Pages

Friday 5 August, 2011

சொத்து குவிப்பு வழக்கிற்கு 108 முறை வாய்தா வாங்கி ஜெயலலிதா சாதனை!

    
 வழக்கின் தீர்ப்பு! டென்ஷனில் ஜெ!

  திமுகவினர் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பாய்கின்றன.  இதை ஒரு தீவிர அஜெண்டாவாக அ.தி.மு.க. அரசு  மேற்கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையை ஒரே ஒரு வழக்கு ரொம்பவும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.  அது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெ.மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.  வழக்கை இழுத்தடிப்பதற்கான பல உத்திகளை ஜெ.வின் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட போதும், வழக்கு விசாரணையின் வேகத்தைக் கண்டு  மிரண்டுதான் போயிருக்கிறத, போயஸ் கார்டன்.

     சொத்து குவிப்பு வழக்கு விசாரணையைப் பொறுத்தவரை,  2005 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் 108 முறை வாய்தா வாங்கியிருக்கிறது, ஜெ.தரப்பு.  தற்போது இந்த வழக்கு வேகம் எடுத்திருப்பதால் அதைத் தடுப்பதற்கு ஏதாவது கட்டை போடவேண்டும் என்ற முடிவோடு, சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் புலனாய்வு செய்யவேண்டும் என தமிழகத் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி மூலம் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது.

     2001-2006 ஜெ. ஆட்சிக்காலத்திலும் இப்படித்தான் இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டது என்பதால், தி.மு.க. பொதுச்செயலாளர் போராசிரியர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத்தாக்கல் செய்தார்.  அந்த மனுவின் டஇப்படையில், இந்த வழக்கை கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவேண்டும் என உத்தரவிட்டது., உச்சநீதிமன்றம்.  அத்துடன், சிறப்பு நீதிமன்ற நீதிபதியையும், அரசு வழக்கறிஞரையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நியமிக்க உத்தரவிட்டது.  தற்போதைய புதிய ஜெ. ஆட்சியிலும் வ.ழக்கை இழுத்தடிக்கும் முயற்சிகள் ஆரம்பமானதால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர் மனு தாக்கல் செய்தார்.

        குற்றவாளியும், அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும் அரசும் ஒன்றே என்ற காரணத்தால், வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இப்போதும், அதேபோல, முடியும் நிலையில் உள்ள இந்த வழக்கைத் தாமதப்படுத்தவும் குற்றவாளி தப்பிப்பதற்கு ஏதுவாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருப்பது நீதிமன்றத்தின் அலுவலில் தலையிடுவதாக இருக்கிறது.  தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.  அதை ரத்து செய்ய வேண்டும, என்று போராசிரியரின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


      ஜூலை 29-ந் தேதியன்று வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜெகந்நாதன், 'உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடக மாநிலமும்-கர்நாடகத் தலைமை நீதிபதியும் சேர்ந்து நியமித்த சிறப்பு நீதிமன்ற அரசு வழ்க்கறிஞர் ஆச்சாரியாவைத் தவிர வேறு யாரும் இந்த வழக்கில் தலையிடக்கூடாது.  உச்சநீதிமன்றம் இந்த வழக்கை கால தாமதமின்றி நடத்த உத்தரவிட்டுள்ளது.  உங்களது (தமிழக அரசின்) தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவுப்படி, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மீது நீங்கள் எந்த மறு விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது.

      இந்த வழக்கு விசாரணை முடியும்வரை எந்த விசாரணையையும் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தக் கூடாது.  தலைமைச் செயலாளர் பிறப்பித்த மறுவிசாரணை உத்தரவுக்கு தடையுத்தரவு பிறப்பித்து ஆணையிடுகிறேன்' எனத் தீர்ப்பு வழங்கினார்.

      'கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை இழுத்தடிக்க நினைத்த ஜெ.வின் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது' என்கிற சட்ட வல்லுநர்கள், 'இனி இந்த வழக்கு மேலும் விரைவாகச் செல்லும்.  ஜெயலலிதா 313 ஸ்டேட்மெண்ட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்' என்கிறார்கள்.  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட அதே நாளில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.வுடன் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சசிகலாவும், இளவரசியும் ஆஜரானார்கள்.  குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான மாஜி வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு கையில் அடிபட்டுவிட்டதால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என அவர் தரப்பு வக்கீல், கோர்ட்டில் தெரிவித்தார்.

      சசிகலாவும், இளவரசியும் கோர்ட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.  அவர்கள் ரொம்பவும் களைப்புடன் பொறுமை இழந்தும் காணப்பட்டார்கள் என்கிறார்கள், சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள்.  ஜெ. சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் 313 ஸ்டேட்மெண்டுக்காக நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் 313/5 பிரிவின்படி கேள்விகளுக்குப் பதில் எழுதியோ அல்லது வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஸ்டேட்மெண்ட் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணையை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி.

       சொத்துக் குவிப்பு வழக்கை பொறுத்தவரை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியே விசாரணை நடைமுறைகள் உள்ளன, என்பதைச் சுட்டிக்காட்டும் சட்ட வல்லுநர்கள், 313 ஸ்டேட்மெண்ட் தொடர்பான வழ்க்கமான நடைமுறையைப் பின்பற்றவேண்டும், என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறார்கள்.

      இந்நிலையில், ஆகஸ்டு 1-ந் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, 8-ந் தேதிதக்கு வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார் நீதிபதி.  நேரில்  ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய தனது மனு மீதான உத்தரவு தள்ளிப்போனதில் ஜெ. மிகவும் டென்ஷனாக இருக்கிறார் என்கிறது கார்டன் வட்டாரம்.  தனது வழக்கறிஞர் டீமிடம்,  ''என்ன செய்வீர்களோ தெரியாது, 'நான் ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராகமாட்டேன்.  தீர்ப்பு எனக்கு சாதகமாக வரவேண்டும்'' என சீரியஸான குரலில் சொல்லியிருக்கிறாராம் ஜெ.

--நமது நிருபர், நக்கீரன்..2011 ஆக. 03-05
*********************

பொது ஜனம்; இதுக்குத்தான் லோக்பால் மசோதாவுல புரிதமரை சேர்க்கத்தேவையில்லை என்று ரொம்ப அக்கறையா சொல்லுச்சா! இந்த பதவியை வைச்சே கேஸ்ல எஸ்கேப் ஆவலாம் என்பதற்காகவா! 


பொது ஜனம்; இதுங்க! இதுமாதிரி தன்னோட வழக்கில எஸ்கேப் ஆயிட்டேயிருக்கும் என்பதால தான், லோக்பால் மசோதாவில பிரதமரையும் சேர்க்க சொல்றாங்க! மக்கள்!

பொது ஜனம்; இந்த லட்சணத்துல இது எல்லோர் மேலேயும் பொய் கேஸ் வேற போடுது! நிஜக் கேசுல குற்றவாளியே பயப்படாம இருக்கும்போது பொய்க் கேசுக்கு யாராவது பயப்படுவாங்களா!

பொது ஜனம்; இப்பவாவது நீதிமன்றம் விரைவா ஒரு நல்ல தீர்ப்பு தரணும்! இந்த பொம்பளைக்கு கடுமையான தண்டனையைத் தரணும்!



No comments: