Pages

Thursday 26 November, 2009

அரசு பள்ளி மாணவர்களின் கேள்விகள்?

அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக பாடம் சொல்லித் தருவதாக அவர்களே கூறிக்கொள்கின்றனர். பிறகேன்?  அவர்களுடையப் பிள்ளைகளை மட்டும் அரசு பள்ளிகளில் கல்வி பயிலாமல் தனியார் பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர். அவர்களின் கல்வி புகட்டும் தன்மை மேல் அவர்களுக்கே நம்பிக்கையில்லாமையே இது காட்டுகின்றது. இவர்கள் பிள்ளைகளுக்கே ஒழுங்காக பாடம் சொல்லிக்கொடுக்க முடியாதவரகள் ஊரார் பிள்ளைகளுக்கு எப்படி பாடங்கள் சொல்லிக்கொடுக்க முடியும்?


ஒ அரசு பள்ளிகள் ஏழைகளுக்கு மட்டும்தான் என்று நினைத்து விட்டார்களோ? அப்படி என்றால் இவர் எப்படி பணக்காரர் ஆனார்கள்?. ஏழைப் பள்ளி மாணவர்களிடம் தனிப்பயிற்சி வகுப்பு எடுத்து அவர்களிடம் இருக்கும் மிச்ச மீதியை பிடுங்கி கொண்டு பணக்காரர் ஆனார்களா? அல்லது ஏழை, பாழை, செல்வந்தன் என அனைவரும் தன் வரும்படியை அரசுக்கு வரியாக செலுத்தும் பணத்தை அதிகப்படியான சம்பளமாகப்  பெற்று பணக்காரர் ஆனார்களா?

இல்லையில்லை இங்கே படித்தால் ஆங்கிலம் பேச முடியாது. ஆங்கிலம் பேசமுடியாவிட்டால் தன் பிள்ளைகள் பிற்காலத்தில் பணம் சம்பாதிக்க முடியாது. பணக்காரர்கள் ஆக முடியாது. அப்படியென்றால் ஏழைகள் இங்கே படித்தால் ஏழைகளாகவே இருக்கலாம். அதற்கு எதற்கு கல்வி. ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முடியாத இவர்களுக்கு, ஆங்கிலமே தெரியாத இவர்களுக்கு ஏன் மக்களின் இவ்வளவு வரிப்பணம் சம்பளமாக.

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் 80 சதவீதம் பேர்களின் பிள்ளைகள் தனியார் கட்டணப் பள்ளிக்கூடத்தில் பயில்வதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. இனி ஏன் இந்த தகுதியற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம். இன்னும் மாணவர்களை கல்வி கற்ற குருடர்களாக ஆக்குவதற்காகவா? இன்னும் ஏழையாக. இன்னும் வறுமையில் உழல்வதற்காக. பின்னாளில் இந்த தனியார் பள்ளியில் பயின்ற மேதாவிகளின் பிள்ளைகளோடு போட்டி போட்டு, துவண்டு போன தன் இயலாமையை நினைத்து, நினைத்து தற்கொலையில் தங்களுடைய வாழ்க்கையை முடித்து கொள்வதற்காகவா?

தனியார் பள்ளிக்கூட ஆசிரியரகள் குறைந்த சம்பளத்தில் (கல்வியும் குறைவுதான) அவர்களால் செய்ய முடிவதை இவர்களால் இவ்வளவு அதக சம்பளத்திலும் செய்யமுடியவில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களின் நம்பகத்தன்மை எங்கே இருக்கின்றது. அனைவரையும் பாரபட்சமின்றி நீக்குங்கள். கல்வியை இலவசமாக்குங்கள். அதுவே உண்மையான சமச்சீர் கல்வி. அக் கல்வியை  நடைமுறை படுத்தும்  நாடே வல்லரசு நாடாகும். குப்பனுக்கும், சுப்பனுக்கும் ஒரே கல்வி. ஒரே நீதி். எங்கும் சமத்துவம். நடக்குமா? பொறுத்திருப்போம், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.









மாநகராட்சி பள்ளி மாணவன் மாநாகராட்சி பள்ளி ஆசிரியரை நோக்கி எழுப்பிய கேள்விகள் கவிதைகளாக......

சாக்பீஸ் வாங்கிவரச் சொன்னாய்
உனக்காக சாக்பீஸ் வாங்கி வந்தேன்
டீ வாங்கிவரச் சொன்னாய்,
வாங்கி வந்தேன்
வீட்டிற்கு கறி காய் வாங்கி வரச்சொன்னாய் 
வாங்கிவந்தேன்
உன் துணிமணிகளை துவைக்கச் சொன்னாய்
துவைத்தேன்.
உன் வீட்டு பத்து பாத்திரங்களை கழுவச் சொன்னாய்
 கழுவினேன்.
நீ தூங்கும் பொழுது கால் அமுக்கி விடச் சொன்னாய்
அதையும் செய்திருக்கின்றேன்.



உன் கழிவறைக்குள் விழுந்த 1 ரூபாய் காசை 
கையை விட்டு எடுக்கச் சொன்னாய்
எடுத்தேன்.
சரி எனக்காக என்ன செய்தாய்
கல்வி கற்று கொடுக்க  மறந்தாயே.


திரைக் கவிஞர் கபிலன் கூறியது.







No comments: