Pages

Thursday, 21 July, 2011

சமச்சீர் கல்வி! அரசை விளாசிய நீதிபதிகள்!

     30 நாட்களாக படிப்பதற்கு பாடப்புத்தகங்களே இல்லாமல் தங்கள் எதிர்காலம்  என்னவாகுமோ?  என இருளில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் மாணவர்கள் வாழ்வில் சென்னை உயர்நீதிமன்றம் ஒளியேற்றியுள்ளது.


     தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை திங்களன்று படிக்க ஆரம்பித்தபோது நேரம் சரியாக 12.50 மணி...  "தமிழகத்தில்  அமைந்துள்ள புதிய அரசு தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டம், ' இந்திய மக்கள் அனைவரும் சமமான கல்வி பெற வேண்டும்.  'அது அவர்களின் அடிப்படை உரிமை' என்கிற இந்திய அரசியல் சாசனம் 14-வது பிரிவுக்கு எதிரானது.  எனவே தமிழக அரசு நிறைவேற்றிய அந்தச் சட்டத்தை ரத்து செய்கிறோம்" என உரத்த குரலில் மைக்கை கூட உபயோகிக்காமல் தலைமை நீதிபதி சொன்னபோது நெரிசல் மிகுந்திருந்த கோர்ட் அறையில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

     அதற்குப்பிறகு நீதிபதி என்ன சொல்கிறார் என கேட்கமுடியாத அளவிற்கு முணுமுணுப்புகள் நிறைந்திருந்தன.  அரசு வழக்கறிஞராக இந்த வழக்கில் ஆஜரான வெங்கடேசன், "நாங்கள் இந்த வழக்கில் எங்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை விளக்க ஒரு மனு தாக்கல் செய்வதற்காக கல்வித்துறை செயலாளரிடம் கையெழுத்துப் பெற முயற்சித்துக் கொண்டிருந்தோம்.  அதற்குள் தீர்ப்பு வந்து விட்டது" என்றார்.  அதற்கு நீதிபதிகள் 'உங்களுடைய தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் எங்கே'  என கேட்டார்கள்.  'இதோ நான் வந்துவிட்டேன்' என அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன் ஓடிவந்தார்.

     'இந்த தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள்.  நாங்கள் அப்பீலுக்கு போகப்போகிறோம்' என்றெல்லாம் வேக வேகமாக பேசினார்.  ' நீங்கள் எதை வேண்டுமென்றாலும் தாக்கல் செய்யுங்கள்.  யார் வேண்டுமென்றாலும் அப்பீல் செய்யலாம்.  இரண்டு நாட்களுக்குள் எதுவும் நடக்கலாம்' என்றார்கள்  நீதிபதிகள்.  கடந்த முறை இதேபோன்று  சமச்சீர் கல்வி திட்ட சட்டதிருத்தத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தபோது இரண்டே நாளில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டிற்கு போய் அப்பீல் செய்து உயர்நீதிமன்றம் விதித்த தடையை விலக்கியதை மறைமுகமாக குத்திக்காட்டி நீதிபதிகள் பேசியதை கேட்ட அரசு தரப்பு அதிர்ச்சியடைந்தது.

     கோர்ட் வளாகத்திலிருந்த என்.சி.ஆர்.பிரசாத் போன்ற சீனியர் வழக்கறிஞர்கள் 'தமிழக அரசின் சட்டதிருத்தத்தையே கோர்ட் ரத்து செய்தபிறகு அரசுக்கு கூடுதல் நேரம் வழங்கத்தேவையில்லை' என எடுத்துச் சொன்னார்கள்.  அதோடு அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைப்பதை கைவிட்டு விட்டது.


     தீர்ப்புன் விவரங்கள் மெதுவ்வாக வெளியே வர அரம்பித்தது.  ' தி.மு.க. அரசு அச்சடித்து வைத்துள்ள புத்தகங்களை ஜூலை மாதம் 22-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வழிவகை செய்யவேண்டும்.  சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்வி வல்லுநர்கள் அடங்கிய கமிட்டியைச் சேர்ந்தவர்கள் மூன்று மாதத்திற்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களில் எவற்றையெல்லாம் சேர்க்கவேண்டும், நீக்க வேண்டும்' என ஆலோசனைகளை சொல்லலாம்.

     சமச்சீர் கல்வி என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்கும் என்கிற நம்பிக்கையோடு அந்தத் தீர்ப்பை முடித்துள்ள நீதிபதிகள். சமச்சீர் கல்வி எப்படி கடந்த ஆட்சிகாலத்தில் உருவானது என்பதை தெளிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.
     'சமச்சீர் கல்வியை அமல்படுத்த  2006-ம்  ஆண்டு முதல் கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலான கமிட்டி விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டது.  அதன்பிறகு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.  அதன் பரிந்துரையின் பேரில் கல்வியாளர்கள் கொண்ட பல நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.  அது நான்காண்டுகள் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டப் பிறகே 2010-ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆகவே இன்றைய தமிழக அரசும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும்  சமச்சீர் கல்வியை முந்தைய அரசு ஏனோ தானோவென்று கொண்டு வந்தது  என்று கூறுவதை ஏற்கமுடியாது.  கடந்த அரசு அமல் படுத்திய சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  சமச்சீர் கல்வியை ஆதரித்து தான் கோர்ட்டுகள் இதுவரை தீர்ப்பளித்தன.  ஆகவே இன்றைய அரசால் நேரடியாக சமச்சீர் கல்வியை ரத்து செய்யமுடியாது.  ஆகவே மறைமுகமாக ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.  நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமச்சீர் கல்வியை அரசு ரத்து செய்ய முடியாது' என தமிழக அரசை விளாசி தள்ளியுள்ளனர்.

     'இந்த தீர்ப்பு சமூகநீதிக்கும் வர்க்க பேதமற்ற சமூகம் உருவாவதற்கு பெருமளவில் வழிவகுக்கிறது' என்கிறார் வழக்கறிஞர் பாலு.  'இதை தமிழக அரசு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் தமிழக அரசு இதை பாசிட்டிவ் ஆக பார்க்க வேண்டும்.  இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போகக் கூடாது' என்கிறார் பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

     'ஆனால் நாங்கள் அப்பீலுக்கு போகப் போகிறோம்' என தமிழக அரசு தரப்பு சொன்னதை கேட்டு பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

...பிரகாஷ்..நக்கீரன் ஜூலை 20-22--2011

*******************

பொது ஜனம்; கலைஞர் கூட இதை தோல்வியா எடுத்துக்க வேணாம்னு! இத்தோட விட்டுரு! காண்டுல மக்களை சாகடிக்க வேணாம்னு  சொல்லியிருக்காரே! அப்பக் கூட வேணும்னுட்டு திமிருத்தனமா இந்த "சொர்ணாக்கா" மீண்டும் சுப்ரீம் கோர்ட் போயிருக்குதே!

பொது ஜனம்; கலைஞர் மட்டுமா சொன்னாரு! எல்லாக் கட்சித்தலைவர்களும் தான் சொன்னாங்க! ராமதாஸ் ஒரு படி மேல போய் மக்கள் சாபத்துக்கு ஆளாகாதே! என்று கூட சொன்னாரு!

பொது ஜனம்; கலைஞர் சொன்னதற்காகவே இது சுப்ரீம் கோர்ட்  போகும்! கலைஞர் தேவையில்லாம இதை உசுப்பி விட்டிருக்காரு!

பொது ஜனம்; "மக்கள்" பாதிக்கப்படக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு!  இதுக்காக ஒரு பெரிய கட்சித்தலைவரு! சும்மா இருக்க முடியுமா? அவருக்கு லட்சக்கணக்கானத் தொண்டர்கள் இல்லையா?! 

பொது ஜனம்; அதானே! இந்த பொம்பளை அவரு!சொல்றதுக்கெல்லாம் ஆப்போசிட்டா செய்யும்னா! என்ன பண்ணமுடியும்?

பொது ஜனம்; ஆப்போசிட்டா செய்யறதுன்னா! எப்படி? கலைஞர் நல்லா நீடுழி வாழணும்னு! இதை வாழ்த்துனா!  உடனே இந்த மானஸ்தி "மடார்னு!  மண்டைய போட்டுருமா!"?

பொது ஜனம்; அப்ப கலைஞரை உடனடியா வாழ்த்த சொல்லணும்!

பொது ஜனம்; ஆந்திராவில தெலுங்கானாவுக்கு இப்ப நடக்குது பாரு! அது மாதிரி இங்கு நடக்கணும் அப்பதான் இது அடங்கும்!

பொது ஜனம்; கூடிய சீக்கிரம் இங்கேயும் நடந்துரும்! 

பொது ஜனம்; மொத்தத்தில இந்த இரண்டு நீதியரசர்களும் மக்கள் மனசுல நின்னுட்டாங்கப்பா! இவங்களை என்னைக்கும் மக்கள் மறக்கமாட்டாங்க! இவங்க! எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்!1 comment:

சி.பி.செந்தில்குமார் said...

லே அவுட் வித்தியாசம் குட்