தமிழ்த் திருமணம் இணைப்பு (7)
குழந்தை பிறந்த வீடு தூய்மைசெய் நிகச்சி
1. கிழக்கு நோக்கி, முன்னவனார், கலசம் அமைக்க, பழம் முதலியவை படைக்க.
2. திருமணத்துக்குரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடுக. தேங்காய் உடைத்து, ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
3. தாயும் சேயும் விழுந்து வணங்குக/மங்கை விழுந்து வணங்குக.
4. அவர்கள் மீது கலச நீர் தெளிக்க, பருக அளிக்க, திருநீறு குங்குமம் அளிக்க.
5. வீடு முழுவதும் கலச நீர் தெளிக்க.
தூய்மைசெய் நிகழ்ச்சி முற்றிற்று
குற்றம்
(இறுதியாக சுயமாரியாதை திருமணத்தைப்பற்றியும், திருமணங்களில் நடைபெறுகின்ற குற்றங்களை பற்றியும் பெரியார் கூறியவற்றில் சில....பேராசிரியர் நன்னன்)
குடும்ப கட்டுப்பாடு என்னும் கருத்தைப் பெரியார் எடுத்துரைத்த காலத்தில் எல்லாரும் நாணிக் கூசி, அஞ்சி, முகஞ்சுளித்தனர்.ஆனால், பின் எல்லாரும் விரும்பி, ஏற்று, மகிழும் திட்டமாக அது மாறிவிடவில்லையா? அவர் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முன் சென்று சிந்திப்பவர். ஆதலால், அவரைத் தொடரந்து சென்று சிந்திப்பது பலருக்கும் அரியதாக இருக்க கூடும்.
திருமணம், மனைவி, கணவன், மக்கள் என்று சிலவற்றை உண்டாக்கி கொண்டுவிட்டால் அவற்றின் எதிர்கால வாழ்வுக்காக சொத்து சேர்க்கவேண்டும் என்னும் வேட்கை வளர்ந்து எதை செய்தேனும் அதை செய்வது என்னும் நிலைக்கு பலர் வந்து சேரந்து விடுகின்றனர். அந்நிலை அது இது என்றில்லாமல் எல்லா ஒழுக்க கேடுகளையும் தோற்றுவித்துவிடுகிறது. வறிநவன், பொருள் குறைவாக உடையவன் மட்டும்தான் இந்நிலைக்கு வருகிறான் என்றில்லாமல் பெருஞ்செல்வர்களும், அரசர் போன்ற வாழ்வுடையோரும் இந்திலைக்கே வருகின்றனர். இப்படிப்பட்ட அமைப்பை வைத்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் பொது நலன் நாட்டு நலன், உலக நலன் என்பன பற்றிய உண்மையான வேட்கையும், எண்ணமும், முயற்சிகளும் நிலைக்கும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கமுடியும்? பொது உணர்ச்சி எப்படித் தோன்றும்? எப்படி வாழும்? எப்படி வாரும்? அவரவரும் தத்தம் குடும்ப நலனைத்தானே இயல்பாகவும், சிறப்பாகவும் நாட வேண்டிவர்களாக இருப்பார்கள்? இப்போது நிலவும் பொது நலன்கூட அங்குமிங்குமாக ஒரு சிலர் பொது நல நாட்டமுடையோராய் விதி விலக்காக இருப்பதாற்றான் என்றறிய வேண்டும்.
எப்படி மனிதன், மனிதனை அடிமை கொள்ளுவதை தவறு, சட்டப்படி குற்றமான பாரியம் என்று ஆக்கியிருக்கின்றோமோ அதே போல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கி கொள்வதை சட்டப்படியான குற்றம் என்று செய்யவேண்டும்.
திருமணம் என்னும் முறையும் அதன் வழிப்பட்ட குடும்பம், சொத்து ஆகியவையும் மனித சமுதாயத்தின் உரிமை, வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு ஆகியவற்றுக்கு தடைகளாக உள்ளன என்பதை பொதுவாக எடுத்துக் கூறுவதோடு சிறப்பாக பெண் விடுதலை, சமத்துவம், உரிமை ஆகியவற்றுக்கு திருமண மறுப்பு இன்றியமையாததென்றும் எடுத்தியம்பியுள்ளார்.
மண்ணின் அழுத்தத்தாலும் கால முதிர்ச்சியாலும் விளையும் பொன் போன்ற கனிப் பொருள்களைப் போல் பகுத்தறிவு தந்தை பெரியாரின் முக்கால் நூற்றாண்டு கால அறிவு, ஆராய்யச்சி, கனிவான சிந்தனை போன்றவற்றின் விளைவாக தம் முற்றி முதிர்ந்த பருவத்தில் தோன்றிய இந்தப் புரட்சி அறிவுக் கனியைப் பக்குவப்பட்ட அறிஞர்கள் மேலும் தொடர்ந்து எண்ணிப் பார்க்க கடமைப்பட்டவர்கள் எனக் கூறி ஈற்றுப் பகுதியாம் இதனை நிறைவு செய்வதன் வாயிலாக இந்நூலையும் முடிக்கிறோம்.
இதுவரை தமிழர் திருமணங்கள் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் மற்றும் தமிழர் இல்லங்களில் பல்வேறு சடங்குகளுக்கான தமிழ் மந்திரங்களையும் அதை தமிழர்களை வடமொழி கலக்காமல் பார்ப்பன புரோகிதம் என்ற பெயரில் ஆபாசங்கள் இல்லாமல் நடத்த நம்மாள் முடியும் என்பதனையும். இச்சடங்குகளே வேண்டாம் என்பவர்கள் பெரியார் கண்டறிந்த சுயமரியாதை திருமணங்களை கொண்டு தாமே அவரவர் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்பதனையும் அறிந்தோம். மேலும் சுயமரியாதை திருமணங்கள் மிகவும் சிக்கனமானது. சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டது. இதனால் திருமணத்தின் மூலம் செய்யப்படும் பணவிரயம், காலவிரயம் தடுக்கப்படுகிறது.
இதில் எது சிறந்ததோ (தமிழ் மந்திரத் திருமணங்கள் அல்லது சுயமரியாதை திருமணங்கள்) அதையே தமிழர்கள் பினபற்றி கொள்ளலாம் என்பது தெளிவாகிறது. இதற்கு புரோகிதர் தேவையில்லை தவிர அத்தனை மந்திரங்களும் நமக்கு புரிகின்றது. இல்லறத்தின் மேன்மையும் விளங்குகிறது.மணமகனின் கண்முன்னேயே, அவன் மணமுடிக்கப்போகும் மணமகளை ஆபாசமாக வர்ணிக்கும் பார்ப்பன புரோகிதர்களின் எண்ணம் தவிடு பொடியாகிறது. அந்த எண்ண்ம் முற்றிலும் தடுக்கப்படுகிறது.
தமிழர்களின் எல்லா இல்லச் சடங்குகளையும் தமிழிலேயே நடத்திக்கொள்ளலாம். மந்திரம் என்பது ஒரு வாழ்த்து தான். (எந்த மாயாஜாலமும் உருவாவதில்லை.)
இதனால் தேவையற்ற மணமுறிவுகள் நீதிமன்றத்தின் மூலம் முடித்துக் கொள்வது தடுக்கப்படுகிறது. இவையனைத்தும் புரிதலினால் மட்டுமே சாத்தியம். எதையும் தெளிந்து செய்வது மனிதனின் இயல்பாக இருக்கவேண்டும். இது தமிழர்கள் எப்போதும் பின்பற்றி வந்த ஒன்று தன். இடையில் ஆரியப்பார்ப்பனர்களின் தலையீட்டால் வஞ்சகமாக இந்த சமஸ்கிருத மந்திரங்கள் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கோடு புகுத்தப்பட்டது. அவற்றைக் களைவோம் தமிழர்களாக வாழ்வோம். திராவிட கலாச்சாரத்தை காப்போம். இதுவரை பலத் தளங்களிலும் விவாதிக்கப்பட்டாலும் இதை பார்ப்பனர்கள் எதிர்த்தே வந்திருக்கின்றனர். ஆனால் ஒருவரும் சமஸ்கிருதங்களில் ஆபாசமில்லை என்று அரிதியிட்டு அவர்களால் கூறமுடியவில்லை. மாறாக சமஸ்கிருதம் மேன்மையானது அதை போன்ற ஒலி வேறெதிலும் வருவதில்லை என்று பூசிமழுகின்றனர். அவர்களுக்கே பொருள் தொரியவில்லை நமக்கெதற்கு? அவர்களுக்கு தெரிந்தாலும் நமக்குத் தேவையில்லை? நமக்குத் தான் அதன் பொருள் தெரிந்துவிட்டதே!
எமது தாய் மொழித் தமிழைவிடவா? சமஸ்கிருதம் மேன்மையானது. ஆயிரம் இருந்தாலும் என் தாய் மொழியே எமக்கு உயர்ந்தது என்று கூறும் தமிழர்களிடம் இவர்கள் பாச்சா பலிக்கவில்லை. அவரவர்களுக்கு அவர்கள் தாய்மொழி உயர்ந்தது.
இதுகாரும் பார்ப்பன புரோகிதர்களால் சொல்லப்பட்டு வந்த சமஸ்கிருத ஆபாச மந்திரங்கள் வேண்டாம் என்று இன்று வரை ஒரு பார்ப்பனரும் மறுத்து கூறவேயில்லை. மாறாக சமஸ்கிருதத்தின் தொன்மையை பற்றி அளந்து கொண்டிருக்கின்றனர். (அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.) இந்த இணையக்காலத்திலும் அவர்கள் இந்த ஆரிய வெறியுடனேயே வாழ்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆரியத்தை எதிர்ப்போம் திராவிடத்தை காப்போம்.
தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும் தொடர் முற்றும்