இது யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல இது செய்திகளின் அடிப்படையிலேயே இந்த இடுகை இடப்பட்டுள்ளது. என்பதை முதலிலேயே தெரிவித்து கொள்கின்றேன்.
சபரிமலையில் மகரசங்கராந்தி அன்று தெரியும் ஜோதியை மகரஜோதி
எனப்படுகின்றது. இந்த ஜோதியைப்பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து இந்த ஜோதியை ஆன்மீகவாதிகள் காணுகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று. இது பாவம் செய்தவர்கள் அதாவது தவறு செய்தவர் கண்களுக்கு இது தெரிவதில்லை என்ற நம்பிக்கையும் காலங்காலமாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பிறகு இந்த புரளிகள் அடங்கின. இது கடவுள் ஐயப்பன் மகரசங்கராந்தி அன்று ஜோதி வடிவமாக காட்சி அளிக்கின்றார் என்றே அனைவராலும்
நம்ப்பபட்டு வந்தது இன்றும் நம்புகின்றவர் இருக்கின்றனர்.
நம்ப்பபட்டு வந்தது இன்றும் நம்புகின்றவர் இருக்கின்றனர்.
ஆனால் இது உண்மையில் மகர ஜோதி கடவுளின் உருவமா? என்றால் இல்லை. இது பற்றிய சில உண்மைகளை பார்ப்போம். அதற்கு முன் சில புள்ளியியல் விவரங்களை தெரிவிப்பதில் தவறொன்றுமில்லை. சபரிமலையில் இறைபற்றாளர்களின் வருகை வருடத்திற்கு 3 கோடியே 50 இலட்சம் பேர்கள் என்றும் அதன் வருட வருமானம் 76 கோடி என்றும் அதன் தேவஸ்தான தலைவர் எம்.ஜி.நாயர் பிசினஸ் லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது 2007 ஆண்டு நிலவரப்படி மேலும் வருடத்திற்கு 30 சதவீத இறைபற்றாளர்களின் எண்ணிக்கை கூடுகின்றது என்று பிரண்ட் லைன் பத்திரிகை குறிப்பிடுகின்றது. இது சுமார் 50 வருடங்களுக்கு முன்னாள் வெறும் 50000 எண்ணிக்கை கொண்ட இறைபற்றாளர்களே இக்கோயிலுக்கு சென்று வந்துள்ளனர். அதுவும் கேரள மாநிலத்து மக்களே. இது பின்னாளில் பிற மாநிலத்து மக்களும் செல்ல ஆரம்பித்தனர் எனபது வரலாறு.
பெரிய விபத்து
மகரஜோதியை 1999 ஆண்டு மகர சங்கராந்தியன்று அதாவது ஜனவரி 14 ந்தேதியன்று காணச்சென்ற பெரும்பாலான பக்தர்கள் நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகளில் சிக்கி அங்கிருந்த மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து 53 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அனைவரும் அறிந்திருப்பார்கள். இதில் பெரும்பாலும் வெளிமாநிலத்து மக்களே. உண்மையில் மகரஜோதி என்பது சபரிமலைக்கு பக்கத்தில் இருக்கும் பொன்னம்பலமேடு எனும் வனப்பகுதி மலை மேல் எரிக்கப்படும் கற்பூரதீபமே. இது தவறாக மகரஜோதி என பிறமாநிலத்து மக்களால் யூகிக்கப்படுகின்றது. என்று அங்குள்ளவர்களே கூறுகின்றனர். அதை இவ்வாறு விளக்குகின்றனர். "மகரசங்கராந்தியன்று தெரிவது மகரவிளக்கு" என்றும் "அது மனிதர்களால் ஏற்றப்படும் விளக்கு (அதுதான் கற்பூர தீபம்- அதை அவர்கள் குறிப்பிட மறுக்கின்றனர் காரணம் என்னவென்று அறிந்து கொள்ள தங்கள் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன்-அதற்கான காரணம் ஒரளவக்கு புள்ளிவிவரங்களில் மறைந்துள்ளது). "அதையே மகரஜோதி என மக்கள் கருதுகின்றனர். உண்மையில் மகர ஜோதி என்பது ஒரு நட்சத்திரம். அது சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்தது இப்பொழுது தெரிவதில்லை". (பாவம் நிறைய பேர் செய்திருப்பார்களோ?) "அந்த விசயம் இங்குள்ள பலருக்கு தெரியும் வெளி மாநிலத்தவர்க்கு தெரியாது" என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றனர். இதை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா? இத்தனைக்கும் அங்கு பொதுவுடமை கட்சியின் ஆட்சி நடைபெறுகின்றது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அதை அறிவிக்க மாட்டார்கள். அது வேறு விசயம். (இது வியாபார உலகம்)
மகரஜோதியின் உண்மை
அவர்கள் அறிவிக்காவிட்டால் என்ன? நம்மிடம் ஆதாரம் இருக்கின்றது. அதை பார்ப்போம். கேரளாவில் உள்ள ஒரு நல்ல மனிதர் இதை இடுகையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் இதை என்.டி.டிவி, சி.என்.என் தொலைக்காட்சிகள் செய்திகளாக வெளியிட்டுள்ளன. அந்த தகவல்கள் இணையத்திலேயே உள்ளன. சென்று பார்க்கலாம்.
மகரசங்கராந்தியன்று கேரள வனத்துறையினர் மற்றும் கேரள மின்சார வாரியம் (KSEB) இணைந்து ஏற்றப்படும் கற்பூரத்தின் தீபமே மகரஜோதி (மகர விளக்கு). இது அங்கு அமைக்கப்பட்ட காங்கிரிட் மேடையில், அதாவது சபரிமலைக்கு நேர் எதிர் திசையில் எரியூட்டப்படும். சபரிமலையில் இருக்கும் இறைபற்றாளர்கள் கண்களுக்கு இவர்கள் தெரியமாட்டார்கள். சுமார் ஆறுமணிக்கு கிலோ கணக்கில் கற்பூரங்களை பெரிய தட்டிலிட்டு, பற்றவைத்தபின் அதை முதலில் தூக்கி கண்பிப்பார்கள். உடனே ஈர சாக்குப் பை கொண்டு அணைப்பார்கள். மறுபடியும் ஏற்றி காண்பிப்பார்கள், ஈரசாக்கு கொண்டு அணைப்பார்கள். மூன்றாம் முறை ஏற்றி காண்பிப்பார்கள், ஈரசாக்கு கொண்டு அணைத்து விட்டு வேலை முடிந்து விட்டது என்று வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். இதுதான் அங்கு வருடாவருடம் நடப்பது. அந்த மலைப்பகுதி கேரள வனக் காவலர்களாலும், அங்கிருக்கும் பொச்சு பம்பா அணையின் மின்னேற்று ஊழியர்களின் கட்டுபாட்டிலும் அந்தப்பகுதி அதிக பாதுகாப்புடன் இருப்பதால் அங்கு யாரும் செல்ல முடிவதில்லை. காரணம் வியாபாரம் தான். இந்த தீபம் இந்த ஊழியர்களின் உதவியோடு தான் ஏற்றப்படுகின்றது. ஏற்றுபவர்களும் இவர்களே. இதை எப்படியோ நண்பர் சைனோஷ் மோப்பம் பிடித்து வந்து விட்டார் போலிருக்கின்றது. அதை அவர் இடுகையின் மூலம் வெளியிட்டுள்ளார், படங்களுடன். உண்மை என்றாவது வெளி வந்துதானே ஆகவேண்டும். காணொளி (வீடியோ) காட்சிகளும் வெளியிட்டுள்ளார்.
தகவலுக்காக
இன்னொரு தகவல் சபரிமலை குறித்து பல வ.ழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. அதில் முக்கிய வழக்கு பெண்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது என்ற கட்டுபாட்டை எதிர்த்து வழக்கு. ஆனால் அது பெண்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்ததாக அறிகின்றேன். இதுமட்டுமில்லாமல் புத்த மதத்தினரும் சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர். புத்தர் அங்கு தங்கிய இடம் என்பதால் அவர்களும் வழக்கின் மூலமாக தேவஸ்தானத்தோடு சண்டைபோட்டு கொண்டு வருகின்றனர். என்பதும் செய்தி. இதற்கு மேலும் பல நடிகைகளினால் ஏற்பட்ட சர்ச்சைகளும் இருக்கின்றன அதை ஏற்கனேவே அறிந்திருப்பீர்கள்.
இத்தனை சர்ச்சைகளும் அறியாமல் மக்கள் அங்கே எடுத்துபோய் காசை கொட்டி கொண்டிருக்கின்றனர். அதற்கு இங்கே உள்ள கோயில்களில் கொட்டினாலும் தகும். கடவுள் தான்....................உள்ளாரே?
No comments:
Post a Comment