Pages

Thursday, 14 January, 2010

டார்வின் 200 வது பிறந்த நாள்....
மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' அதாவது survival of the fittest போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்த அவர்.
தனது முடிவுகளை இரு பெரும் நூல்களாக அவர் வெளியிட்டார். அவர் எழுதிய இரு நூல்கள்...... 
‘‘இயற்கைத் தேர்வின் வழியே உயிரினங்களின் தோற்றம்: அல்லது, வாழ்க்கைக்கான போராட்டத்தில் சிறப்பான இனங்கள் பாதுகாக்கப்படுவது’’ (The Origin of Species by Means of Natural Selection: Or, the Preservation of Favored Races in the Struggle for Life)
"The Descent of Man." மனிதனின் பரிணாம வரிசை...... 2009 ஆண்டுடன்  அவர் பிறந்து இருநூறு வருடங்கள் ஆகின்றது. டார்வின் பிறந்தது பிப்ரவரி 12, 1809 ஆண்டு. (மறைவு  ஏப்ரல் 19, 1882). (Charles Robert Darwin). இதை போற்றத் தகும் விதத்தில் டார்வின் பற்றி செய்தி கோவையை பிபிசி  வெளியிட்டுள்ளது.


இவரது இந்த பரிணாம வளர்ச்சித்தத்துவங்களின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சூழலியல்துறைப் பேராசிரியர் பார்த்தசாரதி தமிழோசைக்கு வழங்கிய செய்திக்கோவையின்படி......


அந்தக் காலத்தில் முதன் முறையாக இதை டார்வின் தெரிவித்தபோது,  மக்களுக்கு இதை புரிந்து கொள்வது கடினமாக இருந்தபோதிலும், முதன் முறையாக இயற்கைச்சூழலில் உயிரினங்கள், தங்களுடைய (adaptation) தகுதியான சூழலில் உயிரனங்கள் தங்களை உருவாக்கி கொண்டு வந்தது என்பதை ஆதாரப்பூர்வமாக பலக் கருத்துக்களை  சொன்னது, அந்தக் காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த்தாக அமைந்தது. பலருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. உயிரினத்திற்கு மட்டுமில்லாமல் பரிணாமக் கொள்கையையும் பலரும் புரிந்து கொள்ளுதலுக்கு மிகவும் உகந்ததாகவும், அறிவியலுக்கு பயனுள்ளதாகவும் அமைந்தது.


பிற தியரிகள், குரூப் செலக்சன், செக்சுவல் செலக்சன்...மென்டலிசம்..... தங்கள் கருத்து என்ன? விஞ்ஞானிகள் சமூகத்திலே இன்னும் விவாதிக்கப்படுகின்றனவே?.


இன்னமும் முழுமையாக  அதை மறுக்கக்கூடிய ஆதாரங்களை கிடைக்காத பட்சத்தில் இவரின் கொள்கைகளே ஏற்புடையதாக இருக்கின்றது. அதற்கு பின்வந்த நியோ டார்வினசம் (Neo Darwinism, Lamarckism) லாமார்க்கிசம் கொள்கைகள் வந்த போதிலும், இவருடைய கொள்கைகள் மறுப்பனவாக இல்லை. இதன் (டார்வினிசம்) முக்கியத்துவம் பல்வேறு ஆதாரங்களை கொண்டுள்ளது. அதனால் ஏற்புடையதாகியிருக்கிறது.


மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன், பரிணாம வளர்ச்சி தத்ததுவங்கள், பிற மதங்கள், கிருத்துவம் மதம் அதைச்சார்ந்த பைபிளில்  கொண்டுள்ளதன் படி அனைத்தும் கடவுளால் உருவாக்கப்பட்டது என்ற கோட்பாடுகள் டார்வின் கொள்கையை மறுப்பதாக உள்ளதே?, மனிதனை மீறிய ஒரு அறிவு சார்ந்த இன்டலிஜன்ஸ் டிசைன் (Intelligence Design) உள்ளது என்பதை அமெரிக்காவில் உள்ளவர்கள், மற்றும் மதச்சிந்தனையாளர்களால் மதசார்புள்ளவர்களால் வைக்கப்படுகின்றதே?
அதை எடுத்துக்கொள்ளும் விதத்தை பொருத்து இருக்கிறது. மதம் என்பது ஒரு பகுதி. இயற்கை என்பதை சக்தியாக எடுத்துக்கொள்ளும் பொழுது.மதம் என்பது ஒரு பகுதி. மதம் என்பது (Artificial Term) இயற்கை எடுத்துக்கொள்ளும் போது. something above has governs......அதற்கு இயற்கை என்று பெயர் கொடுக்கும்பொழுது. அனைவருக்கும் ஏற்புடயதாக இருக்கும்.


அப்படியென்றால் இன்டலிஜன்ஸ் டிசைன் எனற வாதத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
 வாதம் என்பது அதை எடுத்துக்கொள்ளும் நிலையை பொருத்து அது எவ்வளவு ஏற்புடையதாக இருக்கிறதோ அதை பொருத்து தான் வாதம். நமக்கு மீறிய சக்தி இருக்கிறது என்பது பல கால கட்டங்களில் மனிதன் ஏற்றுக் கொண்டிருக்கிறான். சிலர் இயற்கை என்பார்கள். சிலர் மதம் என்பார்கள். அந்த சக்திக்கு பல்வேறு உருவமோ? வடிவமோ கொடுத்து விவாதிப்பதை பொருத்து தான் இதை எடுத்து கொள்ளவேண்டும், என்று பார்த்தசாரதி கூறுகிறார்.


 http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/02/090217_darwin200.shtml
-நன்றி பிபிசி தமிழோசை


No comments: