Pages

Monday 30 November, 2009

இந்தியாவின் முதல் எலும்பு வங்கியின் நிலை......?

இந்தியாவின் முதல் எலும்பு வங்கி, தில்லி எய்ம்ஸ் (AIMS) நிறுவனத்தால், ஒ ஆர் பி ஒ (ORBO-organ Retrieval Banking Organisation) வழிகாட்டுதலுடன் 1999 வருடம் இந்த கங்கை ஆற்றின் கரையோரம் எரிக்கும் சடலங்களை, மிதக்கும் சடலங்களை  மீட்டு அதன் எலும்புகளை விபத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு  பொருத்துவதற்காகவும்,  சேவை மனப்பான்மையுடன் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் துவக்கப்பட்டது. வீணாக போகின்ற உடல் தானே என்று அதை உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு தரலாம் அல்லவா?  அப்படியளிப்பதின் மூலம் பல விபத்துகளில் கை கால் இழந்தவர்களின் எலும்புகளை சீர் செய்யவதற்கு உபயோகப்படும் என்ற நிலையில் தொடங்கப் பட்டது. ஆனால் இன்று வரை அங்கு 6 சடலங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக எலும்பு முறிவு மருத்துவ நிபுனர் ராஜேஷ் மிஸ்ரா தெரிவிக்கின்றார். அந்த வங்கியின் எலும்பு சேமிப்பு அறைகள் இப்பவும் காலியாக உள்ளதை படத்தில் காணலாம். இதனால் பலபேரின் ஊனங்களை எங்களால் சரிசெய்யமுடியவில்லை என்று வருத்தப்பட்டு கொள்கின்றார் அந்த மருத்துவர். ஒரு வேளை எலும்புகள் கங்கை நீரை தூய்மை படுத்துகின்றது என்ற கருத்து ஒன்று நிலவுகின்றது. அதனால் தான் எலும்புகள் அங்கு தரப்படவில்லையோ?

இந்த தளம் சென்று காண்க  http://pratyush.instablogs.com/entry/no-bone-in-indias-first-bone-bank/

No comments: