Pages

Friday, 15 January, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -2
ஆரிய முறை திருமணங்கள் வலியுறுத்துவது பற்றியும், அதிலிருந்து சுயமரியாதை தருமணங்கள் பெண்ணின் உரிமை பாதுகாக்கப்படுகின்றது என்பதை பற்றி பெரியார் கூறுபவையாக பேராசிரியர் நன்னன் விளக்குபவை

ஒரு பெண்ணைத் தானம், தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் அந்த பெண்ணைக் கணவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கேட்க நமக்கு உரிமையில்லை. அவன் அடிக்கலாம் கொடுமை செய்யாலாம் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். வாடகைக்குத் தரலாம்; தான் மோட்சம் பெற மற்றவனுக்குத் தரலாம், சூதாடும் பொழுது மனைவியை பந்தயப் பொருளாக வைத்து ஆடலாம். ஆரிய முறைத் திருமணத்தின் கருத்து இதுதான்.


இத்தகைய கொடுமையும் இழிவும் நீங்கிப் பெண் பெருமைப்பட ஏற்பட்டது தான் பெரியாரின் திருமண முறை பெற்றோர்களாகப் பார்த்துப் பெண்ணை ஒருவனுக்கு பிடித்து கொடுப்பது என்பது ஒழிந்து, பெண் தனக்கு வயதும், அறிவும் வந்து தனக்கென வாழும் வழியும் கிடைத்த பின் தானே தனக்கு பொருத்தமான ஒருவனை தேர்ந்தெடுத்து கொள்வது தான். இதுவே சீர்திருத்தத் திருமண முறையாகும்.

கன்னிகா தானம், தாரா முகூர்த்தம், எனும் சொற்கள் அகராதிகளில் கூட இல்லாமல் செய்ய வேண்டுமும் என்பதே பெண்ணின் பெருமைக்கு பெரியாற் காட்டும் வழியாகும்.

பன்னெடுங்காலமாகத் தமிழ் நாட்டிலும் பெண்ணினம் அனுபவித்து வந்த மற்றொரு பொல்லாங்கு ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம் என்பது. இதற்கு கடவுள் களிலிருந்து வேதபுராண சாஸ்திர, சம்பிரதாய, இதிகாசங்கள் வரை ஆதாரங்கள் நிரைய உண்டு. சுயமரியாதை இயக்கம் தோன்றி வலுப்பெற்ற பிறகு இப்பொல்லாங்கு நீங்கியது. என்பதோடு ஒருவன் ஒருத்தி என்னும் வழக்கம் பெருமை யாடையதாகக் கருதப்பட்டு அது வழக்கம் பெருமை யடையதாகக் கருதப்பட்டு அது சட்டப்படியானதொரு முறையாகவும் ஆயிற்று.தமிழ்த் திருமணம் முறை விளக்கம்

தமிழ்த் திருமண முறைகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை முறையாக ஒவ்வொரு பகுதியாக விளக்கப்ப்டுள்ளது.

1. மணப்பந்தல்

வீட்டின் முற்றத்தில் நான்கு கால்களை நட்டு கால்களுக்குத் தென்னை ஒலைகளைச் சுற்றி, வாழை மரங்கள் கட்டி, பந்தலின் நான்கு பக்கமும் மாவிலக்குத் தோரணமும் பூச்சரங்களும் தொங்கவிட்டு ஒரு சோலை போன்ற இடத்தை அமைத்துக் கொள்வர். மாக்கோலம் போட்டு, செம்மண் இட்டு அழுகு செய்வர்.


2. பந்தக்கால்

தெய்வத்தின் துணையால் திருமணங்கள் கூடுகின்றன. அச்சோலையை ஒரு தெய்வச்சோலையாகக்க கருதி, திருமணம் நடப்பதற்கு மூன்று நாளைக்கு முன்பே தெய்வத்தை வழிபட்டு, ஐந்து வாழ்வரசியார் (சுமங்கிலிகள்) பந்தலின் ஒரு காலுக்குப் பால் முதலியன பெய்து திருமஞ்சனம் ஆட்டி, அந்தக் காலை மட்டும் பந்திலின் வடகிழக்கு முனையில் நடுவர். பிறகே மற்றக் கால்களைப் பந்தற்காரர் நட்டு, மணப்பந்தர் அமைப்பர். ஆயிரங் காலத்துப் பயிரான திருமணத்திற்கு இது அடிகோலுவது ஆதலின் கால் நடும் குழியில் நவமணிகள் இடுவர் நவதான்யமும் பெய்வர்.


3. மண மணை

பந்தலின் மேற்கில் இரண்டு கால்களுக்கும் இடையே மணமக்கள் கிழக்கு நோக்கி அமர்வதற்கு, ஒரு நீள மண மனையை இடுவர். அம்மணையின் அடியில் சிறிது நெல் அல்லது அரிசி பெய்து வைப்பர்.


4. நிறை குடங்கள்

மணமக்களுக்கு நேர் எதிரே பந்தலின் கிழக்கில் இரண்டு கால்களுக்கும் இடையே, தரையில் மணல் அணைத்து அதன் மீது அரண்டு புது மண் குடங்கள் வைத்து மஞ்சளும், குங்குமமும் இட்டு மங்கள வடிவாக்குவர்.


5. குட விளக்கு

பந்தலின் தென்கிழக்கு காலையொட்டி ஒரு மர உரலின் மீது ஒரு சிறு மண் குடத்தில் நீர் நிரப்பிக், அதன் பேரில் அகன்ற அகலில் விளக்கேற்றி வைப்பர். இவ்விளக்கு அணையாது இருக்க மறைப்பிற்காக அகலைச் சுற்றி இலை கட்டுவர். மர உரல் இடுவது குடம் அசையாதிருக்க, கல் உரலாயின் உறுத்தப்ப்டுக் குடம் உடையக் கூடும் என்வே மரத்தால் ஆன உரல் உசிதம்.


6. முளைத்த கூலங்கள் (நவதானியம்)

ஒன்பது மண் கலசங்களில், முனைந்த நவதானியங்களை நிரப்பி நிறை குடங்களுக்கு முன்பக்கம் விரிசையாக வைப்பர். பந்தற்கால் நடும் அனைறைக்கே நவதானியங்களை நனைத்து முளைக்கப் போடுவர்.


7. அம்மியும் குழவியும்

பந்திலின் வகிழக்குக் காலையொட்டி, ஒர் அம்மியும் குழவியும் அமைத்து அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் இட்டுப் பொட்டு வைப்பர்.

8. கைவிளக்கு கிளை விளக்கு

நிறை குடங்களின் முன்பு, ஒரு தட்டில் கைவிளக்கு ஏற்றி வைப்பர். இவ்விளக்கைக் காமாட்சியம்மன் விளக்கு என்று சொல்வதும் உண்டு. குடங்களுக்குப் பின்புறம் கிளை விளக்கு அழகு செய்யும்.


9. அம்மையப்பர்

நிறை குடங்களுக்கு முன்பு முளைக் கலசங்களையொட்டி, தலை வாழை இரண்டு இட்டு பச்சரிசி பெய்து, அதன் மீது இரு செம்புகளை அமைப்பர் மணம் செய்து வைக்கும் ஆசிரியர் (இவரைத் தான் புரோகிதம், புரோகிதர் என்கின்றோம் ஆரியத் திருமண முறைகளில்‍‍ தமிழர் முறைகளில் ஆசிரியர்). செம்புகளில் முக்கால் பங்கு நீர்விட்டு மாவிலை செருகி நாரோடு இருக்கும் தேங்காய் ஒவ்வொன்றை அவற்றின் மீது நிறுத்துவர். தேங்காய்களுக்கும், செம்புகளுக்கும் மஞ்சள் இட்டுக் குங்குமம் வைப்பர். தேங்காய் மீது வெள்ளை, சிவப்பு அல்லது பச்சைத் துணித் துண்டுகளையும் பீச்சர்த்தையும், மாலைகளாக இடுவர். வெற்றிலை, பாக்கு, பழம் மஞ்சள் சொம்பு இவற்றை முன்னே படைப்பர்.

இவ்வாறு அம்மையப்பர் வடிவங்களை அமைப்பதற்கு முன், வாழை இலையின் வட நுனியில் மஞ்சளில் ஒரு பிள்ளையார் பிடித்து வைப்பார். அதற்குக் குங்குமம் இட்டு மலரிட்டுப் பழம் படைப்பார்.வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று பெரியாரால் பெயர் சூட்டப்பெற்ற திருமணம் ப்ற்றி பெரியார் தந்த விளக்கங்கள்

மனிதன் ஒருவனே இருந்து காரியம் ஆற்றுவது என்பது இயலாத காரியம் ஆகும். ஆகவே வாழ்வுக்கு ஒரு துணை வேண்டியுள்ளது. அந்த துணையைத் தேடிக்கொள்வது தான் திருமணம். வெறும் துணை என்று மட்டும் வைத்தால் பலன் தராது. துணை என்றால் நட்பு முறையிலிருக்க வேண்டும். நண்பனுக்கு அடியவன் என்ற நிலையில் இருக்க வேண்டும். உண்மையான நட்புக்கு இருவரும் ஒன்றாக வேண்டும். பேதம் ஏற்படுமேயானால் இருவரும் ஒத்துப் போக ஒருவரை யொருவர் முந்த வேண்டும். அப்போதுதான் உண்மையான நட்பு மலரும். அதுதான் உண்மையான துணைவர்களுக்கு இருக்க வேண்டும். துணைவர்கள் என்றால் சம உரிமையுடைய துணைவர்களாக இருக்க வேண்டும்.

 
-.தொடரும்.......தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -3

No comments: