Pages

Tuesday 4 October, 2011

ஜெயலலிதாவே! நீயும் ஓரு பெண்ணா?....குமுறும் வாச்சாத்தி!


....வாச்சாத்தி! ஜெ.அரசின் கருப்பு நாள்!

க்கீரனால் முதன்முதலில் உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்ட வாச்சாத்தி கொடூரத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.  பத்தொன்பது வருட காத்திருப்பிற்குப் பின், தாமதமானாலும் தர்மம் தோற்காது என்று நிரூபிக்கும் வகையில் வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு அதிரடியாக வந்திருக்கிறது.
     அரூர் அருகில் இருக்கும் மலையடிவார கிராமங்களில் ஒன்றுதான் வாஞ்ஞாத்தி ஏறத்தாழ 250 குடிசை வீடுகளைக் கொண்ட இந்த இயற்கை வளம் சூழ்ந்த கிராமத்தில் பழங்குடி இனமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் இருக்கும் சித்தேரி மலைப்பகுதியில் உயர்ந்தவகை சந்தன மரங்கள் அதிகம் என்பதால், ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் துணையோடு மரக்கடத்தல் பேர்வழிகள் சந்தன மரங்களை சுவாஹா செய்தபடி இருந்தனர்.  இவர்களுக்கு முதலில் பணிந்து வேலைபார்த்த பழங்குடி இன மக்கள் ஒருகட்டத்தில் 'திருட்டு மரம் வெட்ட எங்களை கூப்பிடாதீர்கள்' என்று போக மறுத்தனர்.  இந்த நிலையில் மரக்கடத்தல் விவகாரம் வெளியே கசிய ஆரம்பித்தது. 



அப்போது ஜெ. முதல்வராகவும் செங்கோட்டையன் வனத்துறை அமைச்சராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

     இதில் கொதித்துப்போன வனத்துறையினர், வாச்சாத்தி மக்கள் தான் சந்தன மரம் உள்ளிட்ட வனவளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று விவகாரத்தை திசை திருப்ப, வருவாய்த்துறையினரோடும் காவல் துறையினரோடும் வாச்சாத்தி கிரமத்திற்கு ரெய்டுக்கு போனார்கள்.

     இவர்களால் ரெய்டு நடந்த 20.06.1992, ஒரு கறுப்பு நாளானது.

      சோதனை என்ற பெயரில் வாச்சாத்திக்குள் நுழைந்த இந்த டீம் வீடுகளையெல்லாம் அடித்து நொறுக்கியது.  கண்ணில் பட்ட ஆண்களையெல்லாம் அடித்து நொறுக்கியது.  பெண்களை மானபங்கப்படுத்தியதோடு ஏரிக்கரைக்குத் தூக்கிப்போய் கற்பழிப்பு கொடூரங்களையும் நடத்தியது.  இதோடு நிறுத்தாமல் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 133 பேரை கைது செய்து ஸ்டேஷனில் வைத்து, அங்கும் பெண்களை வேட்டையாடியது. 

      இவ்வளவு நடந்தும் இந்த விவகாரம் நான்கைந்து நாள்வரை வெளியே வரவில்லை.

      முதன்முதலில் இந்தத் தகவல் நம் நக்கீரனுக்குத்தான் வந்தது.  அப்போது அந்த விவகாரத்தை விசாரித்து ரிப்போர்ட் தந்த அப்போதைய நக்கீரன் நிருபரும், தற்போதைய ஒசூர் கோர்ட் வழக்கறிஞருமான ஜெயப்பிரகாஷ், அந்த நாட்களை இப்படி நினைவு கூறுகிறார்......

      "அப்ப அரூர் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வாக இருந்த அண்ணாமலை எனக்கு இந்தத் தகவலை அனுப்பி, உடனே இந்தக் கொடுமையை விசாரிச்சி நக்கீரனில் அம்பலப்படுத்துங்கன்னார்.  இதைக்கேட்டு திகைத்துப்போன நான் அரூர்ல இருந்து சைக்கிள்ல வாச்சாத்திக்கு கிளம்பினேன்.  வேற போக்குவரத்து வசதி அப்பக் கிடையாது.  பெரியாம்பட்டு கூட்ரோடு போய் அங்கு காத்திருந்த தோழர்களோட வாச்சாத்திக்குள் போனேன்.  ஊரே பயங்கர நிணப்தத்தில் இருந்தது.  அங்க இருந்த எந்தக் குடிசையிலும் கூரைகள் இல்லை.  எல்லாம் பிய்த்து எறியப்பட்டிருந்தது.  வீடுகளில் இருந்த ஜன்னல் கதவுகள் எல்லாம் உடைக்கப்பட்டிருந்தன.  ஊர்ல ஒருத்தரையும் காணலை.  கூட வந்திருந்த கம்யூனிஸ்டு தோழர்கள், பயப்படாம எல்லோரும் வாங்கன்னு கூப்பாடு போட்ட பிறகுதான், தேட்டங்களிலும், காட்டுப்பகுதியிலும் பீதியோடு ஒளிந்துகொண்டிருந்த மலைமக்கள் ஒவ்வொருத்தரா வெளில வந்தாங்க.  எங்களை நாசப்படுத்திட்டானுகன்னு பெண்கள் கதற, சிலர் பேசக்கூட திராணி இல்லாதவங்களா இருந்தாங்க.  அவங்க வீடுகளுக்குள் ஒரு பொருளும் இல்லை.  எல்லோரும் ஊர் முகப்பில் இருந்த கிணத்தைக் கொண்டு போய் காட்டினாங்க.  கிணத்துக்குள் சைக்கிள்கள், கயித்துக் கட்டில்கள், இரும்புச் சாமான்கள் எல்லாம் வீசப்பட்டிருந்தன.  அதிகாரிகளின் வக்கிரத்தாண்டவத்தை ஊரின் நிலையே காட்டியது.  நாசப்படுத்தப்பட்ட பெண்களை படம் எடுக்காதீங்கன்னு தடுத்தாங்க.  அப்படியும் அவங்களை சமாதானப்படுத்தி படம் எடுத்தேன்.  அதுமட்டுமல்ல அவங்க வீடுகளில் இருந்த செம்பு, பித்தளைப் பாத்திரங்களையெல்லாம் லாரியில் எடுத்துட்டுப் போய் அரூர்ல இருக்கும் பழைய இரும்புஃகடைகளில் அதிகாரிகள் தரப்பு விற்கக்கொடுத்திருந்தது.  இதையும் அப்ப ஒரு டெம்போவுக்குள் ஒளிஞ்சிகிட்டு படம் எடுத்தேன்.  ரெய்டுக்குப் போன பெண் போலீஸ்காரங்கக் கூட அவங்க வைத்திருந்த பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பொருட்களை அள்ளிட்டுப் போனாங்களாம்.  இதையெல்லாம் அப்ப பரபரப்பா நக்கீரன்ல ரிப்போர்ட் பண்ணியதன் விளைவா, தமிழகமே இந்த அநீதியை கண்டிச்சி ஒன்று திரண்டது.  முறையாக வழக்கும் நடந்து ஒரு நல்ல தீர்ப்பும் கிடைத்திருக்கு" என்றார் உற்சாகமாக.

      குற்றம் சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.  இதில் 54 பேர்,  வழக்கு நடக்கும் போதே இறந்து போய்விட்டனர்.

      மீதமுள்ளவர்களில் 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 12 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், வனத்துறை முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி ஹரிகிருஷ்ணன், வனப்பாதுகாப்பு அதிகாரியான முத்தையன், மாவட்ட வனப்பாதுகாப்பு அலுவலர்களான லோகநாதன் மற்றும் பாலாஜி ஆகிய நான்கு பேர் உட்பட 198 பேருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனையும், முதன்மை அமர்வு நீதிபதி குமரகுருவால் வழங்கப்பட்டுள்ளது.  இவ்வளவு கொடூரங்களையும் அரங்கேற்றிய இந்தக் குற்றவாளிகள்.... இதற்கான தடயங்களை முழுமையாக அழிக்கவும் பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது நீதிமன்றம்.

     வாச்சாத்தி ஊர் கவுண்டரான பெருமாளோ  "அன்றைய சம்பவத்தை நாங்க இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காமாட்டோம்,.  அந்த வேதனையும் வலியும் இன்னும் மாறலீங்க.  அன்று அந்த பாதகர்களால் ஜெயா, சித்தரா, ஆமரக்கா, காந்திமதி, மல்லிகா, கம்சலா, மாரிக்கண்ணு, முத்துவேடி, பழனியம்மாள், சுகணா, பாப்பாத்தி, சின்னபாப்பா, லட்சுமி மாயி, சரோஜா, பூங்கொடி ஆகிய 18 பெண்கள் கொடூரங்களுக்கும் வக்கிரங்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்" என்றார் மனம் கனத்துப்போனவராய்.

      கருமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான காந்திமதி நம்மிடம் "அன்னைக்கு காலை 11:30 மணிக்கு எங்க தோட்டத்தில் வேலை செயதுகிட்டிருந்தோம், அப்ப லாரியில் வந்து இறங்கிய போலீஸ் என்ன? ஏது? என்று கூட கேட்கலை அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க... வலியால் துடித்து அய்யோ அம்மான்னு அலறி துடித்தோம்.  பிறகு ஊருக்குள் அழைத்துப்போய், ஆலமரத்தடியில் உட்காரவைச்சாங்க.  அப்பதான் தெரிந்தது இந்த கொடுமை எங்களுக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள அத்தனை பேருக்கும்னு.  மரத்தடியில் கூடியிருந்த கூட்டத்தில் அன்று மாலை 7 மணிக்கு, வயசுப் பெண்கள் 18 பேரை மட்டும், ஏய் நீ வாடி, நீ வாடின்னு மினி லாரியில் ஏத்தினாங்க.  பக்கத்தில் இருக்கும் ஏரிக்கரைக்கு கொண்டுபோய் ஒட்டுத் துணி இல்லாமல் உருவிட்டாங்க.  அப்புறம் எங்கள் வாழ்க்கையை சூறையாடிட்டானுக...  அங்கிருந்து இரவு 10 மணிக்கு வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டுபோய் அங்கும் அதிமிதி பண்ணினானுங்க.  அதோட எங்க ஊர் கவுண்டர் பெருமாளை எங்கள் 18 பேர் கையிலும் துடைப்பத்தை கொடுத்து அடிக்க சொல்லி ரசிச்சானுக.  இன்னும் கொடுமை என்னன்னா? எங்க ஊர் கவுண்டருக்கு சிறுநீர் கொடுத்து குடிக்க சொன்னானுக, எங்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு காலம் கடந்தாலும் சரியான தீர்ப்பு கிடைச்சிருக்கு" என்றார் கண்களில் நீர் திரள.

      லட்சுமிமாயியோ 'அதை என்னால் மறக்க முடியவில்லை அதோட பாதிப்பால் நோய்வாய்ப்பட்டு எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே செத்துப் போயிட்டாங்க.  எனக்கு இன்னும் கல்யாணமாகாததால் இப்போ அண்ணன் கூட இருக்கேன்" என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே.  ஊர் கவுண்டர் மனைவி குப்பு " என் கண் முன்னாடியே என் கணவரை அடித்து காலை ஒடிச்சாங்க.  தடுக்கப்போன என்னையும் அடித்து கையை முறிச்சிட்டாங்க" என்றார் கையைக் காட்டியபடியே...

     பரந்தாயி என்பவரோ "எங்க கிராமத்தையே அவனுங்க கைல இருந்து காப்பாற்றியது அப்போதைய எம.எல்.ஏ. அண்ணாமலை அய்யாதான்.  செல்வராஜ் என்ற வனத்துறை அதிகாரியை கொலை செய்ததாக எங்கள் தரப்பில் 108 பேரு மீதும் வழக்கு இருக்கு.  ஆனா செல்வராஜ் இப்பவும் உயிரோடுதான் இருக்கார்" என்றார் காட்டமாக.

     இதே நேரத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சிலர் கதறி அழுதவாறே நம்மிடம், "ரெய்டுக்குப் பிறகு சில நாட்களில் ரெய்டுக்குப் போனவர்களுக்கு அரசு பதக்கம் தரப்போகிறது என்று வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.  பதக்கத்துக்கு ஆசைப்பட்டு ரெய்டுக்குப் போகாத எங்க வீட்டுக்காரரும் ரெய்டுக்குப் போனதாக பெயர் கொடுத்துவிட்டார். அந்த பதக்க லிஸ்ட்டை எடுத்த சி.பி.ஐ. எல்லோரையும் சிக்க வைத்துவிட்டது" என்றார்கள்.

     போராடி நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.சண்மூகம் நம்மிடம் "முதன்முதலில் நக்கீரந்தான் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது.  இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கொடுமைகளுக்கு, அதிகார வர்க்கத்திற்கு எதிராக, நீதி தர்மம் வெல்லும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதற்கு சி.பி.ஐ. யின் நியாயமான விசாரணைதான் காரணம்.  ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு இன்னும் வழங்கவில்லை, வெறும் ரூ.15 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளனர்.  வீடுகளை சேதப்படுத்தியதற்கும் மற்ற இழப்பீடுகள் கிடைப்பதற்கும் சட்ட ரீதியான எங்கள் போராட்டம் தொடரும்" என்றார் அழுத்தமாய்...

     தரமத்தை நிலை நாட்ட நக்கீரன் எழுப்பிய குரல் வீண் போய்விடவில்லை எனபதையே வாச்சாத்தி தீர்ப்பு காட்டுகிறது. 
-வடிவேல் நக்கீரன் அக் 01-04,2011.

*************************************************************


பொது ஜனம்; ஜெயலலிதாவுக்கு என்ன? அரக்க மனமா இல்லை இரக்க மனமா?

பொது ஜனம்; இவ்வளவு பெரிய அராஜகத்தை பெண்களுக்கு எதிராக நடத்திட்டு, அங்கே ஒன்னுமே நடக்கலைன்னு செல்லிட்டு, எப்படி? பதவியில உட்கார்ந்து இருக்குது. இதுக்கு நல்ல சாவே வராது.

பொது ஜனம்; ஜெயலலிதாவை மானபங்கப்படுத்தியிருந்தா தெரியும்...இல்லைன்னா ஜெயலலிதா பொண்ணை இப்படி பண்ணியிருந்தா தெரிஞ்சிருக்கும்...?

பொது ஜனம்; ஏன்? கவர்னர் சென்னா ரெட்டி என்னை (ஜெயலலிதா) மானபங்கப்படுத்தினார்னு, நடக்கமுடியாத கிழ ஆளுமேல பழியைப் போடலை.

பொது ஜனம்; 1989 ல சட்டமன்றத்துல என் சேலையை தி.மு.க காரங்க உருவினாங்க என்று போலியா ஆர்ப்பாட்டம் பண்ணலை.

பொது ஜனம்; செங்கோட்டையன் பெண்ணுக்கு, மானபங்கம் நடந்திருந்தா எப்படியிருக்கும்! இவனெல்லாம் ஒரு மந்திரி....இவனை எந்திரி இவனுக்கும் நல்ல சாவு வராது.

பொது ஜனம்; சந்தனமரத்தையெல்லாம் ஈமெயில்லையா அனுப்புவானுங்க! ரோடு வழியாத்தானே லாரியில போகணும்....அப்ப ஏன் போலீசு பிடிக்கலை!

பொது ஜனம்; அப்ப இந்த மரத்தையெல்லாம் செங்கோட்டையனே ஆளை வைச்சி கடத்தி வித்திருப்பானோ! 

பொது ஜனம்; சந்தன மரத்தை கடத்தி, வித்தவனுங்க ஒருத்தனைக் கூடவா இதுவரைக்கும் பிடிக்க முடியலை. அவ்வளவு சின்ன பொருளா? 

பொது ஜனம்; கடத்தல் பண்ணி பணக்காரன் ஆனவனுங்களை சுடேன்! பார்ப்போம்!

பொது ஜனம்; அப்பாவி பொது மக்களையும், தலித் மக்களையும், பழங்குடி இனத்தவரையும் இந்த காக்கிகளின் துப்பாக்கிகள் சுடும். மற்றவர்களிடம் எச்சை காசு வாங்கி சாப்பிடும். விசுவாசத்தையும் காட்டும்.

பொது ஜனம்; இவங்களை எல்லாம் வாச்சாத்தி மக்கள் விருப்பப்படி சுட்டுத் தள்ளனும்யா!

பொது ஜனம்; இந்த தண்டனை போதாது...உச்சநீதிமன்றத்தில் இன்னும் அதிகமாக தண்டனை வழங்கணும்!

No comments: