Pages

Thursday, 19 November, 2009

Re:பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்டுக்கள்

 குழலி உள்ளிட்ட இடுகைக்கான மறுமொழிகள்

குழலி பின்னூட்டங்களை தடை செய்திருப்பதாக அறிவித்திருந்தார் இருந்தாலும் இதை அந்த கருத்தோடு ஒப்பிட்டு சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன்.

//ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார்....//

பெரியார் சில வழக்கமான பின்பற்றல்களை மூடநம்பிக்கைகளை வளர்க்கின்றது என்பதற்காக அவர் அதை மாற்றிக்காட்டினார். பெரியவர்களிடம் காலில் விழுந்து வணங்குவது இதையும் அவர் விலக்கி வைத்தார். மரியாதை மனதில் இருந்தால் போதும் என்ற நம்பிக்கையை வலியுறுத்துவதற்காக. தன் காலில் ஒரு தொண்டர் விழுந்த பொழுது எடுத்த புகைப்பட பதிவை அழித்தார் என்பது வரலாறு. இது முன்னூதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தினால். நாம் செய்த காரணத்தால் மூடநம்பிக்கையான பின்பற்றல் நடைபெறக்கூடாது, என்பதற்காக. அதுபோலத்தான் காலையில் குளிப்பதை மாற்றிக்காட்டினார்.

சிலருக்கு காலையில் குளிக்காவிட்டால் ஒரு மாதிரியாக சோர்வாக இருக்கும் அத்ற்காக காலையிலேயே குளிப்பார்கள் இதை பெரியாரிஸ்டுகள், பெரியாஸ்டு அல்லாதவர்கள் என்று பிரித்து கொள்ள தேவையில்லை. அவரவர் வியர்வையின் தன்மை தோல் தன்மைக்கேற்றமாதிரி இதை மாற்றி கொள்ளலாம் இதனால் எந்தவித கொள்கை மாற்றமும் அல்லது தடுமாற்றமும் வந்துவிடப்போவதில்லை. சில நேரங்களில் சோம்பேறித்தனத்திற்காகவும் குளிப்பதில்லை. இப்படியெல்லாம் இருப்பதினால் கடவுள் அணுக்கிரகம் கிடைக்காது என்று கூறிவந்தவர்களையும், ஆரோக்கியமில்லை என்று கூறிவந்தவர்களையும் முட்டாளுக்குவதற்காக நடைமுறைப் படுத்தினார். இதையெல்லாம் கண்டிப்பாக கடைப்பிடித்துதான் பெரியாரிஸ்டாக வாழவேண்டும் என்ற அவசியமில்லை. நான் சொல்லுவதையே பகுத்தறிவுடன் சிந்தித்து பார்த்து எது சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியவர் தான் பெரியார் ஆகையாலேயே அவரை பெரியார் என்கின்றோம்.

//எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது,....//

ஒரு குழந்தையை எந்த மதத்திணிப்பும், கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் வளர்த்தாலே அது பகுத்தறிவுவாதியாக வளர்ந்து விடும் அதற்கு பெரியாரிஸ்டு என்ற போர்வைத் தேவையில்லை. அது சாத்தியமில்லை காரணம் குழந்தைகள் செய்யும் குறும்புகளை, தவறுகளை தடுப்பதற்காக முதலில் கடவுளை நம்மையும் அறியாமல் திணிக்கின்றோம் அப்படியில்லையென்றால் பூச்சாண்டிகளையும், தற்காலத்தில் காவலர்களை காட்டி இதுவும் மூடநம்பிக்கை தான். அவர்களை அடிக்காமல், துன்புறுத்தாமல் பணியவைக்க மனிதர்கள் பயனபடுத்தி வரும் சுலபவழி. இது ஆழப்பதிந்து விடுகின்றது. என் குழந்தைக்கும் இந்த மாதிரி பெரியாரை காட்டி அவன் செய்த தவறுக்காக பெரியார் உன்னை மன்னிக்கமாட்டார் என்று கூறினேன் அன்று முதல் பெரியாரின் உருவத்தைப் பார்த்து பயப்பட ஆராம்பித்தான் (அவர் தாடியுடன் இருந்ததை பார்த்து) அவன் மனதில் வேறொரு முகமாக உருவகப்படுத்தி கொண்டான். இதற்கு முன் விவேகானந்தரை காட்டினேன். அவரையும் இப்படி ஒரு தனி சக்தியாக உருவகப்படுத்திகொண்டான். இதன் விளைவு அவர்கள் அவன் கணவில் வந்து மிரட்டினர். எதை நினைத்து கொண்டு படுக்கின்றோமோ அதுதான் கனவாக வருகின்றது. அய்யோ பெரியார் என்னை பார்க்கின்றார் அவரின் படத்தை திருப்பி வையுங்கள், விவேகானந்தர் பார்க்கின்றார் நான் தவறு செய்யவில்லை திருப்பி வையுங்கள் என்று நடுஇரவில் எழுந்த அலர ஆரம்பித்து விட்டது. இவைகளை மனோத்துவ ரிதியில் அனுகவேண்டியது நம் கடமையாகிவிட்டது. இதற்குப் பிறகு பெரியாரிசம் என்பது என்ன? அதை அவன் வளர வளர போதிக்கவேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமையாகும் அதை கண்டிப்பாக பல கல்வி நிறுவனங்கள் செய்யாது மாறாக இன்னும் மூடநம்பிக்கைகளையே கல்வி நிறுவனங்களும் சரி சமூகங்களும் சரி கடவுள் என்ற உருவகத்தையே அவன் மனதில் ஆழப்பதிய வைத்துவிடும் என்னதான் பகுத்தறிவை (பெற்றோர்கள் சிறிதளவே புகுத்தமுடியும்) மீண்டும் சமூகம் மூடநம்பிக்கைகளை வேரூன்றிவிடும். பெற்றோர் எண்ணிக்கை இருநபர்கள் ஆனால் சமூகம் பெரும் எண்ணிக்கை இதிலிருந்து விழித்தெழ கல்வி நிறுவனங்கள் பெரியாரிசத்தை சொல்லித்தருவதில் என்ன தவறு இருக்கமுடியும். மூடநம்பிக்கைகளை சொல்லித்தருவதற்கு நிறுவனங்கள் இருக்கும் பொழுது, பெரியாரிசத்தை புகட்டுவதற்கு ஒரு சில மிகச் சொற்ப கல்வி நிறுவனங்களே உள்ளன. கிருத்துவத்தை ஒரு சில கிருத்துவ கல்வி நிறுவனங்கள் பாரபட்சமில்லாமல் சொல்லிக் கொடுக்கவில்லையா? இதில் மட்டும் திணிப்பு எங்கிருந்து வந்தது. இதில் தான் பகுத்தறிவு வந்துவிடுகின்றதே, வேறு எதிலும் பகுத்தறிவு வருவதில்லையே. என்னை பொருத்தவரை ஏன் எல்லோருக்கும் இதுதான் பகுத்தறிவாக இருக்கும் ஏன், எதற்கு, எப்படி... என்று ஆங்கிலத்தில் WH Questions அடங்கியவையே பகுத்தறிவு அது பெரியாரிசத்தில் நிறைய உண்டு.

மூன்றாவதாக தங்களுடைய பின்னூட்டத்தில்

// நீங்கள்தான் இந்து மதத்தை வெறுப்பவர்கள்ஆயிற்றே....//என்று கூறியிருக்கின்றீர்கள் இது தமிழ் ஒவியா நோக்கி எழுப்பிய வினா அவர் பதிலளித்து விட்டார். இருப்பினும் இந்த வினா இப்படி பலராலும் எழுப்பப்படும் என்பதால் தான் பெரியார் மதம் மாறவில்லை. அவரை மதம் மாறி விடுமாறு கூறியபோதும் இந்த மதத்தில் இருப்பதால் தான் பல சவுகரியங்கள் இருப்பதாக கூறினார். அதையும் விளக்கினார், நாம் இதன் ஒட்டைகளை எடுத்து காட்ட முடியும் இல்லாவிட்டால், உனக்கும் என் மதத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இந்து மதத்தினரால் வைக்கப்படும். அவர் சாதுர்யம் இன்றுவரை நிரூபனம் ஆகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு உங்கள் கேள்வியே சாட்சி.

தவிர இளஞ்சேரன் குறிப்பிட்டதில் தவறொன்றுமில்லை. பிராமாணர்களில் நல்லவர்கள் உள்ளனர் என்ற வாதம் எழுப்பப்பட்டது. அப்பொழுது பிராமணர்கள் மோசமானவர்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது. பாராதியார் தாழ்த்தப்பட்டவருக்கு பூணூல் அணிவித்து அவரை உயர்ந்தவராக்கினார் என்ற பதிலை ஆகா ஒகோ என்று கூத்தாடுபவர்கள் உண்டு. ஏன் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்பதை தீர்மானிக்க ஒரு கயறு தேவையா? அதை தூக்கி எறி ஜாதியை உன் அடிமனத்திலிருந்து தூக்கி எறி, உன் ஜாதிய அடையாளங்களை, மத அடையாளங்களைத் தூக்கி எறி அந்த சமத்துவத்தை வலியுறுத்துவதுதான் பெரியாரிசம். அது இன்று வரை எந்த பிராமணரும் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் நாங்கள் மாறிவிட்டோம் எங்களுக்கும் இடவொதுக்கீடு வேண்டும் என்கின்றனர். இடவொதுக்கீட்டை சலுகை என நினைக்கின்றனர். மிகப்பெரிய தேசிய அரசியல் கட்சி தலைவருக்கே தெரியவில்லை, ஆனால் எப்படியாவது ஆட்சிக்கு மட்டும் வந்து விடவேண்டும். என்ன தான் அப்படி பெரிய படிப்பு படித்தார்களோ தெரியவில்லை.

இங்கிருந்து மதம் மாறி செல்கின்றனர் அவர்களும் அந்த மதத்தில் மூடநம்பிக்கைகளை பின்பற்றிக் கொண்டு இந்து மதத்தை பெரியாரை துணைக்கு வைத்து வாதாடுவார்கள் இது பெரியாரிசமில்லை. என் கல்லூரியில் ஒருவர் கிருத்தவராக மாறிவிட்டார் ஆனால் தலித் என்ற பிரிவில் பயன் பெற்று வந்தார் ஆனால் அவர் பிற்படுத்தபட்டவர் (கிருத்தவர் என்பதால்) தலித்தை காரணம் காட்டி மத்திய அரசு வேலை வாங்கி சென்றுவிட்டார் அது வேறு விசயம். அவர் அடிக்கடி இந்து மதத்தை சாடிக்கொண்டிருப்பார் பெரியாரை உதாரணத்திற்கு வைத்து கொண்டிருப்பார். நான் கூட பெருமை பட்டதுண்டு.

ஒரு நாள் அவர் தேர்வுத்தாளில் jc என்று குறிப்பிட்டார். அதை பார்த்து கேட்ட பொழுது இந்து மதத்தில் உள்ளவர்கள் பிள்ளையார் சுழி போடுகிறார்களே அதற்காகத் தான் நான் உடனே அப்படி என்றால் இனி பெரியார் பெயரை சொல்லி இந்த செயலை செய்யாதே என்று கூறினேன். பெரியார் கூறியதை உன் இன்னோரு மூடநம்பிக்கைக்கும், மதவெறிக்கும் சாதகமாகப் பயன்படுத்தாதே. இது பெரியாருக்கு இழுக்கு அதற்காகவா பாடுபட்டார். இன்று வரை அவரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. பெரியாரிசத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பெரியார் ஒரு கவசம். ஆம் சுயநலக் கவசம். அதைத்தான் சிலர் பின்பற்றுகின்றனர் சில பிராமணர்கள் கூட பெரியாரிசத்தை ஆதாரிப்பார்கள். அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்க வில்லை அப்படிபட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை எதிர்த்தும் கேள்வி கேட்டிருக்கின்றேன். அதற்கு பதில் ஹி ஹி தான்.....நன்றி.

தொடர்புள்ள சுட்டிகள் குழலி பக்கங்கள் ;பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்டுகள்

No comments: