இந்தியாவின் தலைநகர் தில்லி, குமாஸ்தாவின் நகரம் எனப்பெயர் பெற்ற தில்லியில், சுமார் 1.7 கோடி மக்கள் வசிக்கின்றனர். அதில் சுமார் 10 லட்சம் பேர் தமிழர்கள். இதில் பல பேர் தமிழகத்தில் இருந்து அரசு பணிக்காகவும், வணிகம் புரிவதற்காகவும், இன்னும் சில பேர் கூலி வேலைகளுக்காகவும் இங்கிருந்து பல வருடங்களுக்கு முன்பே புலம் பெயர்ந்தவர்கள். அவர்களில் சிலரே நல்ல நிலையில் இருப்பதாகவும், மிகுதியாக உள்ளவர்கள் இன்னும் கஷ்ட ஜூவனமே நடத்தி வருகின்றனர் (3 தலைமுறைகளாக).
இதில் கொடுமை என்னவென்றால் இங்கிருந்து போன பலத்தமிழர்கள் அம்மாநிலத்தவர்களை விட அதாவது மராட்டி, இந்தி பேசுபவர்களை காட்டிலும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாகவே உள்ளனர். அவர்களும் தமிழர்களை கண்டு கொள்வதில்லை. பலர் தங்குவதற்கு இடமின்றி தில்லி தலைநகரின் பிரதான ரயில் நிலைய தண்டவாளத்தின் அருகிலேயே, மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் குடிசை வீடு கட்டி கொண்டு வாழ்கின்றனர். அங்கு வரும் ரயிலில் அடிபட்டு பலரும் இறந்து போயிருக்கின்றனர். பல குழந்தைகள் தவறுதலாக தண்டவளாத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கையில் கை கால் இழந்து ஊனமாகி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பலத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் என்பதே மறந்துவிட்டது கொடுமை. அங்கே தமிழ் படிப்பது இந்த குடிசைவாசி மக்களே அதுவும் தடடு தடுமாறி படிக்கின்றனர். அவர்களுடைய மாத வருமானம் 1000 ருபாயிலிருந்து 1500 ரூபாய்தான். அதுவும் பலர் வீட்டு வேலை செய்பவர்களாகவே கஷ்ட ஜூவனம் நடத்தி வருகின்றனர். (தமிழ் ஏழைகளுக்காவே உருவாக்கப்பட்டது போலும்). அதிலும் பெரும்பாலான ஏழைத் தமிழர்கள் அந்த ஊதியத்தையும் போதைக்கும், குதிரை பந்தயத்துக்கும் அடிமையாகி செலவு செய்து விடுகின்றனர். இதனால் பெறும்பாலும் வறுமைதான், பசி பட்டினி தான்.அங்கு போதை வஸ்துக்கள் மலிந்து கிடப்பதால் இந்த நிலை என்கின்றனர்.
இதுபற்றிய அவலங்களை பிபிசி தமிழோசை தொடர் செய்தி கட்டுரையை ஆறு பாகங்களாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழர்கள் தலைநகரிலேயே இத்தனை அவலங்களில் வாழ்வதாக வெளியிடப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதுவே குதிரை கொம்பாக இருக்கின்றதாம்.
அங்கு தில்லி தமிழ் சங்கத் தலைவராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி தமிழர்கள் வாழும் நிலைபற்றி கூறுகையில் முன்பெல்லாம் 1970. 1960 க்கு முன்பு தமிழர்கள் ஒருவர் தில்லியில் வந்து அவதிபட்டால் தமிழர்கள் தேடிச்சென்று உதவி புரிவர் இன்று அவ்வாறு உதவும் மனப்பான்மை மக்களிடையே குறைந்துவிட்டது. இங்கு பொருளாதார சிக்கல் அதிகம் இருப்பதால். ஒருவருக்கு தன் வாழ்நாளில் சேமிப்பு என்பதே கிடையாது என்று காவல்துறை ஆணையராக தில்லியில் பணிபுரியும் தமிழர் ஒருவர் கூறுகின்றார். தில்லியில் ஒரு சிறிய வீடு வாங்குவதென்றால் 45 லட்சம் என்றும் கூறுகின்றார். (இங்கேயும் அப்படித்தான் என்ன ஆணையரோ தெரியவில்லை, உதவும் மன்ப்பான்மை இல்லை என்பதை மறைப்பதற்கு ஒரு சாக்கு). தமிழர்கள் அங்கு வருவது நல்லதல்ல என்றும் தில்லியில் பல ஆண்டுகளுக்கு இன்றும் மளிகை நடத்தி வரும் ஒருவர் மிகத்துயரமாக கூறுகின்றார்.
தமிழினத்துரோகிகள் என்று கத்தி கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் இங்கு தான் அடிக்கடி வருகின்றனர். இது அரசியல் இல்லை என்பதால் இதை அப்படியே கவனிக்காதது போல் விட்டு விட்டனர். இங்குள்ள தமிழர்களை முதலில் கவனியுங்கள் சொந்த நாட்டிலேயே தமிழன் அகதியாக இருப்பதை.அப்புரம் இலங்கைக்கு செல்ல்லாம். இத்தனைக்கும் பிரதமர், குடியரசுத்தலைவர் என்று அனைத்து மாநில அரசாங்கமும் ஒருங்கிணைந்த இடம். அங்கேயே இந்த நிலை. இதற்காக அந்த மாநில முதல்வர் ஷீலாதீட்சித்திடம் முறையிட்டாலும் , அவர் அங்கு ஒரு சில குறைகள் இருக்கும் அவ்வளவுதான் என்று பூசி மழுப்புகின்றார். தமிழினம், தொப்புள் கொடி உறவு என்று ஆளாளுக்கு குரல் கொடுக்கின்றார்களே, இங்கேயே நிறைய தொப்புள் கொடிகள் அவலநிலையில் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையா?
பிபிசி செய்தி கட்டுரை (சிறப்பு பேட்டியுடன்)http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/09/090928_delhitamils.shtml
Tweet
No comments:
Post a Comment