Pages

Friday 8 July, 2011

நான் சட்டத்தை மதிக்கற ஆள் கிடையாது! சட்டத்தை காலில போட்டு மிதிக்கற ஆள்!- ஜெயலலிதா


வழக்கு நடக்கும் போதே பாட புத்தகங்கள் அச்சிடுவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்


சென்னை, : சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சடிப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகாதா? இது நீதிமன்றத்தை  கேலிக்கூத்தாக்காதா? என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், தமிழக அரசு வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்ற மூத்த

வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற வக்கீல் குரு.கிருஷ்ணகுமார் ஆகியோரும், மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் கே.பாலு, பிரசாத் ஆகியோரும் ஆஜராகினர்.உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் வருமாறு:மூத்த வக்கீல் பி.பி.ராவ்: சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தவறானது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின்

கட்டாயக் கல்வி சட்டம்தான் மூலச்சட்டம். இந்த சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது. இந்த மூலச்சட்டத்தை கவனத்தில் கொள்ளாமல், கடந்த அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை
கொண்டு வந்தது. தேசிய பாடத்திட்டம் வடிவமைப்பு விதி 2005ன்படி சமச்சீர் கல்வி தரமற்றது. இதுதவிர, சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது என்று கல்விக்கான தேசிய கவுன்சில் தமிழக அரசுக்கு கடந்த
2009ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கடிதம் எழுதியது. அதை கடந்த அரசு ஏற்கவில்லை.இதுதவிர, கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அரசுக்கு பல பரிந்துரைகள் செய்தது. அதாவது, சமச்சீர் கல்வி புத்தகம் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய  கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த அரசு அமல்படுத்தவில்லை. இதற்காக, மே மாதம் 15ம் தேதி
கெடு விதித்தது. அதை கடந்த அரசு மீறியுள்ளது. புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை, தனியார் பள்ளிகளுக்கு உள்ளது என்று மத்திய அரசின் மூலச்சட்டம் கூறுகிறது. இதை கடந்த அரசு மீறி
செயல்பட்டுள்ளது. மூலச்சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த முடியாது. சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு  கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், அந்த கமிட்டி 3 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி இரவு, பகலாக சமச்சீர் கல்வியை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது; இதை ஏற்க வேண்டும்.சமச்சீர் கல்வி என்பது மாணவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சமச்சீர் கல்வி மாணவர்கள் வளர்ச்சிக்கு தரமானதாக இல்லை. சமூக நீதி என்ற பெயரில் மனுதாரர்போல சிலர்  தரமில்லாத பாடதிட்டத்தை மாணவர்களுக்கு  திணிக்கிறார்கள். இது தவறானது. சமச்சீர் கல்வியை நாங்கள் முழுவதுமாக ரத்து செய்யவில்லை. அதை நிறுத்தி வைக்கத்தான் சட்டத்திருத்தம்  செய்துள்ளோம். அதை எப்போது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம்.
முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமார் கமிட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார்  கமிட்டி, ஒரு நிலைக்குழுவை ஏற்படுத்த வேண்டும என்று கூறியுள்ளது. ஆனால், கடந்த அரசு எந்த குழுவையும்

அமைக்கவில்லை. அந்த நிலைக்கு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கமிட்டி பரிந்துரை செய்தும் கடந்த அரசு அதை அமல்படுத்தவில்லை.
தமிழக அரசின் சட்டத்திருத்தம் அவசர முடிவு அல்ல. தீர ஆராய்ந்து பார்த்து எடுத்த முடிவுதான். மாணவர்கள் நலன் கருதி நிதானமாக எடுத்த முடிவுதான். சமச்சீர் கல்வி சட்டம் இந்திய அரசியல்

சட்டம் பிரிவு 14 மற்றும் 15க்கு எதிரானது. மத்திய அரசின் மூலச்சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி இருப்பதால் 1 கோடியே 35 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 200 கோடி ரூபாய் வீண்

செலவு என குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பள்ளிகள் தரப்பு வக்கீல்கள் சிலம்பண்ணன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி: பழைய பாடத்திட்டப்படி புத்தகங்கள் அரசு வெளியிடுவது நியாயமானது தான். இதை ரத்து செய்யக்கூடாது.
தலைமை நீதிபதி: இன்று வெளிவந்த ஒரு ஆங்கில பத்திரிகையில், பழைய பாடதிட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை. அப்படி

இருக்கும்போது எப்படி புத்தகங்கள் அச்சடிப்பீர்கள். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகாதா? தமிழக அரசு ஏன் இந்த நிலை எடுத்துள்ளது? இது வருந்தத்தக்கது.
வக்கீல் பி.பி.ராவ்: இதுபற்றி எனக்கு தெரியாது.
தலைமை நீதிபதி: தமிழக அரசு பற்றி உங்களுக்கு தெரியாது. தமிழக அரசின் இந்த நிலை நீதிமன்றத்தை கேலிகூத்தாக்குவதாக உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது.
வக்கீல் பி.பி.ராவ்: மாணவர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தகங்களை அச்சடித்து இருக்கலாம்.
தலைமை நீதிபதி: புத்தகங்கள் அச்சடிப்பதை ஒப்பு கொள்கிறீர்கள். இதை பதிவு செய்து கொள்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
அடுத்த கட்ட விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தள்ளிவைத்தனர்.

.....தினகரன் 08.07.2011

***********************

பொது ஜனம்; ஜெயலலிதா அரசுக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் விடுத்திருக்காரே! 

பொது ஜனம்;ஜெயலலிதாவுக்கு இப்படி கண்டனம் வரும்னு தெரியாதா? அது தான் சட்டத்தை எப்பவுமே மதிக்கிறது இல்லையே! நீதிமன்றத்தை பல முறை ஏமாத்தி! ஏமாத்தி! அதுக்கு பழக்கமாயிடுச்சு! உச்சநீதிமன்ற கட்டாயமா கொடநாடு எஸ்டேட் ரோட்டை பொது மக்களுக்கு திறந்து விடணும்னு கண்டிஷனா தீர்ப்பு இரண்டாவது முறையும் கூறியிருக்காங்க! திறந்து விட்டுச்சா!  

பொது ஜனம்; அதோட கோர்ட்டுல அதுதான் நீதிபதி! இந்த நீதிபதிகள் எல்லாம் அதுக்கு ஒரு கால் தூசு!

பொது ஜனம்; பிக்பாக்கெட் கேசுக்காறன் கூட நீதிமன்றத்துக்கு பயப்புடறானேய்யா! இது முதலமைச்சர் பதவியிலே இருந்துகிட்டு நீதிமன்றத்தை மதிக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்!

பொது ஜனம்; அதனால தான் தினம் கொலை கொள்ளை ஊருக்கு ஊர் நடக்குது! இது ஒரு கேடி லேடி! அதனால கேடி ரவுடிங்க தைரியமா திரியறாங்க!  கொலை கொள்ளையை அசால்ட்டா பண்ணிட்டு போயிகிட்டே இருக்காங்க!


பொது ஜனம்; ஆமாய்யா நேற்றுக்கூட ஒரு பொம்பளை மேல ரவுடிங்க ஆசிட் அடிச்சிட்டானுங்க!  டிரிட்மென்ட் பண்ணிகிட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பிட்டல இருந்த அந்த பொம்பளையை, அப்படியே ரவுடிங்க கடத்திகிட்டு போய் கேசை வாபஸ் வாங்குன்னு  மிரட்டுனாங்களாம்!


பொது ஜனம்; பின்னே! ஜெயலலிதாவே ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மேல (கூலிப்படை சுர்லாவை வைச்சி) ஆசிட் அடிச்ச பொம்பளை ரவுடி தானே! அதனால தான் இப்ப மக்கள் மூஞ்சிலேயும் ரவுடிங்க தைரியமா ஆசிட் அடிக்கிறாங்க!

பொது ஜனம்; எங்கய்யா போலீஸ்காரணுங்களே குடிச்சுட்டு பப்பளிக்கா ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறானுங்க!  புகார் கொடுக்கப் போற பொம்பளையை ரேப்! பண்ணப்பாக்குறானுங்க! ஏற்கனவே ரேப் பண்ணிகிட்டும் இருக்கானுங்க!



பொது ஜனம்; அப்ப! டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில வந்த செய்திதான் தலைமை நீதிபதியை கோபமாக்கிடுச்சி! 

பொது ஜனம்; ஏற்கனவே உச்சநீதிமன்றத்திலே பொது நல வழக்கு போட்டிருக்காங்க! இந்த ஆதாரத்தை அப்படியே அதுக்கு சேர்த்துக்கலாம்! அரசு தரப்பு வக்கீலும் பழையப் புத்தகம் அச்சடிக்கறதை ஒத்துக்கிட்டாரே! 

பொது ஜனம்; கிளினா இது கோர்ட்டு அவமதிப்பு! தெளிவாயிடுச்சு! உச்ச நீதிமன்றம் இந்த செயலுக்கு கடுமையான தண்டனை தரணும்! அப்ப தான் இனிமேல் எவனும் நீதிமன்றத்தை அவமதிக்க மாட்டான்!

பொது ஜனம்; நாலு தடவை கூடியே இவங்க இந்த புத்தகம் சரியில்லைன்னு சொல்றவங்க இன்னொரு நாலு நாளுள புதிய சமச்சீர் புத்தகத்தை உருவாக்கி அச்சடிக்க முடியாதா?

பொது ஜனம்; மக்கள் கேக்கறது என்ன? எல்லோருக்கும் ஒரே கல்வி!

பொது ஜனம்; அதானே! அப்ப ஜெயலலிதாவுக்கு சமச்சீர் கல்விமேல பயங்கற காண்டு! எங்க எல்லோரும் புத்திசாலியா ஆயிட்டானுங்கன்னா நம்மளை தூக்கி ஒரம் கடாசிடுவானுங்க! அதுவும் நம்ம ஜாதிக்காரப் பாப்பானுங்க எல்லாம் கீழேப்போயிடுவானுங்க என்ற பிதறல் இதுக்கும் வந்துடுச்சி!

பொது ஜனம்; பழையப் புத்தகத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அச்சடிக்கிறதுக்குப் பதிலா புதிய சமச்சீர் புத்தகத்தையே உருவாக்கி அச்சடித்து இருக்கலாமே! 

பொது ஜனம்; ஆமாம்! அப்புறம் எதுக்கு ஜெயலலிதா அள்ளக்கைங்க கோர்ட்டுல "நாங்க சமச்சீர்கல்வியை நிறுத்தலைன்னு புருடா விடுதுங்க!"

பொது ஜனம்; அது மட்டும் அவசரக் கோலமாகாதா?

பொது ஜனம்; நாலு நாளுளை அவசரக்கோலமா புத்தகத்தில இருக்கிற தப்பை கண்டுபிடிக்கிறவங்க! நாலு நாளுள அவசர!  அவசரமா! புதிய சமச்சீர் புத்தகத்தை உருவாக்கி  அச்சடிக்க முடியாதா?

பொது ஜனம்; அவங்க தான் தனியார் பள்ளிகள் கிட்டே கட்டிங் வாங்கிட்டாங்க! அதனால அவங்களுக்கு சாதகமா இந்த பொம்பளை செயல்படம்னு நினைக்குது! 

பொது ஜனம்;பல தனியார் பள்ளிக்கூடத்தில எதுக்கும் கவலைப்படாம பழைய பாடத்தை தனியார் புத்தகத்தின் மூலமா நடத்திகிட்டுதான் இருக்காங்க! அவங்களுக்கு ஜெயலலிதா எப்படியும் கோர்ட்டை ஏமாத்திப்புடும்னு அவ்வளவு உறுதியான நம்பிக்கை!

பொது ஜனம்; இந்த பொம்பளை ஆட்சியில எந்த நல்ல திட்டமும் வராது போல இருக்கே!


பொது ஜனம்; இருக்கறதை கெடுக்காம இருந்தா போதும்! இதுதான் இலவச பஸ் பாசையே இது அறிமுகப்படுத்தின மாதிரி தேவையில்லாமத் தொடங்கி வைச்சு பில்டப் கொடுக்குதே! 

பொது ஜனம்; அது கடந்த பல ஆண்டுகளா! அமலில் இருக்கும் கலைஞர் கொண்டு வந்த இலவச பஸ் பாஸ் திட்டம்! 

பொது ஜனம்; இது சரியான பெருமை பீயத்தக்களை!

பொது ஜனம்; கலைஞர் அரசில பள்ளி திறந்த ஒரே வாரத்தில மாணவர்களுக்கு பஸ் பாஸ் கொடுத்திட்டாங்க! இதுங்க ஒருமாசம் கிட்டே ஆகப்போகுது இன்னும் பஸ் பாசே கொடுக்கலை! 

பொது ஜனம்; இந்த திட்டமே பேருந்து கட்டணத்தை காரணம் காட்டி பசங்களை பள்ளிக்கூடம் அனுப்பாம பெத்தவங்க இருந்துடப்போறாங்க என்பதற்காகத்தான் இந்த இலவச பஸ்பாஸ் திட்டம். இதையே இன்னும்  மாணவர்களுக்கு பள்ளி திறந்து  25 நாளாகியும் கொடுக்கலை! ஆனா! அவசர அவசரமா நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னாடி பழையப் புத்தகத்தை பிரிண்ட் மட்டும் அடிக்குதுங்க!  இத்தனைக்கும் சமச்சீர் புத்தகம் ரெடியா இருக்கும் பொழுதே!

பொது ஜனம்; இந்த பொம்பளை மூஞ்சில பீச்சாங்கையைத்தான் வைக்கணும்! அதுவும் கழுவா! இது ஆட்சி நடத்துற லட்சணம் அந்தளவுல இருக்கு! ஓரே மாசத்துல அந்தளவுக்கு இளிக்குது!

பொது ஜனம்; இதுதான் திமுகவை ரப்பர் வைச்சு அழிக்கப்போகுதாம்! 

பொது ஜனம்; கிழிச்சது! இது கேசே இன்னும் முடியலை! இது எப்ப அழியப்போகுதுன்னு அதிமுகவில இருக்கறவங்களே காத்துகிட்டு இருக்கிறாங்க! 

பொது ஜனம்; இதுக்கு ஒட்டுப்போட்டவங்களே காத்துகிட்டு இருக்காங்க! முதல்ல ஒட்டுபோட்ட ஒட்டு போடாத மக்கள் என அனைவரையும் தன் பக்கமா இழுக்கறவன்தான் சிறந்த அரசியல் வாதி இது முன்றாம் தர, நான்காம் தர அரசியல் வாதி அதனால தான் இதால இதையெல்லாம் பத்தி சிந்திக்க முடியுது.


No comments: