Pages

Monday, 12 September, 2011

பொதுச்சொத்தைக் காப்பதற்காக போலீஸ்காரர்களை வைத்து கொலை செய்தேன்! ஜெ!


பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு ஏன்? முதல்வர் விளக்கம் : நிவாரணம் அறிவிப்பு

சென்னை: "பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மூன்று பேர் குடும்பத்திற்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். வன்முறையை கட்டுப்படுத்தவே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை: தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான, இம்மானுவேல் சேகரனின், 54வது நினைவு நாளை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சியினரும் நேற்று மரியாதை செய்தனர். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவதை, போலீசார் தடை செய்திருந்தனர். தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற, ஜான்பாண்டியனை, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் போலீசார் கைது செய்தனர். ஜான் பாண்டியன் கைதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில், பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் சாலை மறியல் செய்தனர். கலைந்து செல்ல வலியுறுத்திய போலீசார் மீது கற்களையும் வீசி, வன்முறையில் ஈடுபட்டனர். வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம் மீதும் தீவைத்தனர். வன்முறையாளர்கள், போலீஸ் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்தை பாதுகாக்கும் வகையிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதில், டி.ஜ.ஜி., சந்தீப் மிட்டல், டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். ஜான்பாண்டியன் கைதைக் கண்டித்து, மதுரை சிந்தாமணி சந்திப்பிலும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்தனர். கல்வீச்சு தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக அவர் துப்பாக்கியால் சுட்டதில், இருவர் காயமடைந்தனர். சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வன்முறை செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

............தினமல(ம்)ர்.... 12.09.2011

**************************
பொது ஜனம்; பொதுச்சொத்தை காப்பதற்காக மக்களை சுட்டுச்சாம்!


பொது ஜனம்; அப்ப! இந்த பொம்பளைக்கு! நீதிமன்றம் இரண்டு வருடம் தண்டனை கொடுத்தது என்பதற்காக  தர்மபுரியில மூன்று கல்லூரி மாணவிகளை பேருந்திலேயே வைச்சு எரிச்ச அ.தி.மு.க அல்லக்கைங்க மூன்று பேரையும் ஏன்? இதுவரைக்கும் சுடலை!?


பொது ஜனம்; அதானே! இதுவரைக்கும் சுட்டுத்தள்ளனும்னு ஒரு அறிக்கையும் விடலையே!  

பொது ஜனம்; இத்தனைக்கும் அவனுங்க மூன்று இளம் மாணவிகளின் உயிரை எடுத்திருக்கானுங்க! பெத்தவங்களை துடிக்கவைச்சிருக்கானுங்க!
பொது ஜனம்; இப்ப போலீஸ்காரங்ககிட்ட சொல்லி உடனே சுட்டுரும்! இல்லைன்னா உடனே தூக்கில போட்டுரும்! சட்டசபையில தீர்மானம் கூட இயற்றும்! அந்த பொம்பளையைப் பத்தி தெரியாது! ரொம்ப! ரொம்ப! தகிரியமான பொம்பளை!

பொது ஜனம்; அப்படியா! 

பொது ஜனம்; ஆமாம்பா! நிறைய நெஞ்சு தகிரியம்பா! உச்சநீதிமன்றமே பயப்படுதாம்மே!

பொது ஜனம்; அப்ப ஜெயலலிதாவைத்தான் சுடனும்! எத்தனை பொதுச்சொத்தை நாசம் பண்ணியிருக்குது! (புதியத் தலைமைச்செயலகம், சமச்சீர் கல்வியை இழுத்தடித்து நாசம், மெட்ரோ திட்டம் முடக்கம்)

பொது ஜனம்; ஒரு உயிரைக்காப்பதற்காக, இல்லை பல அப்பாவி மக்களின் உயிர்களை காப்பதற்காக போலீஸ்காரங்க சுட்டாங்கன்னு சொன்னாலும், ஏதோ ஒரு ஞாயம் இருக்குது! (அதையும் போலீஸ்காரங்கதான் சொல்லணும், அவங்கதான் ஸ்பாட்ல இருந்தவங்க!) இது என்ன? டகால்டி அறிக்கையா இருக்குதே! பொது ஜனம்; இதுக்கு அறிக்கை விடக்கூடத் தெரியலை! இது என்னத்துக்கு? சும்மா முதலமைச்சர் நாற்காலியில உக்காந்து தேய்ச்சுகிட்டு இருக்குது!

பொதூ ஜனம்; இந்த கலவரம் அடங்காது போல இருக்கே! நாட்டுல இந்த பொம்பளையே தீவிரவாதத்தை வளர்த்து விடும்னு நினைக்கிறேன்!

பொது ஜனம்; இந்த அறிக்கையை வைச்சே நீதிமன்றத்துல கேஸ் போடலாம்!

பொது ஜனம்; சசிகலாவை திருப்தி படுத்த இந்த துப்பாக்கி சூடா?

பொது ஜனம்; அப்ப காமராஜர் காலத்துல நடந்த தேவேந்திரகுலம், மற்றும் தேவர் சமூகக் கலவரத்தை, இப்ப கொம்பு சீவி விடறாங்க டோய்!

பொது ஜனம்; 1957 இல் நடந்த மிகப்பெரிய ஜாதிக் கலவரத்தை ஜெயலலிதாவே உருவாக்கிடுச்சு!

பொது ஜனம்; தமிழ் நாட்டுல 144 தடையுத்தரவை முதல் முதலா இப்பத்தான் இன்றைய மக்கள் பார்க்கறாங்க! 

பொது ஜனம்; கலைஞர் ஆட்சியிலே இது மாதிரி எல்லாம், எதுவும் நடக்கவேயில்லைய்யா!  

பொது ஜனம்; அவருக்கு தகிரியம் கம்மி! மனிதாபிமானம் ஜாஸ்தி!

பொது ஜனம்; ஆமா! ஜெயலலிதா அமைதிப்பூங்காவா இருந்த தமிழகத்தை அராஜகப் பூங்காவாக மாத்திடுச்சி!

பொது ஜனம்; இது யார்யா? அப்பாவி மக்கள் மேல துப்பாக்கி சூடு நடத்திறதுக்கு! 

பொது ஜனம்; மக்கள் உயிர்களை இதோட தலை மயிரா? நினைச்சுடுச்சோ? 

பொது ஜனம்; இதை சும்மா விடக்கூடாது! மனிதவுரிமை ஆணையத்திடம் முறையிடனும். 

பொது ஜனம்; இதுக்காகவே ஆட்சியை கலைக்கலாம்! போலீஸ்காரங்க கூட வருத்தப்படுவாங்க போல இருக்குது! இது மக்களோட உயிரைப்பத்தி கவலைப்படாம போலீஸ்காரங்களை பத்தி கவலைப்படுதே!

பொது ஜனம்; போலீஸோட வேலை மக்கள் உயிரைப் பதுகாக்கிறது தானே! அதுக்குத் தானே சம்பளம்? அந்த சம்பளத்தை மக்களை கொலை செய்வதற்காக மாத்திட்டாங்களா?

பொது ஜனம்; மக்கள் பணத்தை வாங்கிட்டு மக்களையே கொலை செய்யறாங்களேய்யா! இதுக்கு இந்த ஜெயலாலிதா உடந்தை! இது சொல்லித்தான் சுட்டிருக்காங்க!

பொது ஜனம்; எந்த மாநிலத்திலேயும் இந்த மாதிரி மட்டரகமா அறிக்கை விடமாட்டாங்கய்யா! 

பொது ஜனம்; சட்டமன்றத்தில இருக்கிற, கம்யூனிஸ்ட்டுகள், திராவிட பாதுகாவலர்களான, விஜயகாந்த், இன்னும் மக்கள் நல அல்லக்கைகள் எல்லாம் என்ன பன்றாங்க?

பொது ஜனம்; அவங்க உயிராப் போச்சு! "தலித்தோட" உயிர்கள் தானே!

பொது ஜனம்; சனிக்கிழமையன்று, கமுதி மாணவனை வெட்டிக் கொன்றவர்களையும் இது வரைக்கும் இந்த தமிழகப் போலீஸ் கைது செய்யலை! இதுல ஏதோ உள்நோக்கம் இருக்குது! சசிகலா ஜாதி மேட்டர் இதுல ஒளிஞ்சுகிட்டு இருக்குதோ?

பொது ஜனம்; அவ்வளவு ஆபத்து வரப்போகுதுன்னா! முன்னாடி நாளிலேயே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்கலாமே! 

பொது ஜனம்; அதானே! இதோட அல்பத்தனமான மனப்பான்மைக்காக எத்தனைப் பேரை நடு இரவிலேயே கைது பண்ணி துன்பபடுத்துது! அவங்க வீட்டு பிள்ளைகள், குடும்பங்கள் எந்த கதிக்கு ஆளாகும்? என்பதை பத்தியெல்லாம் கவலைப்படுற ஆளா! இந்த பொம்பளை!

பொது ஜனம்; இதுக்கு அதெல்லாம் இருந்தாத்தானே!

பொது ஜனம்; தன் சுயநலத்துக்காக அடுத்தவங்களை துன்பப்படுத்தி பார்க்கிற ஆட்சி!

பொது ஜனம்; இதில் நீதிமன்றம் தன்னிச்சையாக தலையிடணும்!

பொது ஜனம்; ஆளுநர் இது குறித்து அறிக்கை கேட்கணும்!

பொது ஜனம்; இன்னும் என்னென்ன கொடுமைகள் இந்த பொம்பளையால நடக்கப்போகுதோ? தெரியலையே?No comments: