Pages

Sunday, 29 November 2009

காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள்.....?

சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வாரணாசி (காசி) யை பற்றி செய்தி தொகுப்பு வெளியிட்டனர். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றாலும் இது பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்ததால் இது என்னை பெரிதளவு பாதிக்கவில்லை. இணையத்தில் இதை விட பெரிய தகவல்கள் கொடுத்துள்ளனர் படங்களுடன். (வேண்டுமானால் இணையத்தள முகவரியை முகவரியை பிறகு் தருகின்றேன் மிகவும் கொடூரமாக இருக்கும்)அது


அகோரிகளின் வாழ்க்கையாகட்டும் அங்கு பின்பற்றப்படும் வாழ்க்கை முறைகளாகட்டும். இதுபற்றி பலவிதமான சர்ச்சைகள் ஆன்மீகவாதிகள் மற்றும் பகுத்தறிவுவாதிகளால் எழுப்பப்பட்டாலும் நான் அதற்குள் செல்ல விரும்பாமல் என்னை ஆச்சாரியப்படுத்திய ஆறு விசயங்களை பற்றியே ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன். இன்னும் ஆராய்ந்து கொண்டிருப்பேன்.

நான் தேடிய ஆறு அதிசயத்தக்க விசயங்கள்

1. காசியில் பிணங்கள் எரிக்கப்படும் பொழுது ,் பிணவாடைகள் வீசுவதில்லை ஏன்? (நான் போகவில்லை அது பற்றி அரிதியிட்டு கூறமுடியாது பொதுவாக கூறுகின்றனர, தொலைக்காட்சியினரும் ஆமோதித்தனர்்)

2.காசியில் பூக்கள் மணப்பதில்லை ஏன்?

3.காசியில் உள்ள கங்கையாற்றில் குறிப்பாக மணிகர்ணிகா காட் எனும் பகுதியளாகட்டும் இன்னும் பல பகுதிகளாகட்டும். என்னதான் மக்களால் அசுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் அந்நீர் கெடுவதில்லை. அது ஏன்? (அங்கு வாழ்கின்ற் மக்களால்் கூறப்படுவது)

4.மாடுகள் முட்டுவதில்லை அது ஏன்?

(குறிப்பு இது இங்குள்ள (தமிழகத்தில்) கோவில்களிலும் பல மாடுகள் முட்டுவதில்லை ஆனால் அங்கு எந்த இடத்திலும் முட்டுவதில்லை எனப்படுகின்றது)

5.பல்லி ஒலிப்பதில்லை ஏன்?

6.கருடன் பறப்பதில்லை ஏன்?



இதற்கான அறிவியல் காரணங்களை தேடுகின்றேன். ஒரு வேளை சீதோஷ்ண நிலை காரணமாக இருக்குமா? அல்லது அந்த சவங்களின் மீது போற்றப்படும மஞ்சள்்மஞ்சத் துணிகள் காராணமாக இருக்குமா?

கங்கையில் தூய்மைக்கேடு நிறைந்திருந்திருந்தாலும் அது ஒடும் பிராவகத்தினால் அவை மறைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு்டு. ஆனால் செப்பு குவளையில் பிடித்து வைக்கப்படும கங்கைத்் தண்ணீர் (பிணங்கள் எரிக்கும் இடத்திலிருந்து எடுத்தாலும்) பல மாதங்கள் ஆனாலும், ஏன் பல ஆண்டுகள் ஆனாலும், கெடுவதில்லை, என்பதற்கான காரணம் தெரியவில்லை.

ஒரு வேளை செப்பு குவளையில் வைக்கப்படும் அனைத்து தண்ணீரும் கெடாமல் இருக்குமா?

அதற்கு இல்லை என்றே பலரும் பதில் கூறுகின்றனர். பிற இடங்களில் இருந்தோ அல்லது பிற ஆறுிகளிலிருந்தோ தண்ணீர் பிடித்து வைத்தால் ஒரு வாரத்தில் கெட்டு விடும் என்றே பதில் வருகின்றது. அது நமக்கும் தெரியும்.

அப்படியென்றால் கங்கை நீரில் கலந்திருப்பது என்ன?


இது பற்றி அத்தொலைக்காட்சியில் வெளியிடுவார்களா என்று ஆவலுடன் எதிர் பார்த்தேன் ஆனால் அதை பற்றி ஒன்றையும் காணோம்.


மேற்கூறியவற்றிற்கான புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். அங்கு எரிக்கப்படும் பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண கதைகளில் உள்ள காரணமும் இருக்கும். ஆனால் அது எனக்குத் தேவையில்லை. இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.



சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டி என ப்படும, நீரின்் ்ப்படும் ஆக்சிஜன்அளவு அறியும் சௌதனை மூலம் அந்நீரில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும் நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும் இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா?

இது விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை இன்னும் வெளியிடவில்லையா? ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................?


உண்மையை அறிந்து கொள்ளும் ஆவலன்றி வேறொன்றுமில்லை பராபரமே்ரமே............... உண்மையை அறிந்து என்ன செய்யப்போற என்று கேட்டு விடாதீர்கள்........ அதற்குப் பதில் தெரியாது. எங்கேயோ எம் ஜி ஆர் படப்பாடல் ஒலிக்கின்றது எங்கே எப் எம்மில் தான், என்ன பாடல் அது் "ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை"..................

No comments: