Pages

Thursday, 4 August, 2011

எங்க மகன் சாவுக்கு ஜெ.அரசு தான் காரணம்!...மாணவனின் பெற்றோர் குமுறல்.

     
 மாணவன் சாவில் அரசியல்! ஸ்டாலின் தடாலடி கைது பின்னணி!

னியன்று காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுக்க ஒருவித பதட்டம் பரவ ஆரம்பித்தது.  செல்போன்களிலும் எஸ்.எம்.எஸ். களிலும் 'மு.க.ஸ்டாலினைக் கைது பண்ணிட்டாங்களாமே?' என்ற பதன்ன விசாரணைகள் அங்கங்கே நடக்க.... தொலைக்காட்சி சேனங்களும் 'திருவாரூர் அருகே ஸ்டாலினை அதிரடியாக சுற்றி வளைத்து போலீஸ் கைது செய்தது' என ஸ்கோரல் செய்திகளை வெளியிடத்தொட்ங்கின.  இது பதட்டத்தின் டெஸிபல்ஸை மேலும் தீவிரமாக்கக், கொந்தளித்துப்போன தி.மு.க தொண்டர்கள் அங்கங்கே சாலை மறியலிலும் பஸ் மறியலிலும் குதித்தனர்.  பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது.  புதுவை மாநிலத்திலும் அனலான அனல்.
     திருவாரூரில் என்ன நடந்தது?
          பலரிடமும் பலதரப்பிடமும் பேசி நாம் திரட்டிய தகவல் கீழே, 

29-ந் தேதி இரவு திருச்சி வந்த மு.க.ஸ்டாலின் 30-ந் தேதி காலை தஞ்சையில் இருந்து தன் விசிட்டை ஆரம்பித்த்தார்.  அவரோடு டி.ஆர்.பாலு எம்.பி.,  மத்திய மந்திரி பழனி மாணிக்கம், திருவாரூர் மா.செ.பூண்டி கலைவாணன், மாஜி மந்திரி மதிவாணன், அழகு.திருநாவுக்கரசு போன்றோர் அணிவகுத்தனர்.  திருத்துறைப்பூண்டியில்  மறைந்த கட்சித் தொண்டர் மொழிப்போர் தியாகி பஷீர் முகமதுவின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, மாலையில் மன்னார்குடி தி.மு.க. பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதுதான் அவரது பயணத்திட்டம்.


     இதற்கிடையே சமச்சீர் கல்வி போராட்டத்தால் அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் சக மாணவர்களோடு வீடு திரும்பிக்கொண்டிருந்த விஜய் என்ற 12 வயது கொரடாச்சேரி ஆரசு பள்ளி மாணவன், பேருந்து விபத்தில் சிக்கி இறந்திருந்ததால், வழியில் கிளரியம் கிராமத்தில் இருக்கும் விஜய்யின் வீட்டிற்கும் துக்கம் விசாரிக்கச் சென்றார் ஸ்டாலின்.  அது சி.பி.எம. தோழர்களின் இல்லம். 


மாணவனின் பெற்றோரான சேகரும் அமுதாவும் 'ஐயா, விபத்து நடந்த உடனே உங்க மாவட்ட செயலாளர்தான் ஸ்பாட்டுக்கு வந்தார்.  காயம் பட்டவங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வச்சார்.  இருந்தும் எங்க விஜய்யைக் காப்பாத்த முடியலை.  கூடவே இருந்து எல்லா உதவியும் செஞ்சதோட, மாவட்ட தி.மு.க சார்பில் 50 ஆயிரம் ரூபாயை எங்களுக்குக் கொடுத்துட்டுதான் கிளம்பினார் உங்க மாவட்டம்" என்று அந்த நிலையிலும் நெகிழ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஸ்டாலின்.

     அங்கிருந்து திருவாரூர் வழியாக திருத்துறைப்பூண்டிக்குப் போய்க்கொண்டிருந்த ஸ்டாலினின் கான்வாயை ஆலத்தம்பாடி அருகே, ஆக்ஷன் படங்களில் வருவது போல் சர்...புர்... என சீறிவந்த போலீஸ் வாகனங்கள் வழிமறித்தன.  அதிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சரசரவென குதித்தனர்.  இதைக்கண்டு ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் திகைத்துப்போக...

      போலீஸ் டீம் ஸ்டாலின் காருக்குள் பார்வையால் துழாவியது? ஸ்டாலினோ, நாங்க என்ன தீவிரவாதிகளா?  உங்களுக்கு என்ன வேணும்?' என்றார்.  போலீஸ் டீமோ 'உங்க மா.செ.வை அழைச்சிட்டுப்ப்போக வந்திருக்கோம்' என்றது.  'என்னவழக்கில் விசாரிக்கப்போறீங்க?' என்று ஸ்டாலின் கேட்க அதற்கு பதில் இல்லை.  'சரி காரை எடுங்கப்பா நாம போவோம்' என்று ஸ்டாலின் கிளம்ப... குபுக்கென ஒரு போலீஸ் வேன் ரோட்டை மறித்து நின்றது.  ஸ்டாலினோடு இருந்த மா.செ.பூண்டி கலைவாணனை பிடித்து இழுக்க ஆரம்பித்தனர்.  டென்ஷனான ஸ்டாலின் தன் காரில் இருந்து  இறங்கி 'எஃப்.ஐ.ஆர். காப்பி இருக்கா? வாரண்ட் இருக்கா?  காட்டுங்க, நாங்களே கலைவாணனை அனுப்பி வைக்கிறோம்' என்று சொல்ல, போலீஸோ எங்களிடம் கலைவாணனை ஒப்படையுங்கள் என்றனர் உறிதியாக.


     ஸ்டாலினோ 'இது அராஜகம்' என்று மறியலில் இறங்க... காவல்துறை அதிகாரிகளோ, 'எல்லோரையும் கைது செய்கிறோம்' என்றனர்.  உடனே ஸ்டாலின், கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர் எல்லோரும் அந்த வேனில் ஏறினர்.  போலீஸோ, அரைமணி நேரத்தில் வரவேண்டிய திருவாரூருக்கு நான்கு மணிநேரம் ஊர்வலமாக ஸ்டாலினை அழைத்து வந்தனர்.  பின்னர் கலைவாணனை மட்டும் தங்கள் வசம் வைத்துக்கொண்டு ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் மதியம் 2 மணிக்கு விடுவித்து விட்டார்கள்.  கைது டீமில் இருந்த ஒரு காக்கி ''எப்படியாவது கலைவாணனைக் கைது செய்துடணும்னு எங்களுக்கு உத்தரவு வந்தது.  விபத்தில் இறந்த மாணவனின் குடும்பத்தார், அவன் படித்த பள்ளியின் ஆசிரியர்கள்னு பலர்ட்ட புகார் கேட்டும் எல்லோரும் பொய்ப்புகார் தரமாட்டோம்னு மறுத்துட்டாங்க.  கடைசியா அ.தி.மு.க.காரரான பெருமாளகரம் டீக்கடை பாஸ்கரனிடம், புகாரை எழுதி வாங்கினாங்க.  கலைவாணனின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டும் வேலையும் நடக்குது.  அவர்மீது குண்டாஸ் கூட பாயலாம்'' என்றார் கிசுகிசுப்பாக.

     கலைவாணன் மீது புகார் கொடுத்த அ.தி.மு.க. பாஸ்கரனோ 'எங்க மா.செ. காமராஜ் சொல்லாம நான் யார்ட்டேயும் வாய்திறக்க மாட்டேன் என்றார்.

      தஞ்சை சரக டி.ஐ.ஜி ரவிக்குமாரோ ''பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் கலைவாணனை தேடினோம்....  ஸ்டாலினுடன் அவர் இருப்பதாக தகவல் வந்தது.  மடக்கி கைது செய்யப்போனோம்.  அப்ப ஸ்டாலின் எங்களையும் கைது பண்ணுங்கன்னு சொன்னார்.  உங்கமேல் புகார் இல்லைன்னு மறுத்தோம்.  ஆனா அவரா போலீஸ் வேனில் ஏறிக்கிட்டு வந்தார்'' என்றார்.

     விபத்தில் இறந்த மாணவன் விஜய்யின்  பெற்றோரான சேகரையும் அமுதாவையும் சந்தித்தோம்.  கண்ணீருடன் பேசிய அவர்கள் ''எங்க விஜய் சாவுக்கு இந்த அரசு தான் காரணம்.  சாலையில் இருக்கும் பள்ளத்தால் தினசிரி இங்கே விபத்து நடக்குது.  அதனால் தான் எங்க பிள்ளையைப்  பறிகொடுத்திருக்கோம் என்றார்கள் தேம்பலுடன்.

     விஜய்யின் பள்ளிக்கூட நண்பர்களான சந்துருவும், செல்வமும் ''எந்த பஸ்ஸூம் எங்க ஊர்ல நிக்கமாட்டேங்குது.  பூண்டி பஸ் மட்டும் தான் நிற்கும்.  அந்த பஸ்லதான் எங்களை செக்கர் ஏத்திவிட்டார்.  ரோட்டுப் பள்ளத்தில் பஸ் நொடிச்சப்ப எதிர்ல வந்த லாரியில் எங்க பஸ் மோதிடிச்சி.  அதில் விஜய் மட்டும் கீழே விழுந்து அடிபட்டு இறந்துட்டான்.  பஸ்ல போறதுக்கே பயமா இருக்குண்ணே'' என்கிறார்கள்.  அந்த விபத்தை வைத்து அரசு நட்த்தும் அரசியல் விளையாட்டுக்களை அறியாதவர்களாய்...


     போகிற போக்கைப் பார்த்தால் 'உங்கள் கம்பெனியில் நீங்கள் வேலை கொடுத்ததால் தான் அவர் வேலைக்கு வந்தார்.  வழியில் விபத்தில் இறந்தார்' என்றபடி யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் ஜெ.போலீஸ்.  எச்சரிக்கை.


---செல்வகுமார், பகத்சிங். நக்கீரன் 2011 ஆக 03-05

*************************

பொது ஜனம்; இந்த ஜெயலலிதா ஏன்? ஆட்சிக்கு  வந்த இரண்டு மாசமா தி.மு.க வையே  சொறிஞ்சிக்கினு இருக்குது!

பொது ஜனம்; இப்ப அதுதான் தலைபோற விஷயம் அதுக்கு? மத்ததையெல்லாம் பத்தி அதுக்கு என்ன கவலை? தமிழக  மாணவர்களின்  பாடப்புத்தகத்தை டார்...டாரா கிழிச்சு நாசமாக்கிட்டுது. இப்ப தி.மு.க வை கிழிக்கப்பார்க்குது.

பொது ஜனம்; கிழிக்கப்பாக்குதா? இல்லை மக்களிடையே பாப்புலாரிட்டியத் தேடிக் கொடுக்குதா?

பொது ஜனம்; இந்த அறிவுக்கூடவா அதுக்கு இல்லை!

பொது ஜனம்; நாட்டில பட்டப்பகல்ல வீடு புகுந்து தினம் தினம் கொலை, கொள்ளை பண்ணிகிட்டு இருக்கானுங்க! அவனுங்க ஒருத்தனையும் பிடிக்க மாட்டேங்குதே!

பொது ஜனம்; ஆமாய்யா! தினம் 50 சவரன், 100 சவரன் -ன்னு மானாவாரியாக் கொள்ளை நடக்குது. ஆளையும் பட்டப்பகல்ல காலி பண்ணிடறாங்க! பொம்பளைங்க பகல்லேயே நடமாட முடியலே!


பொது ஜனம்; ஒரு பகுதியில கொள்ளை நடந்தா, அடுத்து அந்த பகுதியில கொள்ளை நடக்க கொஞ்ச நாளாகும்! ஆனா ஜெயலலிதா ஆட்சியில, கொள்ளைக்காங்க பயப்படாம தொடர் கொள்ளைகளா! தினம் தினம் கொலை, கொள்ளை பண்ணிகிட்டு இருக்கானுங்களே! அவனுங்களை இந்த போலீஸ் பிடிக்காதா? இல்லை கொள்ளைக்காரனுங்க கூட போலீஸ் கூட்டுநாட்டு வைச்சிருக்குதா!

பொது ஜனம்; நடக்கிறதா பார்த்தா போலீஸ் திருடன்களோட கூட்டுநாட்டி வைச்சிருக்கிற மாதிரிதான் தெரியுது!

பொதுஜனம்; ஜெயலலிதா இந்த நாட்டிற்கு வந்த ஒரு சாபக்கேடு!


No comments: