Pages

Sunday 10 July, 2011

"நான் நில மோசடி பண்ணதை மட்டும் விட்டுட்டு மத்தவங்க பண்ணது எல்லாத்தையும் கேஸ் புக் பண்ணு ங்க போலீஸ்"-ஜெயலலிதா




நிலமோசடி: 3 நாட்களில் 30 பேர் புகார்

தமிழகத்தில் நிலம், வீடுகள் அபகரிப்பு மற்றும் மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடத்தி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பேரில் மாவட்டம் தோறும் நில மோசடி தொடர்பாக போலீசில் தனிபிரிவு தொடங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றபிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.

மாவட்டத்தில் நிலமோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.   அதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களில் நிலமோசடி, அபகரிப்பு தொடர்பாக 30 பேர் கடலூர் தனிப்பிரிவு போலீசில் உரிய ஆவணங்களுடன் புகார் செய்தனர். அந்த புகார் மனுக்களின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.....நக்கீரன் 09.07.2011
**********************
பொது ஜனம்; என்னய்யா! ஜெயலலிதா நில மோசடி பண்ணதை யார் கேஸ் புக் பண்ணுவா!

பொது ஜனம்; சிறுதாவூர் தலித் நிலத்தை அபகரிச்சதை பத்தியா! அதை சுப்ரிம் கோர்ட்ல புக் பண்ணுவாங்க! அதை பத்தி குரல் கொடுத்த கம்யூனிஸ்டுங்களே  இப்ப வாயை மூடிக்கிட்டு கூட்டணியில  குப்பை கொட்டறாங்களே!

பொது ஜனம்; அப்ப சுப்ரிம் கோர்ட்டுதான் டான்சி நிலத்தை புடுங்கி கொடுத்தா மாதிரி! இந்த சிறுதாவூரையும் இந்த பொம்பளை கிட்டேயிருந்து புடுங்கனுமா? இது நடுவுல திருடன சொத்தை வேற புடுங்கணும்! எதை பர்ஸ்ட்டுல புடுங்குவாங்க!
பொது ஜனம்; நாட்டில தினம் தினம் தங்கத்தை சவரன் சவரனா, நூற்றுக்கணக்குலே கொள்ளை அடிக்கிறாங்களே! லாக்கப் டெத் அசால்ட்டா நடக்குது. "பீப் பீ" வாசிக்கறவரைக் கூட விட்டு வைக்க மாட்டங்கறாங்களே! பப்ளிக்கா மர்டர் பன்றாங்களேய்யா! அந்த கொலை காரங்களையெல்லாம் போலீஸ் கேஸ் புக் பண்ணவே மாட்டேங்குது! எல்லாம் அதிமுக அள்ளக்கைங்களா!

பொது ஜனம்; அட போலீஸ்! தான் தைரியமா யூனிபார்ம் போட்டுகிட்டே தண்ணியிடிச்சுகிட்டு ரோட்டுலேயே கட்டி புரண்டு அடிச்சுக்குதே! கேஸ் கொடுக்கப் போன பொம்பளையை கற்பழிக்க பாயுதே! 

பொது ஜனம்; இந்தம்மா அரசியல் சூரப்புலி! திமுகவை ரப்பர் வைச்சு அழிக்க முயற்சி பன்றாங்க! பசங்க படிப்பை கெடுத்துட்டு! போய் கொடைக்கானல்ல போய் போத்திகிட்டு தூங்க சொல்லுய்யா! அங்க தான் கேட்டு போட்டு யாரையும் ரோட்டுல கூட விடறிதில்லையே! 

பொது ஜனம்; இது மட்டும் சுப்ரிம் கோர்ட் உத்தரவுப் போட்டாக் கூட ரோட்டை ஆக்கிரமிச்சுகிட்டு விதிமுறைக்கு மாறா கொடைக்கானல்லே பங்களா கட்டிகிட்டு கேட்டை மூடிவைச்சிகிட்டு இருக்கும். 

பொது ஜனம்; இதுக்கு ஒரு நியாயம் ஊருக்கொரு நியாயம்! தூ....!

No comments: