உலகில் மிக அசுத்தமான நதிகளில் முதல் நதியாக கங்கை ந்தியை டைம்ஸ் சி என்.என் என்னும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை சீரமைப்பதற்கும் அங்குள்ள சாதுக்கள் எனும் பழமைவாத குழுவினர் அனுமதிப்பதில்லை என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. அவர்களின் கூற்று கங்கை எப்பொழுதும் தூய்மையான புனிதமான நதி என்பது தான் அவர்களது அசைக்கமுடியாத கூற்று.
கங்கை நதி தூய்மையாக இருப்பதற்கு காரணம் அது உற்பத்தியாகும் இடம் தான். அது இமயமலையின் கங்கோத்ரி எனும் இடத்தில் உருவாகின்றது. இது ஒரு படர்ந்த பனிப்பிரேதசம். இந்த பனிப்பிரதேசத்தில் இருக்கின்ற ஐஸ் குகையில் இருந்து தான் கங்கைந்தி உருவாகின்றது. ஐஸ் குகை சொட்டு சொட்டாக உருகி தண்ணீராய் மாறி வெள்ளமாய் பெருக்கெடுத்து சில கிலோ மீட்டர் தூரம் ஒடியதும் பாகீரதி என்ற ஒரு நதியோடு சேர்ந்து தன்னோட பரப்பளவை பெருக்கி கொள்கிறது கங்கை நதி. இது மட்டுமில்லாமல் உத்திரபிரதேசத்தில் ஆல்கொண்டா (அலக்நந்தா) ந்தியுடன் சேர்ந்து பெரிய பிராவகமாக உருக்கொள்கின்றது. இப்படி பல நதிகளின் கூட்டணிகளுடன் அதிகப் பிராவகத்துடன் பாய்கின்றது. 2500 கி.மீ நீளம் கொண்ட கங்கை நதி இரண்டு இடங்களில் மட்டும் இந்துக்களால் புனிதமாக கருதப்படுகின்றது. ஒன்று ஹரித்துவார் இரண்டாவது வாரணாசி.
கங்கை நதி குளிக்க மட்டும் பயன்படும் ந்தி கிடையாது அது பாயும் கரையோரங்களை சார்ந்த ஊர்களில் சுமார் 80000 ச.கி.மீ பரப்பளவுக்குள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை கொடுக்கின்றது.
சுமார் 20 வருடங்களுக்கு முன் வந்த ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம் (WHO) கங்கை தண்ணியை சோதனை செய்து விட்டு இந்த தண்ணியில் எந்த நோய்கிருமியும் கிடையாது என்று அப்படி கிருமிகள் உயிர் வாழவும் சாத்தியமில்லை என்று அறிவித்து விட்டு சென்றது. இது ஒரு கிரிஸ்டல் கிளியர் வாட்டர் குளிப்பதற்கு, குடிப்பதற்கும் இதை விட சிறந்த தண்ணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது என்றும் அறிவித்தது.
அப்படியா! என்று ஆச்சர்யப்படுவதற்குள் அடுத்த 10 வருடத்தில் வந்த அதே (WHO) நிறுவனம் அதாவது இன்றிலிருந்து 10 வருடத்திற்கு முன் வந்த வல்லுநர்கள் நீரை சோதனை செய்து விட்டு கூறியது " இப்பொழுது நீரில் நோய்க்கிருமிகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் 5 சதவீதம் அதிகரித்துள்ளது" என்று கூறி ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதற்கு காரணம் கங்கை நதியோரம் இருக்கின்ற நூற்றுக்கணக்கான ரசாயணத் தொழிற்சாலைகளின் கழிவுகள் இதில் கலப்பதால் . இதில் பல நிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கும், மந்திரிகளுக்கும் சொந்தமானது. புதிது புதிதாக துவக்கப்படும் ஆலைகளுக்கு அனுமதி கொடுப்பதும் ஒரு காரணம். இது எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. அங்கிருக்கும் ஆலைகளை அப்புறபடுத்தினாலும் மட்டுமே இத் தூய்மைக் கேடு சீராகும். இதில் மேலும் சடலங்களையும் இதில் போடப்படுவதால் இன்னும் தூய்மை கேடாகின்றது. இது சமயங்களில் முதலைகள், மீன்களால் சிதைக்கப்படுவதாலும், அவை இருக்கும் பகுதிகளுக்கு சென்று சடலங்களை தண்ணீரில் இறக்க அனுமதிக்கப் படுவதாலும் இது சற்று கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் அங்கு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. சடலங்களினால் ஏற்படும் பாதிப்பை விட தொழிற்சாலைகளினால் ஏற்படும் பாதிப்பே அதிகம் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது.
எது எப்படியோ தூய்மைக் கேடு தூய்மைக்கேடு தான். எதுவுமே மனிதனால் தான் கெடும். இயற்கையால் அல்ல. இதை இனியாவது ஆளும் அரசும், அரசியல் வாதிகளும், பொதுநல அமைப்புகளும் கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கங்கை நதி தப்பிக்கும். இல்லையேல் கங்கை கூவமாகும் கோரத்தை அனைவரும் காண நேரிடும். Tweet
No comments:
Post a Comment