டான். அது ஒரு உணவு என்று கூடத்தெரியாது. ஆனால் புலாலை கைவிடவில்லை.

  • புலால் உண்ணிகளை மனிதனும், இன்னும் சில அந்த இனங்களிலேயே உள்ளவைகளும் தின்பதால் அந்த இனங்களின் பெருக்கம் கட்டுபடுத்தப் படுகின்றது. வேறு காரணங்களுக்காக (தோல்) கொல்வதாலும் கட்டுப்படுத்தப்பட்டது. (இப்பொழுது தடை)

இந்த கட்டுப்பாடுகள் இல்லையென்றால்.......

  • தாவரத்தின் அளவில்லாத பெருக்கத்தால் காட்டுத்தீ உருவாகும் அதனால் அதனைச்சார்ந்துள்ள  உயினங்கள் வெந்து சாகும். ஒட்டுமொத்தமாக உயிரினங்களே அழியும் இதுவும் ஒரு இயற்கை பேரிடர். அதனால் தான் அதை கட்டுப்படுத்த மான், மாடு , யானை..... உயிரினங்கள் உருவாக்கப்பட்டது.

  • தாவர உண்ணிகளின் பெருக்கத்தால் தாவரங்கள் அழியும். அதனால் அதை கட்டுபடுத்த சிங்கம் புலி......விலங்குகள்  உருவாக்கப்பட்டது.

  • இவற்றையும் கட்டுபடுத்த அந்த இனங்களுக்குள்ளேயே சமயத்தில் உணவிற்காக கொல்லுதல் நடைபெறும். சிங்கம், சிறுத்தை குட்டிகளை கொல்லும், சிங்க குட்டிகளையே சில சமயம் சிங்கங்கள் சாப்பிடும். இதை கானிபாலிசம் என்கின்றோம். இந்த புலால் மிருகங்கள் அதிகமாகும் சமயத்தில் இது அது வசிக்கும் இடத்தை விட்டு உணவுக்காக மனிதர்களை தேடிவருவதை தடுக்க, அவற்றிடமிருந்து மனிதர்களை பாதுகாக்கவும், அதன் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்தவும் மனிதனால் அவ்வப்பொழுது வேட்டையாடுவதன் மூலம் கட்டுபடுத்தப்பட்டது. முன்பு அரசர்கள் வேட்டையடுதலை ஒரு பணியாகவே செய்து கொண்டு வந்ததை அறியலாம். இப்பொழுது அந்த இனங்கள் குறைவு ஆகையால் வேட்டையாடுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

  • அதற்குப்பின் சிதைவு.....அதாவது அதற்கு பின் இறப்பு அதை சிதைக்கவேண்டும் அதற்குத்தான் பாக்டீரியா...இன்னும் சில நுண்ணுயிரிகள்.......

மனிதன் அனைத்துண்ணி
மனிதன் என்பவன் அனைத்துண்ணி. இது அறிவியல் வகைப்பாட்டிலேயே பிரிக்கப்பட்டுள்ளது. அவன் தாவரத்தையும், புலாலையும் உண்ணலாம். அது அவரவர் விருப்பம். இதில் பாவம் புண்ணியம் என்று எதையுமே பிரிக்க முடியாது. கொன்று தினபது இயற்கை நியதி.

தாவரங்களுக்கு உயிர் இல்லை என்ற நம்பிக்கை கல்வியறிவு அவ்வளவு வளரச்சியடையாத காலத்தில் பார்ப்பனர்களால் இந்து சமய மக்களின் பல பிரிவனரிடையே ஒரு பிரிவினரால் வஞ்சகமாக புகுத்தப்பட்டது. இது அவர்கள் சுயநலத்திற்காக செய்த சூழ்ச்சி. இதற்கு உயிர் இருக்கின்றது என்பதை சென்ற நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தனர். அதை கண்டுபிடித்ததும் நமது நாட்டு அறிஞர்கள்தான். அதன்பிறகு முற்றிலும் கொல்லாமை என்ற கூற்று அடிபட்டு போயிற்று.



விலங்குகள் வாயில்லா உயிரினம் (ஜீவன்) என்றும் அதை கொல்லும் பொழுது துடிக்கின்றது என்ற பரிதாப உணர்வு மக்களிடையே உள்ளது, பார்ப்பன பிரிவினரின் பிரச்சாரத்தால் அது தொடர்ந்து மக்களிடையே நிலவிவந்தது. அதன் குருதி சிவப்பாக இருப்பதும் அதன் மேல் அதிக இரக்கம் வரக் காரணம். அந்த குருதி மனிதக்  குருதியின் நிறத்தை ஒத்து உள்ளதால் வந்த பரிதாப உணர்வு. அது உண்மைதான். ஆனால் உண்மையில் தாவரங்கள் தான் உண்மையான வாயில்லா உயிரினம், அதுவும் துடிக்கின்றது, அதன் குருதி நிறமற்றது. லேட்டக்ஸ் என்ற குருதியே அது.

பூச்சினங்களுக்கும் குருதி சிவப்பாக இருப்பதில்லை. தாவரம் தன்னை கொல்ல வருபவர்களை அடையாளம் கண்டு சில சிலிர்ப்புகளின் மூலம் எதுர்ப்புகளை வெளிப்படுத்துகின்றது. இதை கண்டுபிடிப்புகளின் மூலம் உணர்த்தியுள்ளனர். தாவரங்கள் இசையைக் கேட்கின்றது என்பதை நமது தமிழ்நாட்டு பல்கலைக்கழக (அண்ணாமல்ப்பல்கலைக்கழகம்) மாணவர்கள் கண்டுணர்ந்து அதை உலகுக்கு அறிவித்தனர். அந்த இசையே கேட்டு தாவரங்கள் வளர்கின்றது என்பதை தென்னை மரத்தின் முன், நாதசுவர இசையின் ஒலியை எழுப்பி வளரச் செய்து நிருபித்து காட்டினர். இன்று பல நாடுகளிலும் அதை நிரூபித்து வருகின்றனர் என்பதை ஊடகங்களின் மூலம் அறிகின்றொம்.

பார்ப்பனர்களின் விஷம பிரச்சாரம்

நெற்பயிரை கொன்று அதன் விதைக்கருவை அழித்து அரிசியாக உண்ணுகின்றோம். இது ஒன்றிலேயே கொல்லாமை அடிபட்டு விடுகின்றது. அதன்  கதிரை அறுத்து எடுக்கப்படும் நெல்லில் இருந்து தான் அரிசி எடுக்கப்படுகிறது.... இங்கே தாவரம் அறுக்கப்பட்டு கொல்லப்படுகிறது. (மீண்டும் அந்த நெற்பயிற் வளர்வதில்லை ) இனி மற்றத் தானியத் தாவரங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்,  எல்லாம் இந்த கொல்லும் முறை தான்.  நிலக்கடலை...எண்ணெய், பயறுவகைகள்....எல்லாம்.....கொல்லுவது தான்.


இளநீர் ஒரு கரு அதற்கு பெயர் தாவர முட்டை, தக்காளி, வெங்காயம், கீரைத்தண்டு...... எல்லாமே துடிக்க துடிக்க கொன்று புசித்தல் தான். இதையெல்லாம் விட்டு விட்டு விலங்குகளை கொல்லுவது பாவம் என்று ஆரியர்களான பார்ப்பனர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்தி, தனி அடையாளமாக மாற்றிக் கொள்வதற்காக கண்டுபிடித்த தந்திரங்கள். அவர்களின் வரலாற்றில் தான் மிக மோசமான கொல்லுதல் இருந்தது, பலி பூஜைகள் இருந்தது. அதுவும் யாகம் என்ற பெயரில் (அசுவமேத யாகம்-குதிரையை தீயிலிட்டு பொசுக்கி உண்பது) மிருகங்களை உயிருடன் நெருப்பில் யாகப்பலி என்ற பெயரில் இறக்குவது அதற்கு பின் அந்த இறைச்சியை இறைவனின் பெயரில் அமுதமாக உண்டது. இது எல்லாம் அவர்கள் பின்பற்றி வந்த  வரலாறு.

தாவர உணவு அதிக செலவாகும்


தற்காலத்தில் தாவரங்களை உண்பது சற்று கூடுதலான செலவு பர்சை எளிதில் காலியாக்கும் விஷயம். புலால் உணவைவிட  தாவர உணவு க்கு ஆகும் செலவை விட குறைவு என்பதால் பலர் அதையே நாடுகின்றனர். இந்திய அளவில். ஒரு மனிதனுக்கு  தேவையான கலோரி குறைந்த செலவிலேயே புலால் உணவால் கிடைக்கின்றது. இது நிருபிக்கப்பட்ட உண்மை.


உழைப்பாளர்களின் உணவு

தாவர உணவில் செரிமானம் எளிது, புலால் உணவு சற்று கூடுதலான நேரம் பிடிக்கும். கடின உழைப்பாளர்களின் சக்தியை புலால் உணவே குறைந்த செலவில் பூர்த்தி செய்கின்றது. அவர்களிடம் உடல் உழைப்பு அதிகமிருப்பதால் இந்த செரிமான பிரச்சினை என்று ஒன்று இல்லை. (இதிலிருந்து யார் உழைக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்)  பல உடற்பயிற்சியாளர்களின் தேவையையும் புலால் உணவே பூர்த்தி செய்கின்றது. பெண்களின் பேறு காலத்தில் (புலால்) இவ்வுணவையே  பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றது. எப்பொழுதும் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகின்றது. இதில் எது சிறந்தது என்று எடுத்து கொள்வது அவரவர் விருப்பத்தை பொருத்தது. இரண்டிலுமே கொல்லாமை வரவில்லை. இதில் கொல்லுதல் என்பது தாவர உணவில் மட்டுமே அதிகம் நடைபெறுகின்றது. வேறுபல மனிதனின் பல தேவைகளுக்காகவும் அதிகளவில் தாவரங்களின் கொல்லுதல் நடைபெறுகின்றது. அதனால் தான் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து இன்று இந்த நிச்சயமற்ற பருவ மாற்றத்திற்கும், புவி வெப்பமயமாதல் சூழலுக்கு இந்த மனித இனம் தள்ளப்பட்டதற்கு காரணம்.

தண்ணீர் குடித்து வாழ்வதே உண்மையான கொல்லாமை
கொல்லாமை வேண்டாம் என்றால் தினமும் தண்ணீர் குடித்துதான் வாழவேண்டும். அதையும் ஒரு தமிழர் நிரூபித்து கொண்டிருக்கின்றார் 28 வருடங்களாக. இன்னும் சிலர் இருக்கலாம். அவர்களே கொல்லாமையை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். மற்ற அனைவரும் கொன்று புசிப்பவர்களே. இன்றும் சித்தர்கள் இந்த முறையில் உணவு உண்ணாமல் தண்ணீரை குடித்து மலைகளில் வாழ்வதை ஊடகங்களின் மூலம் அறிந்திருக்கலாம். அல்லது கனிகளை அதன் கருவான விதைகளை சேதப்படுத்தாமல் உண்ணுவதையும் கேள்விபட்டிருக்கலாம். இது கொல்லாமையை வலியுறுத்துவது, ஆனால் மேம்பட்டவர்கள் என்ற பொருள் கிடையாது. அவர்களுடைய  மனநிலைக்காக வேண்டுமானால் இம்மாதிரி உணவு முறைகளை கையாளலாம்.

அனைத்தும் அதன் பெருக்கத்திற்காக
எந்த உயிரும் அதன் பெருக்கத்தை தான் கவனிக்கும். தாவரங்கள் மனிதனுக்காகவோ, வேறு எந்த உயிரினத்தின் உண்வுக்காகவோ உருவாக்கப்பட்டது அல்ல.  மாடு பால் கொடுப்பது மனிதனுக்காக அல்ல அதன் பெருக்கமான குட்டி வளர்வதற்காக.  மாட்டின் ரத்தம் கன்றிற்காக தாய்மை உணர்வுடன் சுரப்பது. அதன் உணவை திருடி சாப்பிட்டு கொண்டிருக்கின்றோம்.  உடனே தயிர் சாப்பிடலாமா? அதிலும் உயிரினம் இருக்கின்றது பாக்டீரியா.  

கனிகள் தாவர இனப்பெருக்கத்திற்காக இயற்கையால் தாவரத்திற்கு அளிக்கப்பட்ட கவர்ச்சி கூறு, அதன் பொருட்டு விலங்குகள், மனிதர்கள் அதை நாடி வருவார்கள் என்பதற்காக. அந்த கனியை சாப்பிட்டு விட்டு விதையை எங்காவது தூக்கி போடுவதால் இன்னொரு உயிர் உருவாகின்றது.

அதனால் தான் இந்த சூழிலியல் உணவு முறைகள். ஒரு உயிரினத்தை சார்ந்து இன்னொரு உயிரினம் என்று உயிரினங்களின் பெருக்கங்கள் இன்னொரு உயிரினத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது என்று இதன் மூலம் தெளிவாகின்றது.. உணவுக்காக உயிர்களை கொல்லுவது தவறல்ல, தவறல்ல........அது  ஒரு கட்டாயம்.


மனிதனின் உணவுத் தேவை பெருகிவிட்டதால் அவனே இப்பொழுது வளர்க்கின்றான் அதை அவனே கொன்று புசிக்கின்றான். அது தாவரமானாலும், விலங்கானாலும்  அது அவனுடைய அத்தாயாவசியாமான உணவு. ஆகையால் தான் இரண்டையுமே விவசாயத்தின் பட்டியலில்  சேர்த்துள்ளதை கண்டு புரிந்து கொள்ளலாம்.

இன்னும் சொல்லப்போனால் விலங்குகளை விட தாவரங்களைத்தான் அதிகம் கொல்லாமல் நேசிக்க வேண்டும். அது நம் வாழும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான நீண்ட கால இயற்கைப்பாதுகாப்பு நன்மை.

இயற்கையால் உருவாக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் இயற்கையே அடைகின்றன. இதுதான் உண்மை.

No comments: