Pages

Monday 4 July, 2011

குழந்தையை சுட்டுக் கொல்லும் இந்திய ராணுவம்! இந்திய, தமிழக அரசுகளின் மனிதவுரிமை மீறலுக்கு இங்கேயே தீர்மானம் போடுங்க!


ராணுவக் குடியிருப்பில் சிறுவன் சுடப்பட்டு சாவு: சாலைமறியல்

சென்னை, ஜூலை 3: சென்னை தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்பில் பழம் பறிப்பதற்காக நுழைந்த சிறுவன் தில்ஷான் (13) அங்குள்ள ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தான்.  இதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சிறுவனின் உறவினர்கள், பொதுமக்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


 இது குறித்த விவரம்: சென்னை தீவுத்திடல் பகுதி இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.  இவர்களின் 2-வது மகன் தில்ஷான். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.  ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் விழுந்து கிடக்கும் பாதாம் பழங்களை எடுக்கச் சென்றதாகக் கூறப்  படுகிறது.  

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ராணுவ வீரர் சிறுவன் தில்ஷானை துப்பாக்கியால் சுட்டாராம். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள், அவனது பெற்றோரிடம் தகவல் தெரி  வித்தனர்.  இதையடுத்து சிறுவனின் உறவினர்கள், அப்பகுதியினர் அனைவரும் ராணுவக் குடியிருப்பின் அருகே திரண்டனர். 


 ஆனால், அதற்குள்ளாக சிறுவனை அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்துவிட்டதாக அங்கிருந்த ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்திராநகர் பகுதியினர் சிலர் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றனர். 


ஆனால், சிறுவனை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையிலும் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.  போலீஸôர் தடியடி: சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸôர் ஈடுபட முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீஸôர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு சிறுவன் தரப்பினரும் போலீஸôரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போஸீஸôர் ஒருவர் காயமடைந்தார்.  


சிறுவன் பலி: இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தான். இதனால் சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், உதயகுமார் ஆகியோர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.  இது குறித்து சிறுவனின் உறவினர்கள் கூறியதாவது: ராணுவக்குடியிருப்புக்குள் அனுமதியில்லாமல் செல்வது தவறுதான். ஆனால் வளாகத்துக்குள் நுழைந்தவர்கள் தீவிரவாதிகள் அல்ல. பள்ளியில் படிக்கும்  சிறுவர்கள். 

 ஆனால், நாட்டை பாதுகாக்கும் பணியில் உள்ள ராணுவ வீரர் தீவிரவாதியை போல சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.  வடக்கு மண்டல இணை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

 ராணுவக் குடியிருப்புக்குள் பழங்களை எடுப்பதற்காக சென்ற சிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிறுவன் குடும்பத்துக்கு ரூ.5லட்சம்: இறந்த சிறுவன் தில்ஷான் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தினமணி 03.07.2011, தினகரன் 04.07.2011

********************** 

பொது ஜனம்; போயும் போயும் இந்திய ராணுவத்தினர் குழந்தையை கொல்லுவதற்குத்தான் துப்பாக்கி ஏந்தியிருக்குதா! அதை விட பெரியக்கொடுமை அநியாயத்துக்கா பொய் பேசுதே! பையன் மரத்துலேயிருந்து கீழே விழுந்து செத்துட்டான் என்று! பட்டாளம் பச்சையா பொய் பேசுவதிலும் கில்லாடி போலிருக்கிறது!

பொது ஜனம்; வாயால மிரட்டியிருக்கலாமே! இல்லை வானத்தை நோக்கி சுட்டிருக்கலாமே! இவன் விட்டிருந்தா மரத்தில ஏறின நான்கு குழந்தைகளையும் சுட்டு கொன்னிருப்பான்யா! நல்ல வேளையா! 3 குழந்தைங்க தப்பிச்சிடுச்சி! 

பொது ஜனம்; அந்த குவர்ட்டர்சுக்கு அடிக்கடி தண்ணி பிடிக்க வேறு மக்கள் போயிருக்காங்க! இந்த மாநில அரசு அதுங்க குடிதண்ணீர் பிரச்சினைக்கும் வழி பண்ணலை!

பொது ஜனம்; குழந்தையை கொன்னதுக்கு எதிர்த்து போராடினவங்க மேலே  போலீஸ் தடியடி வேற நடத்தி குழந்தையோட உறவுக்காரங்க மண்டையை உடைச்சிடுச்சி! 

பொது ஜனம்; அவங்க மட்டும் போலீஸ் காரங்க மண்டையை உடைக்கலாமா?


பொது ஜனம்; போலீஸ் மட்டும் கைது பண்ணாம ரொம்ப நேரமா வேடிக்கை காட்டிகிட்டு இருக்கலாமா? அதுவும் குண்டு துளைச்சு குழந்தையோட தலைக்கு அந்த பக்கமா குண்டு வந்திடுச்சி! குழந்தை மரத்தலேயிருந்து விழுந்த இடத்தோட ரத்தக்கரை தடயத்தை அழிக்கிற வரைக்கும் வேடிக்கைப் பார்த்து கிட்டு இருந்ததே! இப்ப ரொம்ப விவரமா போலீஸ் நாடகம் நடத்துறாங்களே! இதைத்தான் எல்லா ஆங்கில, தமிழ் சேனல்களிலே காட்டினாங்களே!

பொது ஜனம்; ஆமாய்யா! குழந்தையை சீக்கிரம் அடக்கம் பண்ண சொல்லி பெத்தவங்களை வேறு மிரட்டுதாங்களாம்! இந்த குண்டம்மா போலீஸ்!


பொது ஜனம்; ஜெயலலிதாவுக்கு இதையெல்லாம் பற்றி கவலைப்பட நேரம்! எங்க இருக்கப்போகுது! ஒட்டு மொத்த குழந்தைங்க படிப்பையும் கெடுத்துது. எந்த குழந்தைக்கும் இப்ப படிப்பில நாட்டமே இல்லை. சும்மா விளையாடிட்டு வருதுங்க! இந்த மாதிரி அநியாயம் யாருமே பண்ண மாட்டாங்கய்யா! அதுவும் சுதந்திர நாடு பீய்த்திக்கிற நாட்டில இப்படியெல்லாம் கூட நடக்குது!

பொது ஜனம்; பாக்கிஸ்தானில இருந்து தீவிரவாதிங்க  அசால்ட்டா வந்து பலரை போட்டுத்தள்ளிட்டு போயிட்டேயிருக்காங்க! இதுங்க நம்ம பணத்துல சம்பளம் வாங்கிட்டு நம்ம வீட்டு குழந்தைகளையே போட்டுத்தள்ளுதே!

பொது ஜனம்; இராணுவத்துக்கு கெட்டப் பெயர் வந்துறப்பொகுதுன்னு இந்த மாதிரி கீழே விழுந்து இறந்துட்டான்னு இந்த இந்திய ராணுவம் பொய் சொல்லுதுப்பா!

பொது ஜனம்; இவனுங்க கெட்டப் பெயர்ல நாய் நரி.....பேணுட்டுப்போக! 

பொது ஜனம்;எவன் செஞ்சா! என்னய்யா! இது அப்பட்டமான மனிதவுரிமை மீறல் அந்த சுட்ட ராணுவ  ஆள், உத்தரவு கொடுத்த "அப்பா டக்கர்" ராணுவ அதிகாரி எல்லோருக்கும் கடுமையான தண்டனை கொடுக்கனும்!

பொது ஜனம்;முதல்ல அவனுங்களை பதவியை விட்டு நீக்கணும். அவனுங்க நாட்டை பாதுகாத்து கிழிச்சது போதும்!

பொது ஜனம்; மக்கள் தூக்கிலேயே போடனும்னு குரல் கொடுக்கறாங்கப்பா!

பொது ஜனம்; இந்த லட்சணத்தில அடுத்த நாட்டு மனிதவுரிமை மீறலுக்கு இங்க சட்டமன்றத்துல தீர்மானம் போடுறானுங்க! முதல்ல உங்களுக்கே நீங்க தீர்மானம் போட்டுக்குங்க! தூ....!

பொது ஜனம்; அங்கேயாவது யுத்தம் நடந்தது! இங்கே என்னய்யா நடந்தது!

பொது ஜனம்; ராணுவத்தை கைது பண்ண முடியாதுய்யா! கைது பண்ணா உடனே ராணுவ கோர்ட்டுல ஒப்படைச்சுடனும்!

பொது ஜனம்; சிவிலியனை எச்சரிக்கை பண்ணாம சுடலாம் என்று மட்டும் சட்டம் இருக்குதா? குழந்தையை கொல்லவேக் கூடாது என்று ஐ.நா யுத்த விதியிலே இருக்குதய்யா! இது நேரிடையாவே இந்திய ராணுவ ஆளுங்க மீறியிருக்கானுங்களே!  இதை சர்வதேசம் வரைக்கும் கொண்டு போகலாம்!

பொது ஜனம்; சரி! கைது பண்ணி! சார்ஜ் ஷீட் பைல் பண்ணி கோர்ட்டுல ஒப்படைக்க சொல்லுங்க! அதுக்கப்புறம் நீதிமன்றத்தின் மூலமா தண்டனை கொடுக்கட்டும்! அதிகாரிக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கட்டும்! 

பொது ஜனம்;இவனுங்க கீழே விழுந்து இறந்துட்டானுங்க என்று பொய் சொல்றானுங்களே! கீழே விழுந்தவனுக்கு குண்டு எப்படி பாயும்? எவன் துப்பாக்கியிலேயிருந்து வந்த குண்டு! என்பது கூடவாத் தெரியாது! இல்லை போஸ்ட் மார்ட்டத்துல இதெல்லாம் வெளி வராதா?! 

பொது ஜனம்; இதையும் சங்கர சுப்பு கொலைக்கேஸ் மாதிரிதான் டீல் பண்ணுமா? 

பொது ஜனம்;ஏழைக்கு ஏதுய்யா வசதி! அதுங்களை அன்றாடக் காய்ச்சிங்க!  இப்படி ஏழைகளை! இந்த நாடு மோசம் பண்ணுதே!

பொது ஜனம்; அந்த ராணுவ ஆளோட குழந்தையை இது மாதிரி கொன்னிருந்தா! அதோட வலி தெரியும்! 

பொது ஜனம்; எந்த குழந்தையாயிருந்தாலும் கொல்லுவதை எப்படிய்யா ஏத்துக்கொள்ளமுடியும்!

பொது ஜனம்; கல்வியைத்தான், இந்த பொம்பளைக்காக "சமச்சீர்" என்ற காரணத்துக்காக நிறுத்திட்டானுங! குடும்பம், குழந்தை குட்டி இதை பத்தி தெரியாத ஒரு பொம்பளை பண்ணுச்சி! இப்ப குழந்தைகள் உயிருக்கும் பாதுகாப்பில்லை! 

பொது ஜனம்;ஏழைகளோட குழந்தைகள்னா சுத்தம்! நரபலி வரைக்கும் போகலாம்! போலீஸ்காரனுங்க கண்டுக்க மாட்டானுங்க! ஒன்னுமில்லாத "பிச்சை"க்கார அமைச்சருக்கு சி.பி.சி.ஐ.டி வைச்சி நோண்டிகிட்டு இருப்பானுங்க!

பொது ஜனம்; அதுக்குத்தான் 5 லட்சம் கொடுத்துடுச்சே! சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்குதே!  அந்த குடும்பம் சைலண்டாயிடும்! அந்த மாதிரி சூழ்நிலையில வாழறவங்க தான் அவங்களெல்லாம்! 

பொது ஜனம்; என்னத்துக்கு இப்ப விசாரணை! அரசு அறிக்கையே வந்துடுச்சு! ராணுவம் தான் சுட்டுதுன்னு!  போய் புடிச்சு போடாமா! 


பொது ஜனம்; மக்கள் மனிதவுரிமையை நாடணும்! கோர்ட்டு படிக்கட்டு ஏறணும்! போராட்டத்தின் மூலம் தீர்வு காணணும்! இது தான் தீர்வுக்கு வழி வகுக்கும்! இல்லைன்னா அப்படியே கேசை மூடிடுவானுங்க!

பொது ஜனம்;மக்கள் சும்மா விடக்கூடாது! நீதிமன்றம் சும்மா விடக்கூடாது! அரசியல் கட்சிகளும் சும்மா விடக்கூடாது!

பொது ஜனம்; குழந்தைகள் உதவி மையம் என்ன பண்ணுது! வேடிக்கை பார்க்குதா? போன் பண்ணா 24 மணிநேரமும் உதவி பண்ணும்னு சொல்லுது குழந்தையை சுட்டு தெருவில வீசி இருக்கானுங்க! பார்த்துட்டு இந்த போலீஸ் கம்முனு இருக்குதே!


பொது ஜனம்; சுட்டது யார்னு தெரியும்? கொன்ற கொலைகாரனும் அங்கேயேத்தான் இருக்கான்! ஆனா! நோ! கைது! நோ தண்டனை! இதுக்கு ஒரு தனி விசாரணை.....??????????

No comments: