Pages

Wednesday 13 January, 2010

துபாயில் என்ன நடக்கிறது!




திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப நாம் அனைவரும் அந்நிய நாட்டில் வேலை பார்த்துவருவது 50 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய ஒன்றுதான். ஆனால் தற்பொழுது அது சற்று தேக்கமடைந்துள்ளது. அதுவும் இரண்டு மூன்று வருடங்களாக மிகவும் தேக்கமடைந்துள்ளது என்பது நாமறிந்த ஒன்று. அறிஞர் அண்ணா கூறியது போல் நமது முன்னோர்கள் பர்மா, இன்னும் பல நாடுகளில் வெற்றிக்கொடி யேந்தியது போக, தற்பொழுது வெற்றுப் பாத்திரத்தோடு திரிவதென்ன?




இன்றைய சூழ்நிலையில் அதுவும் கணிப்பொறியாளர்களையே இது பாதிப்பதாக அமைந்துள்ளது.  ஏன் இந்த நிலை? எதனால் இந்த நிலை? இதை ஏற்கனவே நாம் பலமுறை அலசியிருக்கின்றோம்? அமெரிக்காவில் ஏற்கனவே ஏற்பட்ட பொருளாதார சரிவைப்பற்றியும் அறிந்திருப்போம். அது என்ன? அதி முக்கியமில்லாத கடன் அதாவது தேவையில்லாத கடன் (sub prime loan-sub prime lending) என்ற முறையில் அக்கடனை திருப்பிச் செலுத்த நிலையில்லாதிருப்பவர்களுக்கும் கடனளிப்பது என்ற கொள்கையை அமெரிக்கர்கள் பின்பற்றியதினால், வந்த விளைவு. அதன் மூலம் வீட்டிற்காக, வீடுகட்டுவதற்காக கடன் பெற்றவர்கள், அதுவும் அதிக வட்டிக்காக கடன் பெற்றவர்கள் அனைவரும் குறுகிய காலத்திலேயே அதனை திருப்பிச் செலுத்த முடியா நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனால் வங்கிகள் மிகப்பெரிய பொருளாதாரச் சரிவை சந்தித்தது. .இதனால் வழக்கமாக அதைச்சராந்த கணிணித் தொழிலாளர்கள்  பாதிப்படைந்தனர். வேலையுமிழந்தனர்.





ஆனால் இதனை அந்நாட்டு அரசு அந்த வங்கிகளுக்கு மீண்டும் கடனளித்து ஒரளவுக்கு நிலைமையை மீட்டெடுத்தது. அதே போன்றதொரு பொருளாதார சிக்கலை துபாய் தற்பொழுது சந்தித்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் பணிபுரியும் இந்தியர் பலர் வேலையிழந்து வருகின்றனர். அமெரிக்கா கடன் கொடுத்து கெட்டது! என்றால் துபாய் கடன் வாங்கியே கெட்டது!. துபாய் வேர்ல்டு என்ற வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் எத்தனையோ பில்லியன் டாலர் பணம் எனக் கணக்கிடப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு மூன்று இலட்சத்து எழுபதினாயிரம் கோடி ரூபாய். அந்தளவுக்கு கடன் பெற்றுள்ளதாக  கூறப்படுகிறது. பலருக்கு பணம் கொடுக்கின்ற இடமாக விளங்கிய துபாய் இப்பொழுது பணம் வாங்குகின்ற இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அரசே இந்த சுமையை ஏற்று அமெரிக்கா போன்று சீர் செய்ய வேண்டும் என்ற குரலும் வலுக்கின்றது. இதனை துபாய் அரசு சீரமைக்குமோ? இல்லை அனைவரையும் வெளியேற்றுமோ?




எத்தனை வெளிநாடுகளில் வேலை செய்தாலும், அதுவெல்லாம் நிரந்தரமல்ல என்ற சூழ்நிலை இப்போது உருவாகிவிட்டது. வெளிநாடுகளையே நம்பியிருப்பது தவறு என்றக் கொள்கையும், அச்சிறப்புகளையும் வாய்ப்புகளையும் தாயகத்திலேயே ஏற்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தமும் இப்பொழுது முன்னிருத்தப்படுகினறது. அப்படி அந்நிய நாட்டை நம்பியிருந்தால் என்றைக்காவது இந்த நிலையை எட்டித்தான் ஆகவேண்டும் என்ற உண்மையை இச்செயல்கள் உணர்த்த ஆரம்பித்துள்ளது. 

அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள், அதற்கடுத்த்தாக கேரள மக்களும் பணிபுரிந்து வருகின்றனர். மொத்தத்தில்  துபாயில் கணிசமான அளவு இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் வேலையிழப்பை சந்தித்துவருகின்றனர். இதையெல்லாம் மும்பையிலிருந்து வெளியிடப்படும் தமிழ் லெமுரியா என்ற பத்திரிகையில், வெளியிடப்பட்டுள்ளது. திரு. சேதுராமன் அவர்களால் ""துபாயில் என்ன நடக்கிறது"" என்பதை விரிவாக எழுதியிருப்பதிலிருந்து கூறப்பட்டத் தகவல்தான் இவைகள்..




-இன்று ஒரு தகவல்- பேராசிரியர் சுப.வீ

No comments: