Pages

Thursday, 21 July, 2011

அ.தி.மு.க. வினர் கதறல் புகார்! நிலமோசடியில் சிக்கும் அமைச்சர்!ஜெ. 10-ஆம் தேதி ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.  அதில் ..."2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் நிலங்கள் அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெருமளவில் நடந்ததை தமிழக மக்கள் அறிவார்கள்.  நில அபகரிப்பு தொடர்பாக கடந்த ஆட்சியில் புகார் அளிக்கப்பட்டிருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  1-7-2011 வரை நில அபகரிப்புத் தொடர்பாக வந்திருக்கும் புகார்களின் எண்ணிக்கை 1440" என்ற ரீதியில் காட்டம் காட்டிய ஜெ...

    "இது குறித்து  தகுந்த விசாரணை மேற்கொள்வதற்காக காவல்துறையில் தனியாக சிறப்புப் பிரிவு ஒன்றை காவல்துறை தலைமை அலுவலகத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன்.  நிலமோசடியில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

     இதைத் தொடர்ந்து தி.மு.க. புள்ளிகளை மட்டும் குறிவைத்து விறுவிறுப்பாக களவமறிங்கிய காக்கிகள், நில மோசடி வழக்கில் கோவை தி.மு.க துணை மா.செ. ஆனந்தனை கைது செயதனர்.  திருவாண்ணாமலை மாவட்ட தி.மு.க துணைச்செயலாளரும் எக்ஸ் எம்.எல்.ஏ.வுமான ஆரணி சிவானந்தத்தை கைது செய்ய தேடிக்கொண்டிருக்கிறது.  கொடைக்கானல் தி.மு.க சேர்மன் முகமது இப்ராகிமை கைது செய்து சிறையில் அடைத்தது.  வீரபாண்டியார், அவர் மகன் வீரபாண்டி ராஜா, மதுரை மேயர் தேன்மொழி போன்ற தி.மு.க புள்ளிகளின் மீது வழக்கைப்பதிவு செய்ததோடு மு.க.அழகிரியின் மனைவி காந்தி, மாஜி மந்திரி நேரு மீதும் புகாரை வாங்கியிருக்கிறது.

     இது ஒரு புறம் இருக்க... திருவண்ணாமலை மாவட்ட ர.ர.க்களோ "கட்சிக்காரர்களாகிய எங்களிடமே ஜெ. சொன்ன காலகட்டத்திலேயே... நிலமோசடியில் ஈடுபட்ட ஒருவரை அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்க்கும் கார்டன், அவர் மீதான நிலமோசடிப் புகார்களையும் விசாரிக்க உத்தரவிடுமா?"  என கதறியபடி குரல் எழுப்ப...இதை அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் வழிமொழிந்து வருகிறார்கள். 

     பொதுமக்களும் ர.ர.க்களும் 'நிலமோசடி ஆசாமி' என சுட்டு விரலை நீட்டுவது வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைத்தான்.  அவர் மீதான புகார்களை -நில மோசடிப் புகார்களை பார்ப்போம்.


மோசடிப் புகார்-1 :

     2008-2009-ல் தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் இருந்து, ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கே.சம்பத்குமார்.  இவர் கல்லூரி ஒன்றைத் தொடங்க ஆசைப்பட்டார்.  இதற்காக அங்குள்ள நாயுடு மங்கலத்தில், தன் மனைவி கீதா மற்றும் மகன் சஞ்சீவ்புமார் ஆகியோர் பெயரில் 18 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.  அதே பகுதியில் ஆதிமூலம் எனபவர் நடத்தி வந்த திருமண மண்டபத்தையும் லீசுக்கு எடுத்து, மொத்த இடத்திலும் 2009-ல் இந்தியன் கலை அறிவியல் கல்லூரியைத் தொடங்கினார்.  இதை திருவண்ணாமலை கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் நடத்த ஆரம்பித்தார்.  இந்த நிலையில் தான் அக்ரி வடிவத்தில் இவருக்கு சனி பிடித்தது.  அது என்ன என்பதை அவரே வருத்தத்தோடு விவரிக்கிறார்.
     "இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த என் கல்லூரி கால நண்பர் ஜெயராமனோ இந்த டிரஸ்ட்டில் குரியகோஸ் என்ற பாதிரியாரையும் தம்பிராஜா எனபவரையும் அப்போது எம்.எல.ஏ.வாக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி விஜயகுமாரியையும் உறுப்பினரா சேர்க்கச் சொன்னார்.  மரியாதைக்குரிய ஆட்கள்னு நினைச்சி அவர்களை டிரஸ்ட் உறுப்பினராக்கினேன்.  அந்த நிலத்தின் மதிப்பு 2 கோடி வரை உய்ர்ந்ததையும், எங்கள் கல்லூரியில் நிறைய மாணவர்கள் சேர்ந்ததையும் பார்த்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியை அபகரிக்கும் முயற்சியில் இறங்கிட்டார்.  என்னை கல்லூரிப் பக்கமே வரவிடாமல் ரவுடிகள் மூலம் தொந்தரவு கொடுத்தார்.  பிறகு கல்லூரியில் மாணவர்கள் கட்டிய கட்டணத்தையும் சருட்டத்தொடங்கிவிட்டார்.  கல்லூரியை விரிவாக்கம் செய்ய என் ஊட்டி நில்த்தை வைத்து வங்கியில் நான் கடன் வாங்கிய 6 கோடி ரூபாயையும் தன்னிடம் கொடுக்க வேண்டும்னு அடியாட்களை வைத்து மிரட்ட ஆரம்பித்தார் அக்ரி.  இவரது டார்ச்சர் அதிகமானதால், எம் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு போனேன்.  என் மகன், சசிகலாவின் உறவினர் வீட்டில் பெண் எடுத்ததால் இந்த முடிவுக்கு வந்தேன்.


     ராமச்சந்திரனின் மயிலாப்பூர் வீட்டில் பஞ்சாயத்து நடந்தது.  அப்போது, டிரஸ்ட்டில் இருந்த விஜயகுமாரியை தன் மனைவியே இல்லைன்னு அக்ரி சத்தியம் செய்ததோடு என் விஷயத்தில் இனி தலையிடமாட்டேன்னு உறுதிகொடுத்தார்" என்றபடி மினரல் வாட்டரை வாயில் சரித்துக் கொண்டவர், தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

     " ஆனால் அதன்பிறகும் அக்ரி சும்மா இருக்கலை.  கல்லூரியை அடியாட்கள் மூலம் கைப்பற்றிக் கொண்டதோடு மற்றொரு இடத்தில் இருந்த என் மகன் சஞ்சீவ் குமாரின் நிலத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டார். இதே பகுதியில் இருந்த அரவிந்தர் பள்ளியையும் ஆதிமூலம் என்பவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டதோடு, அரவிந்தர் பள்ளி கட்டிடத்துக்கு என் கல்லூரியைக் கொண்டுபோகத் திட்டமிட்டார்.

     எங்கள் கல்லூரி, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது எனபதால், அங்கிருந்த அதிகாரிகளின் துணையோடு அக்ரியின் இடம் மற்றும் முயற்சியை எப்படியோ தடுத்திட்டேன்.  இதோடு நிறுத்தாத அக்ரி என் கல்லூரியை டம்மியாக்குதற்காக அப்போதைய தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு மூலம் முயற்சி செய்து அரவிந்தர் பள்ளியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார்.  இப்படி பலவகையிலும் அக்ரி டார்ச்சர் செய்ததால், கடந்த தி.மு.க ஆட்சியிலேயே அவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்தேன்.  போலீஸ்  அப்போது அக்ரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால்... வேறு வழியின்றி அக்ரி மீது நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறேன்" என தனது துயர அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மோசடிப் புகார்-2 :

     அ.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதியான சி.மூர்த்தி ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொடு கட்டிப் பறக்கிறவர்.  இவர் திருவண்ணாமலை புறநகர் பகுதியான பாரதி நகரில் நான்கரை ஏக்கர் நிலத்தை வாங்கி, பிளாட் போட்டு ஒரு செண்ட் 22 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் விற்பனை செய்துவந்தார். இவரையும் அக்ரி விட்டுவைக்கவில்லை.

     மூர்த்தியின் அனுபவத்தை அவரது குரலிலேயே கேட்போம்.  "என்னிடம் நான் நிரணயித்த விலைக்கே பிளாட் வாங்கிக்கொள்வதாக சொல்லி 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டுக்கொண்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மீதத்தொகையை 30 நாளில் கொடுத்துவிடுவதாகச் சொன்னார்.  ஆனால் 3 வருடம் ஆகியும் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தார்.  இதனால் கட்சித் தலைமையிடம் பலமுறை புகார் கொடுத்தேன்.  இதை கட்சி விசாரிக்கும் போதெல்லாம் என்னை கடுமையாக மிரட்ட ஆரம்பித்தார் அக்ரி.  இதனால் பயந்துபோன நான் சசியின் உறவினர்களான டாக்டர் வெங்கடேஷ், மிடாஸ் மோகன் ஆகியோரிடம் சென்று முறையிட்டேன்.  இதன் பிறகு செண்டுக்கு 13 ஆயிரம் என அடிமாட்டு விலைக்கு என் பணத்தை செட்டில் செய்தார்.  நிலமோசடி, கட்டாய விற்பனை, கூலிப்படை மூலம் மிரட்டுவது என அத்தனை தாதாத்தனத்திலும் இறங்கிய அக்ரியை, அமைச்சராக்கியிருப்பதை எங்கள் கட்சிக்காரர்களாலேயே ஜீரணிக்கமுடியவில்லை" என்கிறார் காட்டமாக.


     மோசடிப் புகார்-3 :

     திருவண்ணாமலை கோயில் அறங்காவலராக இருந்தவர் சிவாஜி.  இவருக்குக் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கிறது.  இந்த நிலையில் 2009-ங் சிவாஜி நோய்வாய்ப்பட்டு இறந்துபோக, அவரது சொத்துக்களில் ஒரு பகுதி அவரது மகள் தனலட்சுமிக்கு வருகிறது.  தனலட்சுமிக்கும் அரவிந்தன் எனகிற இளைஞருக்கும் காதல் மலர, அரவிந்தன் கட்டிய புடவையோடு அழைத்துப்போய் 2010 ஜூலையில் தனலட்சுமிக்குத் தாலி கட்டுகிறார்.  இதன் பிறகு நடந்ததை தனலட்சுமியே விவரிக்கிறார்.     "நான் காதல் திருமணம் செயதுகொண்டதை அறிந்த எங்கள் உறவினரும் அ.தி.மு.க. நகர செயலாளருமான கனகராஜ், ஒரு அடியாட் படையோடு எங்களைத் தீர்த்துக்கட்டப் பார்த்தார்.  உயிருக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த நாங்கள் கனகராஜ் மீது புகார் கொடுத்தோம்.  போலீஸ்காரர்களோ 'பயப்படாதீங்க அந்தக் கும்பலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று ஆறுதல் சொன்னார்கள்.  அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினார்.  அதன்பின் போலீஸின் போக்கே மாறிவிட்டது.  எங்களை மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.  அதோடு நிறுத்தாமல் போலீஸ் துணையோடு எங்களை இரவு 8 8 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்குக் கொண்டு போனார்கள்.  அங்கு எனக்கும் என் அப்பாவின் சொத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.  உயிருக்கு பயந்து  நானும் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிட்டேன்.  இப்போது அக்ரி அமைச்சரானதால், மிக தைரியமாக கனகராஜூம் சேர்ந்து கொண்டு எங்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  எங்கள் அம்மா செல்வி, அக்கா சாந்தி, தம்பி முருகன் ஆகியோரையும் இந்தக் கும்பல் மிரட்டி வாயை அடைத்துவிட்டது.  நில மோசடியை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு போலீஸில் நாங்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கனகராஜ் மீது புகார் கொடுக்க இருக்கிறோம்.  எங்களுக்கு நீதி வேண்டும்" என்கிறார் கவலை பொங்க.

     தி.மு.க.வினர் மீது குறி வைத்துப் பாயும் நில மோசடி வழக்குகள் அ.தி.மு.க. அமைச்சர் மீதும் பாயுமா?  இல்லையெனில் தி.மு.க.வினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஜெயலலிதா இறங்கியுள்ளார் என்பதே நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

அமைச்சரின் விளக்கம்!

        அக்ரி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரது விளக்கத்தை அறிய அவரை நேரில் சந்திக்க தொடர்ந்து முஞன்றோம்.  4-வது நாள் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் உள்ள ஒரு பெர்சனல் அறையில் சந்தித்தார்.

     "நான் நன்றாக செயல்படுவதாக அம்மா நம்புகிறார். அதனால் தான் உணவுத்துறையை விட வெயிட்டான வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை (இரண்டுமே செம "மால்" உள்ள துறை) எனக்குக் கொடுத்தார். அதனால் உங்களை நான்கு நாட்கள் அலைய வைத்தேன் ஸாரி..." என சொன்னவரிடம், அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடுக்கினோம்.  அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், "நான் எனது சகோதரரை டி.எஸ்.பி. யாக  ஃபுட் செல்லுக்கு நியமிக்கவில்லை.  அதைச் செய்தது அம்மா தான்.  அம்மா அப்படிச் செய்தால் என் மீது புகார் வரும் என நான் சொன்னதால் அவனை, வேறு துறைக்கு மாற்றினார்கள்.  ஆட்சிக்கு வந்து சில நாட்களில் கோடிக்கணக்கான ரூபாய் வாங்கி கடன்களை நான் அடைத்ததாகப் புகார்கள் ஏற்கனவே அம்மாவின் கவனத்திற்கு வந்துள்ளது.  அது தவறு என நிருபிக்க வங்கி ஸ்டேட்மெண்ட்டை வாங்கி வைத்துள்ளேன்" என ஒரு ஸ்டேட்மெண்ட்டைக் காட்டினார்.  "ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கும் எனக்கும்  இடையில் பிரச்சினை உள்ளது.  அரவிந்தர் பள்ளியை நான் மிரட்டி வாங்கவில்லை.  அரவிந்த் எனபது என் மகனின் பெயர்.  யாரையும் நான் மிரட்டி அடிமாட்டு விலைக்கு எதையும் வாங்கவில்லை.  நகரச் செயலளர் கனகராஜ் செய்யும் நில மோசடிகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்றார் பகிரங்கமாகவே.

........பிரக்காஷ்...நக்கீரன்..ஜூலை 20-22-2011     

********************
பொது ஜனம்; ஆமாம் தலைவி மோசடிப் பண்ணலாம் அள்ளக்கை மோசடிப்பண்ணக்கூடாதா? இது என்ன? போங்கா! இருக்குதே!

பொது ஜனம; இதுதான் போயஸ் கார்டன் போங்கு!

பொது ஜனம்; ஜெயலலிதா கிட்ட மோசடி, ஊழல் செய்யற விஷயத்தில கூட "சமச்சீர்" இல்லை. "நான் மட்டும் தான் மோசடி, ஊழல் செய்யணும்!" நான் பார்த்து பிச்சை போட்டா நீ வாங்கிக்க!  

பொது ஜனம்; ஒண்டிக்கட்டையே மோசடி பண்ணும் பொழுது, புள்ளக் குட்டிக்காரன் மோசடி பண்ண மாட்டானா!

பொது ஜனம்; என்னய்யா ஆளாளுக்கு வக்காலத்து வாங்கறீங்க! நீங்க ஏதுனா மோசடி பண்ணியிருக்கீங்களா!

பொது ஜனம்; அந்தம்மா பெரியப் பதவிக்கு, எவ்வளவு வேணுமோ?  வேண்டியதை  கொள்ளையடிச்சுகிட்டும். குட்டியமைச்சருக்கு,தொண்டர்களுக்கு கால்வாசியாவது கொள்ளையடிக்க விட்டுக்கொடுக்க கூடாதா?

பொது ஜனம்; நில மோசடி சிறப்புப்பிரிவே அதிமுக வுக்காகத்தான் அந்த பொம்பளை அமைச்சிருக்கும்! எங்கே! நம்மளை விட இவனுங்க ஸ்பீடாப் போய் சிறுதாவூர், கொடைக்கானல், டான்சின்னு நம்மளையே மிஞ்சிடுவானுங்கன்னு மறைமுகமாக இந்த பிரிவை அமைச்சிருக்கும்! இது தெரியாம இதுங்க மாட்டிக்கிச்சுங்க! 

பொது ஜனம்; திருப்பதிக்கே லட்டு! மோசடிக்கே! மோசடி!

பொது ஜனம்; அ.தி.மு.க அமைச்சரவையே படு மோசடியான அமைச்சரவை போலிருக்குது! 2 மாசத்துக்குள்ளேயே இரண்டு மோசடி அமைச்சர்களா! இன்னும் குப்பைய கிளருனா! நிறைய வண்டி வண்டியா வரும்!

No comments: