Pages

Thursday, 25 March 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-13








தமிழ்த்திருமணம்


திருமணம் செய்து வைப்பதற்கு வேண்டியவை.

1. மங்கல-மங்கிலியத்தை மஞ்சள் நூலில் கோத்துக் கொள்க!
2. குத்து விளக்கு-மஞ்சள் குங்குமம் இட்டுப் பூச்சூட்டுக.
3. (i) அரிசி ஒரு தட்டில்-மங்கல நாண் வைக்க

(ii) ஒரு தட்டில் அரிசி, உதிரிப்பூ மஞ்சள் கலந்து வாழ்த்துதற்கு அமைக்க.
4. தேங்காய்-நாருடன், மஞ்சள் பூசி குங்குமம் இட்டு,
5. வெற்றிலை-10
6. பாக்கு-4
7. விரல் மஞ்சள்-4
8. வாழைப்பழம்-4
9. மலர்-3 முழம்
10. திருநீறு, குங்குமம்
11. கண்ணேறு கழிக்க-தட்டில் செம்மஞ்சள் நீர்



திருமணம் செய் சுருக்க முறை முற்றிற்று


மறுமணம்



காதலித்தோ காதலிக்காமலோ திருமணம் செய்துகொண்ட ஆண், பெண் ஆகிய இருவருள் ஒருவர் இறந்தாலோ, இறக்காவிடினும் வேறு காரணத்தால் பிரிய நேர்ந்தாலோ மற்றொருவர் மீண்டும் செய்து கொள்ளும் மணமே மறுமணம் எனப்படும். கணவனாயிருந்தவன் மற்றொரு பெண்ணை மணப்பதும் மறுமணந்தான்; மனைவியாயாருந்தவள் மற்றொரு ஆணை மணப்பதும் மறு மணந்தான். கணவனையிழந்த பெண் மற்றொரு ஆணை மணப்பது பற்றி இதற்கடுத்த பகுதியில் மனைவியை இழந்த ஆண் மற்றொரு பெண்ணை மணப்பது பற்றிப் பெரியார் என்ன கூறியுள்ளார் எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஓர் ஆண் தன் மனைவியைப் பிரிந்தோ பிரியாமலோ எத்தனை பெண்களை வேண்டுமாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அறுபதாயிரம் உச்சவரம்பு என்று கொள்ளலாம். அதற்குமேல் யாரேனும் மணந்து கொண்டது தெரிந்தால் இந்த உச்சவரம்பை மாற்ற நேரலாம். இதற்கு எந்த தடையுமில்லை. இந்து மதக் கடவுள் இதை ஆதரித்துள்ளன. சாத்திரங்கள், புராணங்கள் எல்லாம் இதை ஆதரிக்கின்றன. நடப்பிலும் இதை ஆதரித்தே பலரும் நடந்து கொண்டு வந்தனர். பகுத்தறிவியக்கம் தோன்றி அதற்கு ஒரு கட்டுப் பாட்டை ஏற்படுத்தியது என்பது தவிர வேறு யாரும் அல்லது எதுவும் இம்மணத்தை எதிர்க்கவில்லை.
ஆகவே இதுபற்றிக் கருத்துக் கூறி மாறுதலையும் சீர்த்திருத்தத்தையும் ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை பெரியாருக்கு ஏற்படவில்லை. ஆனால், மனைவி இறக்காத நிலையில் ஒரு கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டாயின. மனைவி இறந்து விட்டால் கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதில் தவறு இராது. மனைவி இருக்கும்போதே அவள் கணவன் மற்றொரு பெண்ணை மணப்பது கருத்து மாறுபாட்டுக்குரியது. ஒரு மனிதன் ஒரு மனைவியருக்கும் போது மறுமணம் செய்து கொள்ளக்கூடது என்று பொதுவாகப் பெரியார் தீர்ப்புக் கூறுகிறார். சுருதி,யுக்தி,அனுபவம் ஆகிய மூன்றையும் ஆராய்ந்தே அவர் தம் முடிவுக்கு வருகிறார்.
.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -14

No comments: