Pages

Sunday, 27 March, 2011

பெரியார் அறிவுச்சுவடி!

றிவின் வழியே அறவழி யாகும்
லயம் தொழுவது சாலவும் தீது
றைவன் என்பது இயற்கையே யாகும்
சன் என்பவன் நீசனே யாவான்
ன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை
ழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே
ல்லாம் உன் செயல் என்பதே நீ அறி
ழை என்பவன் கோழையே ஆவான்
துங்கி நில் என்றால் ஒட்டி நீ நிற்பாய்
துவோரெல்லாம் உயர்ந்தோர் ஆகார்.

டவுள் என்பது கயவர்கள் கற்பனை
கா சிக்குப் போவது காசுக்கு நட்டமே
கி ளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை.
கீ தை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்
கு ட்டக் குட்டக் குனிபவன் முட்டாள்
கூ டி ஒற்றுமை கொள்கையில் காண்பாய்
கெ ட்டாலும் மானம் விட்டுக் கெடாதே
கே ள்வி ஞானமே கேடிலா ஞானம்
கை ம்பெண்ணாயினும் கட்டு தாலியை
கொ டுப்பவன் எல்லாம் கொடை வள்ளல் ஆகான்
கோ யில் இல்லா ஊரில் நீ குடி இரு.

ரித்திரம் அறிந்தவன் சாத்திரம் பேசான்
சா தி ஒழியாமல் சமதர்மம்  இல்லை
சி ந்தனைச் செல்வமே சிறந்த செல்வம்
சீ வனை விட்டபின் சிரார்த்தம் எதற்கு?
சு கமென்று எதுவும் சொர்க்கத்தில் இல்லை
சூ ட்சுமம் என்பது சூழ்ச்சியே யாகும்
செ த்தும் விடுவான் மருத்துவன்;
           செத்தாலும் விடான் புரோகிதன்
சே க்கிழார் செய்ததே சிவனார் லீலைகள்
சொ ர்க்கம் என்பது சுரண்டி வாழ்வதற்கே
சோ திடம் சொல்வது சோற்றுக்கு என்று அறி

ஞா னி என்பான் ஞானமே இல்லான்
டா வும் டீ யும் டவாலியர்க்கே

ன்மானம் இலாதவன் தமிழன் ஆகான்
தா ழ்வு மனப்பான்மை தனை நீ தவிர்ப்பாய்
தி ராவிடர்க் கில்லை திதியும் திவசமும்
தீ ண்டாமை என்பது வேண்டாமை யாகும்
து ணிந்தோர்கி கில்லை துன்பமும் துயரமும்
தூ ய்மை என்பதே வாய்மையில் காண்பாய்
தெ ய்வத்தை நம்பித் தெருவில் நிற்காதே
தே வரின் பேரால் திருடரே பெருகினர்
தொ ட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே
தோ ல்வி எதிலும் துணிந்தோர்க் கில்லை


யம்பட உரைப்பவன் நயவஞ் சகனே
நா யா யிருந்து நீ நரிக்கு இடங் கொடேல்
நி யாயத்துக்கென்று ஒரு நிலையென்றும் இல்லை
நீ தியின் கதையும் நிலையான தன்று
நு னிப் புல் மேய்ப்பவன் நுட்பத்தை அறியான்
நூ லோர் எல்லாம் மேலோர் அல்லர்
நெ ற்றிக்கு வேண்டாம் நீறும் நாமமும்
நே ர்மைக்கு என்றும் நெஞ்சில் இடம்கொடு
நொ ந்தவன் சொன்னால் நோகத்தான் செய்யும்
நோ காமால் தின்பவன் நோன்பெலாம் உனக்கேன்?

குத்தறிவாளர் பஞ்சாங்கம் பாரார்
பா ம்புக்கு நஞ்சு பல்லில்;
           பார்ப்பனனுக்கு நஞ்சு நெஞ்சில்
பி றப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை
பீ டை என்பது பிராமணீயமே
பு துமையை விரும்பிப் பழமையை மறப்பாய்
பூ ணூலை அணிந்தவன் புனிதன் ஆகான்
பெ ருமை பெற நில்
பே தமை அகற்று
பொ றுத்தார் ஆளும் பூமி மயானமே
போ ர்த்திறன் போற்றி வாழ்

னிதனைக் கெடுத்தது தமெனும் மாயை
மா னம் போகும் மக்கள் மிகப் பெறின்
மி ச்சம் பிடித்து வாழ்; மீளாக் கடன் இரா
மீ சை வைக்க ஆசைகொள் மிழா!
மு க்தியால் வளர்வது மூடத்தனமே
மூ ர்க்கனே மேல் முட்டாளைக் காட்டிலும்!
மெ ன்மையின் பேரால் பெண்மை
                இழந்தது வன்மையே ஆகும்
மே ட்டுக் குடியெலாம் மேற்குடி ஆகா
மொ ட்டையும் கொட்டையும்
                மோட்சத்தைக் காட்டா!
மோ ட்சத்தைப் போலொரு மோசடி இல்லை

க்ஞமும் யாகமும் யாசகம் எடுக்கவே
யா தும் ஊரென வாழ்ந்தது போதும்
யு க்தி என்பது குயுக்தியே யாகும்
யூ கங்கெளெல்லாம் உண்மைகள் ஆகா

சாபாசத்துக்கே ராமனும் ருமனும்
ரா வண காவியம் ரசித்துப் படிப்பாய்

ம்புக்கு அஞ்சி வறுமையில் வாடேல்
வா தம் புரிவதில் வல்லமை பெறுவாய்
வி ரக்திக்கு அடிப்படை விதியே யாகும்
வீ ழ்ச்சி என்பது வீரனுக்கு இல்லை
வெ ற்றி நிச்சயம் விடாமல் முயன்றால்
வே தத்தால் வளர்வது விதண்டா வாதமே
வை யகம் வாழ வைதீகம் வேண்டாம்.

நன்றி...பகுத்தறிவாளர் விந்தன்...
வெளியீடு:பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் .
No comments: