Pages

Monday 30 November, 2009

ஒருவர் பொருளாதாரத்தில் மேம்பட்டபிறகு தான் திருமணம். செய்து கொள்ள வேண்டுமா? இது சரியா?

சில மாதங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் இந்த தலைப்பு பற்றி அலசப்பட்டுள்ளது. அப்பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் பொருளாதாரா சரிவை சந்திப்பதற்கு சற்று முன். அதில் பெரும்பாலனவர்கள் பணம் சம்பாதித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று வாதிட்டனர். அதில் பலபேருக்கு அகவை 35 ஐ தொட்டுவிட்டது. இன்னும் சிலருக்கு 40 வயது அதற்கு மேலும் இருக்கும். ஆனால் இன்னும் திருமணத்தை தள்ளிபோடுகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திருமணம் செய்து கொண்டபின் பல பொருளாதார சிக்கலுக்கு நாம் ஆளாக நேரிடும் ஆகையால் ஒரு வீடு , பண சேமிப்பு,  வாகன வசதி இவற்றை பெருக்கிகொண்டபின் திருமணம் செய்து கொள்வதே நல்லது. அப்பொழுது தான் சந்தோஷமாக வாழ முடியும் என்று வாதிட்டனர். இது மிகவும் தவறு.


இவர்களில் பெரும்பாலோனோர் ஒன்றை மறந்துவிட்டனர். அதை நிகழ்ச்சி அமைப்பாளர் கோபி அவர்களும் சுட்டி காட்ட மறந்துவிட்டார். அதில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனும் (ஆம் இன்றைய வெற்றி பட இயக்குநர் பேராண்மையை எடுத்தவர் தான்) கலந்து கொண்டு சில கருத்து களை எடுத்துரைத்தார். அவருக்கும் திருமணம் ஆகவில்லை. அதற்கு கூறிய காரணம் இதுதான் " சினிமாத் துறையில்  லட்சியங்களுக்காகவே காலத்தை ஒட்டியதால் வயது கூடிக்கொண்டு போவது கண்ணுக்கு தெரியவில்லை".. "ஆனால் இப்படி என்னை போல் யாரும் இருக்க்கூடாது என்பதே என் வேண்டுகோள். திருமணம் பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல". என்ற தன் தவற்றை எடுத்து வைத்தார்.

எல்லோரும் திருமணம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் முதலில் பணம் தான் முக்கியம் என்று ஆண், பெண் இருபாலரும் கருதுகின்றனர். பொருள் தேவைதான் அதுவே வாழ்க்கையாகாது. அந்த பொருள் மதிப்பை வைத்து துணையை தேட முனைவதால் வந்த வினை. இதில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரே இம்மாதிரி கொள்கையுடன் வாழ்கின்றனர்.  இருக்கின்ற குறைந்த வசதிகளோடு வாழ வசதியிருக்கின்றது. அந்த வசதியில் சாதரண குடும்பத்து துணை தான் கிடைக்கும் என்ற  குறுகிய மனப்பான்மையில் பலர் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அவதிப்படுகின்றனர். (மனது என்பதை மறந்துவிட்டு பணத்தை வைத்து துணை தேடுபவர்கள்)

தற்பொழுது  மணமுறிவு (விவாகரத்து) கேட்டு குடும்ப நீதிமன்றங்களின்  படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பவர்களில் பலர் இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்களே. இவர்களின் குழந்தைகள் அப்பா அம்மா இருவர் இருந்தும் அனாதையாக தத்தளித்து கொண்டிருப்பதை நாம் காணாமல் இல்லை. ஒரு வயதுக்கு மேல் தாம்பத்யத்திற்கு,  உடல் அந்தளவுக்கு ஒத்துழைப்பதில்லை. இதுவும் ஒரு காரணம். இதையே வழக்கறிஞர்களிடம் கூறுகின்றனர். போதாக்குறைக்கு குழந்தை பேறுகளை வேறு தள்ளிப் போடுகின்றனர். அதற்கு பிறகு 12 வருடங்கள் கழித்து குழந்தைகள் பெற்று கொள்கின்றனர். அதற்காக பல ஆயிரங்கள், லட்சங்கள் கூட செல்வு செய்கின்றனர். இதென்னவோ சுவிட்ச் தட்டினால் குழந்தை வந்தா விழுந்துவிடும். உடலியல், மரபியல், சம்பந்த பட்ட விசயங்கள் இதில அடங்கியுள்ளன என்பதை எப்படி மறந்தனர்.இதில் கல்வியறிவு பெற்றவர்களே இந்த தவற்றை செய்கின்றனர்.

ஒரு காலத்தில் சிறு வயதில் திருமணம் செய்து வந்ததை நாம் பால்ய விவாகம் என  தற்பொழுது அதை குற்றமாகவே கருதுகின்றோம். அதே போன்று தான் ஒரு வயதுக்கு மேல் மீறிவிட்டால் ........அந்த திருமணமும் பொருந்தா திருமணம் என்றே எடுத்து கொள்ளவேண்டும்.. மனிதர்களின் ஆயுளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது .

(உடல் உழைப்பு  இப்பொழுது மிகவும் குறைவு. எல்லோரும் கடற்கைரையில் உடற்பயிற்சி செய்து  கொண்டு வருவதைஅறியலாம். ஆனால் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த. விவசாயி என்றைக்குமே உடற்பயிற்சி செய்ததில்லை. அவன் செய்யும் வேலையே உடற்பயிற்சிதான் அவருக்கு ஆயுளும் அதிகம் இதையும் காணலாம்.)


அதுமட்டுமில்லாமல் இன்னோரு முக்கிய விசயத்தையும் இவர்கள் கவனிக்கத் தவிறிவிட்டனர். இதை புள்ளியல் ரீதியாக சொல்வதென்றால் 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 80 அதற்கு முன் 100 இருந்திருக்கலாம். அதே போன்று 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மனிதனின் சராசரி ஆயுட்காலம்  60. இதன்படி இப்பொழுது இன்னும் குறைந்திருக்கும் எல்லோரும் கணிணி முன் உட்கார்ந்துள்ளனர். ஆகையால் பரிணாம வளர்ச்சியின்படி இன்னும் குறைந்திருக்கும்.

மனிதனின் ஆயுள்
.ஆனால் 40 வயதுக்கு மேல்தான் திருமணம் 48-50 வயதில் தான் குழந்தைப் பேறு என்று குழந்தை பெற்றுகொண்டால், அந்த குழந்தையை மேனிலை கல்வி தாண்டுவதற்குள் பெற்றோர்களின் ஆயுள் ஒத்துழைக்காது. அவர்கள் மறைந்துவிட்டால் அவர்கள் நிலை என்னாவது? எல்லோரும் ஒரு நாள் போகவேண்டியவர்கள் தான்.. குறைந்தபட்சம் அவர்களின் பிள்ளைகள் திருமணம்  வரைக்குமாவது அம்மக்கள் (தம்பதிகள்) வாழவேண்டும் என்ற  நிலை பொய்க்கும்பொழுது. பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு விடுகின்றது. அதற்கு பிறகு என்ன சேர்த்து வைத்திருந்தாலும் அவை அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி விடாது. எல்லோராலும் தாய் தந்தையரின் அரவணைப்பை கொடுத்து விட முடியாது. அது பெற்றவர்களால் மட்டுமே முடியும். அது அவர்களுக்கே உரிய கடமையாகும்..

வாலிபம் போனபின்

வாலிபத்தை ஒதுக்கிய பின்பு திருமணம் செய்து கொண்டால். ஒரு சலிப்பான உணர்வேயே இருவருக்கும் ஏற்படுத்தும். இதை மனோதத்துவ ரீதியில் அணுகினால் உண்மை புரியும். இல்லையேல் பிறகு சிவாஜி மாதிரி ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைன்ட் (No Peace of Mind)  என்று பாட்டு பாடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். இதைதான் வெளிநாடுகளில் உள்ளவர்கள் பின்பற்றி வருகின்றனர். நாமும் அதையே பின்பற்ற வேண்டும் அவசியமில்லை. அவர்களே அந்த வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். வாழ்க்கையின் எல்லா பருவங்களையும் ரசிக்கவேண்டும், அனுபவிக்கவேண்டும்.. அதில் தம்பதியர், பெற்றோர், மூத்த குடிமகன்கள்..... என்று இன்னும் பல பருவங்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் மனிதர்கள் அனுபவிக்க மறந்துவிட்டனர். தனிமை என்று தனிமை படுத்தி அவன் அழும்போதும் அவனுக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமில்லாமல் வாழ முற்படுகின்றான். ஆகையால் தான் எந்திரமயமான உலகில் எந்திரமாகவே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். எந்திரம் பழுதடைந்துவிட்டால் அதை யாரும் சீண்டுவதில்லை. அதே நிலைதான் மனிதனுக்கும். இன்று நடக்கும் எல்லா குற்ற செயல்களுக்கும் அதுவே காரணம். வேண்டுமென்றால் அனைத்தையும் பொருத்தி பாருங்கள்.உண்மை புரியும்.

பணம் சம்பாதிக்கமுடியும்
ஒருவர் திருமணத்திற்கு பின் கூட பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் நாம் ஆசைக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் வாழ்க்கையில் இதுமாதிரி ஒன்றை இழக்கவேண்டும்.. அதற்கு பிறகு பணம் இருக்கும், வாழ்க்கை  இருக்காது. பலர் திருமணம் ஆனபிறகு மனைவியையும் விட்டு விட்டு எங்கோ கண்காணாத இடத்துக்கு சென்று பணிபுரிகின்றனர், அதற்கு அவர் திருமணமே செய்திருக்க வேண்டியதில்லை. உடனே என்னை திட்டாதீர்கள்.  இதை அந்த பெண் திட்டிக்கொண்டிருக்கும் அல்லது அந்த ஆண் திட்டிகொண்டிருப்பார்.. இதை சமூகத்தில் பல இடங்களில் கண்டிருக்கின்றேன். பெண்கள் புலம்பவும் கேட்டிருக்கின்றேன் அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.

அயல்நாட்டில் பணிபுரிவோரின் குடும்பம்

குழந்தைகளுக்கு அப்பா முகமே தெரியாத அளவிற்கு வெளிநாட்டிற்கு போய்தான் சம்பாதித்து வரவேண்டுமா? அவர்கள் வளருவதை பார்க்க பெற்றவரான அவருக்கு, அம்மாவுக்கு ஆசையே வராதா? அந்த குழந்தைக்கு தான் அப்பாவை பார்க்கவேண்டும் என்ற ஆசை வராதா? நீங்கள் தியாகம் செய்கிறீர்கள் சரி..... உங்களோடு சேர்ந்து அனைவரும் தியாகம் செய்ய எப்படி வற்புறுத்த முடியும்.. உணர்வுகளை புரிந்து கொள்ளவே திருமணம், அதே போன்று தான் தாம்பத்யம் அதை பணம் கொண்டு அழித்து எதை சாதிக்க போகின்றீர்கள்...... இதன் விளைவுகளைத்தான்  இன்று பல்வேறு குற்றங்களின் நிகழ்வுகளாக நாம் காணுகின்றோம்.  (அப்புறம் பொம்பல என்ன செய்யுது பாரு .....?  இதெல்லாம் சொன்னால்.... பொம்பல் மனுஷி இல்லை என்று ஆகிவிடுமா?)  உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் சென்னை கே.கே நகர் பாட்டு ஆசிரியை ஆனந்தலட்சுமி, மற்றும் அவர்மகன் கொலையுண்டது. இன்னும் அதை தொடர்ந்து வரும் சம்பவங்கள் எல்லாம் இதை தான் உணர்த்துகின்றன.

சரியான வயதில் திருமணம் செய்வதே நல்லது
திருமணத்தை சரியான நேரத்தில் செய்து கொள்ளுங்கள் அதற்கு பின் உங்கள் துணையோடு , ஆலோசனையோடு சாதனையைத் தொடருங்கள்.  எதற்காகவும் வாழ்க்கையை இழ்க்காதீர்? எது போனாலும் கிடைக்கும்................?

ஒருவருக்குள்ள திறமை இன்னொருவருக்கு இருக்காது. அதே போன்று ஒருவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி இன்னொருவருக்கு கிடைக்காது. ஏழ்மையிலும் மகிழ்ச்சி இருக்கின்றது அது பணம் படைத்தவர்களுக்கு கிடைப்பதில்லை. பணம் படைத்தவர்களுக்கு நிறைய பணம் இருக்கும், ஆனால்அன்பு பாசம்,  இவைகள் கிடைக்காமல் ஏங்குவதை நான் பலரிடம் பார்த்திருக்கின்றேன்.நல்ல உடல் நலம் இல்லாமல் அவதியுறுவதையும் கண்டிருக்கின்றேன்......... இதுதான் வாழ்க்கையின் தத்துவம். இதை உணர்ந்தால் என்றும் இன்பமே........

No comments: