Pages

Sunday 17 July, 2011

பெரிய தமாஷ்!

      

சூரிய கிரணம் படத்தில் சூரியன் படம் ஸ்கெட்ச் கொண்டு அழிப்பாம். கிரகணம் ஏற்படுவதே சூரியன், பூமி, சந்திரன் நேர்கோட்டு வருகை.  இது நூற்றாண்டுகளாக நடக்கும் பாடம். சூரியன் தி.மு.க சின்னம் அழி என்றால் எப்படி புரிய வைப்பது?  செம்மொழி மாநாட்டில் நிற்கும் வள்ளுவர் கலைஞர் கட்சியாம்.  அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் அம்மா கட்சியாம்.  நிற்பவர் மீது பச்சை ஸ்டிக்கர்.  ஐயா! வள்ளுவர் எந்தக் கட்சி?

     -தேர்தல் சின்னங்கள் ஏதும் பாடப்புத்தகத்தில் வரக்கூடாது என்றால் ஊன்றிப் பார்த்தால் ஒரு படமும் அச்சிடமுடியாது.  தாவரவியல் பாடத்தில் 'இலைகள்' இல்லா செடி போடனும்.  பாரதியார் முரசு பாடலுக்கு 'முரசு' போட முடியாது.  மாம்பழ பாப்பா பாட்டில் 'மாம்பழம்' படம் போட முடியாது.  'இ' என்ற எழுத்தை போதிக்க 'இலை' படம் போடுவதும் அரிச்சுவடி தவறு.

சமச்சீர் கல்வி பெயர் மட்டுமே.  உண்மை சமத்துவம் இல்லை. பாடத்திட்டம் மட்டும் சமமாக்கிவிட்டு பிற இனங்கள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.  சமமாக்க விதிகள் தேவை.

   அரசே அரிசிக்கு மானியம்.  கேஸூக்கு மானியம்.  அரசியல் சாசனப்படி இலவச கல்வி சேவைக்கு மெட்ரிக் ஆசிரியைக்கு 50% ஊதியம் மானியமாக தந்து மீதி 50% நிர்வாகம் எனக் கூறி சமமாக்கலாமே?  சம உழைப்பு, சம கூலி அரசியல் சாசன விதி இல்லையா?

     சமச்சீர் கல்வியை விட மெட்ரிக் பாடத்திட்டம் தரம் உயர்ந்தது என வாதம் புரியும் மெட்ரிக் நிர்வாகிகள் தரமான கல்விக்கு ஊதியம் கூடுதலாக (சமச்சீரைவிட) நிர்ணயிக்கணும்.  ஆனால் 1000, 2000 தானே ஊதியம் தருகிறீர்!

     மெட்ரிக் ஆசிரியைக்கு வார விடுமுறையும் இல்லை.  ஞாயிறும் தனி வகுப்பு எடுக்கப் போகணுமாம்.  அரசு விடுமுறை, கலெக்டர் விடுமுறை -கேட் -ஐ பூட்டிவிட்டு உள்ளே வகுப்பு நடக்கும்.  கொத்தடிமைகள்! வாய் திறந்தால் உடனே டிஸ்மிஸ்தான்.  அரை வயிறு கஞ்சிக்கும் ஆபத்து.  எம்.ஏ., பி.எச்.டி., டாக்டர் பட்டம் பெற்றவர் எல்லோரும் 1000, 2000தான் ஊதியம்.  கொத்தடிமைகள் தான்.  குறைந்தபட்சம் ஊதியம் நிர்ணயம் அவசியம்.

-நக்கீரன் ஜூலை 9-12 வாசகர் அ.ஜோசப்சாமி, கும்பகோணம்.



No comments: