ஆதிக்க சக்திகள் ஒரு சமூகத்தை ஆக்கிரமித்து வருவதும் அதன் பொருட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தை எழுந்திருக்கவிடாமல் செய்வது எனபது காலங்காலமாக தொடர்ந்து வருவது தான். இது ஏதோ இந்தியாவில் மட்டும் தொடர்வது அல்ல அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு காரணங்களை வைத்து மனிதனை மனிதனே தாழ்த்துகின்ற நிலை தொடர்ந்து வருவது தான். சாதி வெறிகளாகட்டும், மதவெறிகளாகவும், இனவெறிகளாகவும் இந்தியாவில் தொடர்வது போல பிறநாடுகளில் மதவெறிகளாகவும், நிறவெறிகளாகவும் தொடர்கின்றன. அதற்காக பல முனை போராட்டங்களையும், மகப்பெரிய யுத்தங்களின் மீலமும் அவர்கள் எதிர்த்து வருவதை நாம் காணாமலில்லை.
இப்படிப்பட்ட ஆதிக்க வெறியினரிடமிருந்து இன்று ஒரு ஒபமா வெற்றிபெற்றிருந்தாலும். இந்த வெற்றி அவ்வளவு சுலபமானதல்ல என்பது பெரும்பான்மையான மக்கள் உணராமல் இல்லை. ஆதிக்க வெறி கொண்டவர்கள் ஏன் இன்றளவிலும் தன் சகமனிதனையை தாழ்த்த எண்ணம் கொண்டிருப்பதும், அது இன்றளவிலும் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் பலத்த எதிர்ப்புகிடையே தொடர்வதும் விந்தையானதுதான்.
முடிவில் அழியப்போவது என்னமோ ஆதிக்க வெறிகொண்டவர்கள் தான். மண்ணை கவ்வுவதும், மண்ணோடு மண்ணாவதும் அந்த ஆதிக்க வெறி கொண்ட மாக்கள் தான் என்பதை நல்லோர் அனைவரும் அறிவர்.
அமெரிக்காவின் அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றதை பொறுக்கமுடியாத ஆதிக்க மனப்பான்மை கொண்ட நிறவெறியனர் அவரை பாரளுமன்றத்திலேயே அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கருவிக்கொண்டிருந்தனர். ஒரு ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஆப்ரகாம் லிங்கனை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு கூறியது இதுதான்...
''மிஸ்டர் ஆப்ரகாம் லிங்கன் எனது காலில் இருக்கும் ஷூ வைப்பாருங்கள் இது உங்கள் அப்பா தைத்து கொடுத்தது தான்......''
அதற்கு சிறிதும் லட்சியம் செய்யாத ஆப்ரகாம் லிங்கன்...
''அதற்கென்ன அந்த ஷீ கிழிந்து விட்டால் சொல்லுங்கள் நான் இன்னொன்றை புதிதாக நன்றாக தைத்து தருகின்றேன்...''
என்று கூறிய லிங்கன்...
''எனக்கும் ஷீ தைக்கவும் தெரியும்...''
.என்று முன்னே நடந்தார்...
இரண்டடி நடந்து சென்று பின் திரும்பிய லிங்கன்..
''எனக்கு நாடாளவும் தெரியும்.....''
அந்த பதிலை எதிர்பார்க்காதா நிறவெறிக்கொண்ட மனிதன் கூனிக்குறுகினான் அம்மன்றத்தில் அனைவரின் முன்னிலையிலும்.....
... பேராசிரியர்.சுப வீ ரப்பாண்டியன்
No comments:
Post a Comment