Pages

Thursday, 8 September, 2011

உங்கள் தகுதிக்கு இந்த வழக்கில் ஆஜராகலாமா?சுப்ரீம் கோர்ட் அதிரடி! ஜெ ஷாக்!
   டந்த பதினைந்து வருடங்களாக விதவிதமான காரணங்களைச் சொல்லி நூற்றுக்கும் மேற்பட்ட வாய்தாக்களை வாங்கி நொண்டியடித்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கை வெறும் அரைமணிநேரம் நடந்த விசாரணையின் மூலம் உறுதியான இறுதி நிலைக்கு கொண்டுவந்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

     இன்று வரப்பாக பேசப்படும் 2ஜி வழக்குக்கு வெகுகாலம் முன்பே சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு ஜெ-சசி-சுதாகரன்-இளவரசி ஆகியோர் குற்றவாளிகளாக்கப்பட்டிருக்கும் வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்ப்பு வழக்குதான்.  2ஜி வழக்கில் நடக்கும் தினசரி விசாரணை, குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க நெருக்கடி போன்ற கண்டிஷன்கள் இந்த வழக்கிற்கும் பொருந்தும் என சுப்ரீம்கோர்ட் பல வருடங்களுக்கு முன்பே உத்தரவிட்டது.

     அதையெல்லாம் மீறி சட்டத்தின் சந்துபொந்துகளையெல்லாம் டெக்னிக்கலாக பயன்படுத்தி பல வருடங்கள் நடத்தப்பட்ட இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரடியாக கோர்ட்டில் ஆஜராகி குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லவேண்டும்.  அதற்குப் பிறகு வழக்கறிசர்கள் இறுதி வாதம் செய்யவேண்டும் உடனே தீர்வு வந்துவிடும்.

     இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை என நீதிமன்றம் முடிவுக்கு வருமானால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது எனபதால் இந்த வழக்கை மேலும் இழுத்தடிக்க "குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகள் பதில் சொல்லும் நடைமுறையை எழுத்துப்பூர்வமாகவோ, வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ செய்கிறேன்" என சிறப்பு நீதிமன்றத்திலும், பிறகு கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும், பிறகு கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும் வாதாட, கோரேட் ஏற்கவில்லை.

      உடனே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  அது நீதியரசர்கள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  ஜெவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ்சால்வே, "எனது கட்சிக்காரருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளது.  பல முக்கியமான வேலைகள் இருக்கிறது.  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த குற்றங்களுக்கு எழுத்துப்பூர்வமாகவோ, வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ பதிலளிக்கிறேன் என சொல்வதில் என்ன தவறு" என வாதிட்டார்.


     இதைக்கேட்ட நீதிபதி பண்டாரி டென்ஷனாகிவிட்டார்.  "குற்றவாளிகள் சொல்லும் கதைகளையெல்லாம் கேட்க வேண்டுமென்ற அவசியம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இல்லை.  வழக்கை இழுத்தடிப்பதைத் தவிர வேறெந்த நோக்கமும் இந்த மனுவில் இல்லை" என்ற நீதிபதி,  "உங்கள் தகுதிக்கு இந்த வழக்கில் ஆஜர் ஆகலாமா?" என ஹரிஷ் சால்வேயிடம் கேட்டவர்,  'ஜெ. நிச்சயம் நேரில் ஆஜராகவேண்டும்" என்றார்.

     உடனே வழக்கிறிஞர் சால்வே, "எந்த தேதியில் ஆஜராக வசதியாக இருக்கும் என ஜெ.விடம் கேட்டுச் சொல்கிறேன்" என இழுத்தடித்தார்.

     'நீங்கள் ஜெ.விடம் இருந்து தெளிவான அறிவுரை பெறாமல் வந்திருக்கிறீர்கள்.  குற்றவாளிகள் நேரில் ஆஜராகி குற்றச்சாட்டுகளை மறுத்தால் தான் அவர்கள் பக்க நியாயம், நீதிபதிகளுக்குப் புரியும். கோர்ட்டில் ஆஜராகும் ஜெ.வுக்கு உரிய பாதுகாப்பும் அவருக்கு வசதியான தேதியில் ஆஜராவதை உறுதிப்பட்உத்த கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிடுகிறேன்" என நீதிபதிகள் சிரித்துக்கொண்டே ஜெ. நேரில் ஆஜராவதிலிருந்து தப்பமுடாயது எனபதை வலியுறுத்திக் கூறிவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்து வைத்தார்கள்.

     சுப்ரீம் கோர்ட் அதிரடி, ஜெ.வை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


...பிரகாஷ்-நக்கீரன் செப்.07-09,2011
*********************
பொது ஜனம்; உச்சநீதிமன்றம் எத்தனை தடவை காரிமுழிஞ்சாலும் துடைச்சு போட்டுக்கும் போல இருக்கே!

பொது ஜனம்; இதுல ஜெயிக்கறதுக்குத்தான் வாஸ்து பார்த்து பழைய சட்டமன்றத்துலேயே உக்கார்ந்துச்சா!

பொதுஜனம்; அப்ப கொலைக்குற்றம் பண்ணிட்டுக்கூட வாஸ்து பார்த்து உக்கார்ந்தா தண்டனையிலேயிருந்து தப்பிச்சுடலாம். நீதிபதியோட பேனா ஆட்டோமேட்டிக்கா தீர்ப்பை மாத்தி எழுதிடும்.

பொது ஜனம்; கயிறு கழுத்துக்கு நெருங்கிடுச்சு டோய்! மொத்ததுக்கும் ஆப்பு தான்.
No comments: