Pages

Tuesday 5 July, 2011

லாயக்கத்தக் குழு லாயக்கற்றதுன்னு அறிக்கை!





 தற்போதைய பாடத்திட்டம் லாயக்கற்றது: சமச்சீர் கல்வி கமிட்டி

சென்னை, ஜூலை 5: சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த கமிட்டி தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தற்போது இருக்கும் பாடத்திட்டங்கள், நடப்பு வருடத்துக்கு பயன்படத்தக்க வகையில் இல்லை என்றும், பாடத்திட்டங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்த வழக்கை 7ம் தேதிமுதல் தினமும் விசாரிக்கும் என்று தெரிகிறது.முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு ஜூன் 17-ம் தேதி நியமித்தது.அந்தக் குழுவினர் இதுவரை 4 முறை கூடி சமச்சீர் கல்வி முறையை ஆய்வு செய்தனர். 

அந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த அறிக்கையை தொடர்பாக உயர்நீதிமன்றம் 7-ம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்த உள்ளது.

1, 6 வகுப்புகள் தவிர மீதமுள்ள 8 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டில் அமல் ஆகுமா என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே ஏறத்தாழ ஒரு கோடி மாணவர்களுக்கு எந்தப் பாடப்புத்தகங்கள் என்பது தீர்மானிக்கப்படும். சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே தயாராக உள்ள நிலையில், பழையப் பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அச்சிடும் பணியும் இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.பத்தாம் வகுப்பு புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி புத்தகங்கள் அச்சிடப்படுவதாகவும், இதுவரை ஏறத்தாழ 20 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு முடியும் வரை 1, 6 வகுப்புகளுக்கு எந்தவித பாடத்திட்டத்தின் கீழும் பாடங்களை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறையில் அறிவியல், கணிதப் பாடங்களில் அடிப்படைகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிப்பாடங்களில் இலக்கண வகுப்புகளும் இப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், இந்தப் பாடப்புத்தகங்கள், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி, இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டத்தையே பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்தது.இதுதொடர்பாக, சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தத்தையும் அரசு கொண்டு வந்தது.ஆனால், இந்தத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்தத் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆராய தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், 1,6 வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையை அமலாக்குவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.1,6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறையையே இந்த ஆண்டு தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

.....தினமணி 05.07.2011
*************************

பொது ஜனம்; இந்த நிபுணர் கம்னாட்டிகள் கமிட்டி என்ற பெயரில் அமைக்கப்பட்ட லாயக்கத்தக் குழு வின் அறிக்கையின் மூலாமா  தினமணி தனது பார்ப்பன முகத்தை காட்டிக்கிச்சா!


பொது ஜனம்; அது என்ன பன்றது இனம் இனத்தோடத்தானே சேரும்! அதை பத்தி தெரியாதா?


பொது ஜனம்; அது எப்படி? பல மாதங்கள் பல கல்வியாளர்களால் ஒருங்கிணைந்து தயாரித்த புத்தகத்தை எப்படி?. இந்த லாயக்கத்தக் குழு மட்டும் அவசர கதியில்  இரண்டே வாரத்தில் அறிவிக்க முடிந்த்து?


பொது ஜனம்; இதுங்க மட்டும் அவசர அவசர அவசரமா சம்ச்சீர் கல்வி சரியில்லைன்னு அறிக்கையளிக்கலாம்!


பொது ஜனம்; உச்சநீதிமன்றம் இப்படியா அறிக்கை அளிக்க சொல்லுச்சு! சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில குறையைத்தானே சொல்ல சொல்லிச்சு! இவங்க மறுபடியும் சமச்சீர் கல்வியை நிறுத்தனும்னே அறிக்கை கொடுக்கறாங்களே! நீதிமன்றத்தை மதிக்கவே மாட்டாங்களா!
பொது ஜனம்; இல்லையப்பா! அவங்க அம்பேத்காரை விட பெரிய பெரிய படிப்பு படிச்சவங்க! அதுனால தான் இலக்கணப்பிழையெல்லாம்  கண்டுபிடிச்சிருக்காங்க! அவங்க உலகத்துக்கே பாடம் சொல்லிக்கொடுக்கறவங்க! அவங்க சொல்லிக்கொடுத்ததினால தான் பல பேர் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிச்சிருக்காங்க! 


பொது ஜனம்; ஓ...அப்படியா! இதுங்க அந்தளவுக்கு நிபுணர்னா ஏன்? மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்க முடியலை! ஏன்? ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி பாஸ் ஆக முடியல. இவ்வளவு குயிக்கா ஆராயராங்களே!



பொது ஜனம்; அப்ப இங்கிலாந்துக்கே இங்கிலீஷ் கத்துக்கொடுக்கறவனுங்கன்னு சொல்லு!


பொது ஜனம்; அது மட்டுமில்ல! தமிழ் நாட்டுக்கே தமிழ் சொல்லிக்கொடுக்கறவனுவங்களும் இவனுங்கதான்!


பொது ஜனம்; இலக்கணப்பிழையை 40  புத்தகத்திலேயும், அனைத்து பக்கத்திலேயும் கண்டுபிடிச்சிட்டாங்களா!? அப்ப 1 வது 6 வது புத்தகத்துலேயும் கண்டுபிடிச்சிட்டாங்களா!? அப்புறம் ஏன்? அதை மட்டும் உச்சநீதிமன்றம் அமல்படுத்திச்சு! இது நல்லா போங்கா இருக்குதே!

பொது ஜனம்; 40 புத்தகம்னா 8 வகுப்புக்கு தலா 5 பாடப் புத்தகம்! அதானே!
பொது ஜனம்; ஆமாம்!


பொது ஜனம்; இரண்டே வாரத்துல அத்தனையும் கரைச்சு குடிச்சிட்டானுங்களே! இப்ப அந்தப் புத்தகத்திலேயிருந்து எந்த கேள்வி கேட்டாலும் டான்! டான்னு! பதில் சொல்லுவானுங்க!
பொது ஜனம்; எந்த புக்குலேயா! இலக்கணப் பிழை இல்லை! இவனுங்க மெட்ரிக்குலேசன் புத்தகத்திலே நாட்டோட பெயரையெல்லாம் தப்புத் தப்பா போட்டிருக்குது. நாடுகளோட  கரன்சிகளின் பெயரையெல்லாம் தப்பு தப்பா அச்சடிக்கப்பட்டிருக்குது! அதையே பலமுறை சொல்லியும் திருத்தாம அப்படியே புள்ளைகளுக்கு சொல்லி கொடுத்துட்டு இருக்கானுங்க!

பொது ஜனம்; எல்லாப் பெரிய பெரிய புத்தகத்திலேயும் பிழைகள்னு, புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில் ஒதுக்கி குறிப்பிட்டு இருப்பாங்க! பிழையில்லாத புத்தகமே இல்லை! 

பொது ஜனம்; ஆமா! எராட்டான்னு புத்தகத்தின் கடைசிப்பக்கத்திலேஇருக்கும்!


பொது ஜனம்; ஆமாய்யா! மெட்ரிக்குலேசன்  புக்குகளை ஆளாளுக்கு, தனியார் அளுங்க ஒவ்வொருத்தனும் தப்பு தப்பா பிரிண்ட அடிச்சி ஒவ்வொரு பள்ளிக்கும் கமிஷனோட கொடுக்கறான்  அதை அப்படியே வைச்சு பசங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்குதுங்க! இந்த லட்சணத்துல இந்த புக்கை பத்தி இதுங்க குத்தம் சொல்லுதுங்க!


பொது ஜனம்; அப்புறம் ஏன்? போன வருஷமே! இந்த இலக்கணப் பிழைகளை இந்த லாயக்கத்தக் குழுவில இருந்த ஒருத்தனும் கண்டுபிடிக்கலை! அப்பவும் இதுங்க ஸ்கூல் நடத்திகிட்டு தானே இருந்ததுங்க!


பொது ஜனம்; பெத்தவங்களை வைறு எரிய செஞ்ச இந்த பொம்பளைக்கு நல்ல.....????????????


பொது ஜனம்; பொறு! பொறு! அப்படியே லேசுல விட்டுருமா! நீதிமன்றம்! கல்வியாளர்களும் பதில் மனு பக்காவா தாக்கல் செய்வாங்க! அப்ப பாக்கலாம்! நீதிமன்றமும் சும்மா விடாது! இந்த அறிக்கையிலேயே அப்பட்டமா எல்லாம் தெரியுதே!


பொது ஜனம்; இந்த லாயக்கத்தக் குழுதான் இந்த சமச்சீர் புத்தகங்கள் லாயக்கில்லைன்னு சொல்லுது!


பொது ஜனம்; குழந்தைகள் என்ன பாவம்யா பண்ணுச்சு!

No comments: