Pages

Sunday, 29 November 2009

சயனைட் சாப்பிட்டால் மரணம் 10 விநாடி.....

ஒவ்வொரு தீவிரவாதிக்கும்  பயிற்சி முடிந்ததுமே அவர்களுக்கு கொடுக்கப்படுகிற முதல் சங்கதி இந்த சயனைட் குப்பிதான்....! சயனைட் அடைக்கப்பட்ட அந்த குப்பியைத்தான் கழுத்தில் சங்கிலியோடு  பிணைத்து மாட்டிகொண்டுருப்பார்கள். காவல் துறையினர், மற்றும் எதிரி நாட்டிடம் அகப்பட்டுக் கொண்டால்  இந்த குப்பியை எடுத்து வாயின் ஒரமாக வைத்து லேசா கடித்தா விஷம் உமிழ் நீரில் கலந்து பத்து விநாடிகளில் சர்வ நிச்சயமான மரணம்.



அவ்வளவு வீரியமான நஞ்சு (விஷம்). மற்ற எந்த நஞ்சானாலும்
 சாப்பிட்டவுடன் வயிற்றுக்குள் சென்று உணவுடன் கலந்து பின் ரத்தத்தில் சேரும்பொழுதுதான்  மரணம் சம்பவிக்கும்..ஆனால் சயனைட் அப்படி கிடையாது. உயிரை பரிப்பதில் சயனைட் அதி விரைவு வேகத்தை காட்டும். உமிழ் நீரோடு கலந்து தொண்டைக்குள் இறங்கும் பொழுதே தொண்டைக்குள் இருக்கின்ற சின்ன சின்ன ரத்த குழாய்களையும்,  நரம்புகளை உடைத்து கொண்டு இறங்கும். ரத்தக்குழாய்கள் அறுபடும் பொழுது (கட்டாகும் பொழுது) அதிலிருந்து வெளியேறும் குருதி (ரத்தம்) உணவுக்குழாய் வழியாக இரைப்பையை அடைந்து உடனே நிரம்பிவிடும். கழுத்தில் இருக்கின்ற நரம்புகள் அறுபட்டதுமே மூளைக்கும், இருதயத்துக்கும் செலுத்தப்படும் குருதியின் அளவு குறைந்து விடும். மூளைக்கு செலுத்தப்படும் குருதியின் அளவு குறைஞ்ச அந்த விநாடியே மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) ஏறபட்டுவிடும். மூளை மயக்கம், மாரடைப்பு எல்லாம் ஐந்து விநாடிகளில் நடந்து முடிந்து விடும். பாக்கு கடிக்கிற நேரத்தில் மரணம்.

இன்னும் சில தகவல்கள், எந்த நஞ்சை உண்டாலும் காதிலிருந்துகுருதி வராது. ஆனால் சயனைட் சாப்பிட்டா மட்டும் காதிலிருந்து குருதி (ரத்தம்) கட்டி கட்டியாக வரும்.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும்.....?

தொண்டையில் ரத்தக் குழாய்கள் அறுபட்டதுமே ரத்தம் தறிகெட்டு பாயும். காது மூக்கு என அனைத்து துவாரங்கள் வாழியாகவும்  ரத்தம் வெளியே வரும் எல்லாம் பத்து விநாடிகளுக்குள் முடிந்துவிடும்......!

சரி சயனைட் விஷத்தின் நிறமென்ன? அதன் சுவை என்ன?

அதன் நிறம் அதி வெண்மை நிறம் (பியூர் ஒயிட்) தூள் உப்பு மாதிரி நைசாக இருக்கும். அதன் சுவை  இதுவரை யாருக்கும் தெரியாது. ஏன் இறந்து போனவர்களுக்கே அது தெரியாது? அந்தளவுக்கு மின்னல் வேக மரணம்.....

அதன் அணுக்கள்  மிகவும் அடர்த்தியானது. கண்ணாடி பீங்கான் தூள் மாதிரி....

தற்கொலை என்ற விசயத்தை தள்ளி வைத்துவிட்டு பார்த்தோமானால் சயனைட் ஒரு முக்கியமான தொழிலுக்கு நிரம்பவும் உதவிகரமாக உள்ளது. அது தங்க நகைத் தொழில். தங்க நகை மின்னுவதற்கு சயனைட் தான் காரணம். அதற்கடுத்ததாக எக்கு தொழிற்சாலைகளில்  எக்கின் கடினத்தன்மையை உருவாக்குவதற்கு சயனைட் (டிரிட்மென்ட்) ஒரு ஊக்கியாக ஆக பயன்படுகின்றது.. அதாவது வார்ப்படாமாக ஆகுவதற்கு சயனைட் பயன்படுகின்றது..
 இதை சுலபமாக வாங்க முடியுமா? முடியாது இதை வாங்க வேதிபொருள் அனுமதி சான்று பெற்றிருக்கவேண்டும். ( கெமிக்கல் லைசன்ஸ்). அதுவும் குறிப்பிட்ட அளவுதான் வாங்க முடியும்.

சரி சயனைட் சுவை பற்றிய ருசிகரமான தகவல்....உண்டா..?
உண்டு....
சயனைட் சாப்பிட்ட உடனே மரணம் சம்பவித்து விடுவதால் அதை பற்றி அறிய பலரும் முயற்சி செய்து முடிவில் தோல்வியடைந்து மரணமடைந்துள்ளனர்.
இருந்தாலும் சயனைட் பற்றிய சுவையை எப்படியாவது இந்த உலகத்துக்கு அறிவித்துவிடவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை. இப்படி முயற்சி செய்த ஒரு விஞ்ஞானி மிகவும் எச்சரிக்கையுடன் எல்லாவற்றையும் முன்னேற்பாடாக பட்டியிலிட்டு ஏற்பாடு செய்துவிட்டு அதவாது வெள்ளைத்தாள் (பேப்பர்), எழுதுகோல் (பேனா), சயனைட் விஷம் அனைத்தையும் மேசைமேல் வைத்துவிட்டு காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் தொலைபேசியில் அழைத்தார்.
இன்னும் 5 நிமிடத்தில் சயனைட் விஷத்தை சாப்பிடப்போவதாகவும், அதனோட சுவை என்ன என்பதை இந்த உலகுக்கு அறிவிக்கப்போவதாகவும் அதன் சுவை என்ன என்பதை மேசையில் இருக்கும் காகிதத்தில் எழுதியிருப்பேன். அதை உலகுக்கு அறிவித்து விடுங்கள் என்று கூறி  அதை எப்படி செயல்படுத்தப்போகின்றேன் என்பதையும் தெரிவித்திருக்கின்றார்.

என்ன அது....?

தொலைபேசியில் தொடர்ந்து விளக்கினார் "இப்பொழுது  என் இடது கை ஆட்காட்டி விரலில் ஒரு துளி சயனைட் தூளும் வலது கையில் வெள்ளைத் தாள், எழுது கோல் (பேனா) இருக்கின்றது. சயனைட் என் நாக்கில் வைத்தவுடன் அதன் சுவை தெரிந்துவிடும். அதை தெரியப்படுத்த ஒரே ஒரு எழுத்தை மட்டும் தாளில் எழுதியிருப்பேன் (அவ்வளவு எழுதவே என்க்கு நேரம் இருக்கும் என்பதால்) "S "  என்றால் இனிப்பு ,"B" என்றால் கசப்பு,  "T" என்றால் புளிப்பு எதுமே எழுதவில்லை என்றால் ஒன்றுமில்லை என்று அர்த்தம் நீங்கள் வருவதற்குள் என் உயிர் பிரிந்து போயிருக்கும். இந்த உலகுக்கு ஒரு உண்மையை தெரிவித்துவிட்ட சந்தோஷம் ஒன்றே போதும் "....என்றாராம்.

இப்படி ஒரு சந்தோஷமா?

சொன்னபடியே சயனைட் நஞ்சை நாக்கில்வைத்தார்  எழுது கோலை (பேனாவை) தாளுக்கருகில் (பேப்பர்) கொண்டு போவதற்கு முந்தியே இற்ந்துவிட்டார்..

இதுவரை யாருக்குமே சயனைட் நஞ்சின் சுவை தெரியாது. அதை முயற்சிக்கவும் யாரும் தயாராயில்லை.. அதை தெரிந்து கொள்ள யாரும் முயிற்சிக்காதீர்! அது எந்த சுவையிலாவது இருந்துவிட்டு போகட்டும்....










No comments: